Just In
- 6 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 7 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 8 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 10 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Movies
பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சின்ன வீடாக மாறிய இன்னோவா... சொகுசு வீட்டையே மிஞ்சும் வசதிகள்... இந்த கார்ல இத்தனை வசதிகளா?
இன்னோவா கிரிஸ்டா காரொன்று மினி சொகுசு வீடாக மாறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டொயோட்டா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார்களில் இன்னோவாவும் ஒன்று. இது பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற கார் ஆகும். குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், அதிக இட வசதி மற்றும் இருக்கைகளை இக்கார் கொண்டிருக்கின்றது. எனவேதான் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எம்பிவி டொயோட்டா இன்னோவா இருக்கின்றது.

இக்காரையே இளைஞர் ஒருவர் மோட்டார் ஹோம்-ஆக மாற்றியிருக்கின்றார். அதாவது டொயோட்டா இன்னாவா காரை சின்ன வீடாக மாற்றியிருக்கின்றார். டிரக்கிங் மற்றும் உல்லாச பயண பிரியர்களைக் கவரும் வகையில் வெளிநாடுகள் சிலவற்றில் 'மோட்டார் ஹோம்கள்' விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவில் இதுபோன்ற வாகனங்களைப் பார்ப்பது மிகவும் கடினம்.

எனவேதான் சிலர் தங்களது பரந்த உருவமுடைய வாகனங்களையே மோட்டார் ஹோமாக மாற்றிக் கொள்கின்றனர். அந்தவகையிலேயே, டொயோட்டா இன்னோவா கார் மாற்றப்பட்டிருக்கின்றது. முற்றிலுமாக மாற்றப்பட்டிருக்கும் இந்த கார், படுக்கையறை, கழிப்பறை மற்றும் சமையலறை உள்ளிட்டவற்றைக் கொண்டிருக்கின்றது. இதற்கேற்ப மாற்றங்களையே இன்னோவாவின் இன்டீரியர் பெற்றிருக்கின்றது.

இந்த கார் கேரளாவைச் சேர்ந்த அப்துக்கா எனும் இளைஞருக்கு சொந்தமானதாகும். இவர், ஹிமாச்சல பிரதேசம், மணாலியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார். பயணத்தின் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர், தன்னுடைய குடும்பத்துடன் தங்கு தடையில்லா சுற்றுலாப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே டொயோட்டா இன்னோவா காரை மோட்டார் ஹோமாக மாற்றியிருக்கின்றார்.

பல்வேறு மாற்றங்களைச் செய்த பின்னரும் இக்கார் ஐந்து பேர் வரை செல்லும் இருக்கையை அமைப்பைத் தக்க வைத்திருக்கின்றது. ஆம், படுக்கையமைப்பு வசதி மற்றும் கழிவறை அமைப்பு ஆகியவை காரின் பின் பக்கத்திலேயே நிறுவப்பட்டிருக்கின்றன. இதன் சமையலறை மட்டும் வெளியே இழுத்து வைத்து பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது, ரேக் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் சமையலறை நிறுவப்பட்டிருக்கின்றது. இதிலேயே கேஸ் அடுப்பு மற்றும் சிறிய கேஸை வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், குழாயும் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதைக் கொண்டு பாத்திரங்களை சுத்தம் செய்தல் மற்றும் சமையலுக்கு தேவையான நீரைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்காக 40 லிட்டர் வரை நீரைச் சேமிக்கும் தொட்டி இன்னோவா காரினுள் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த அம்சங்கள் அனைத்துமே சிறு சிறு பெட்டிகளைப் போன்று ரேக்க வடிவத்தில் காருக்குள் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆகையால், அவற்றை தனியாக வெளியே எடுத்தும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அந்தவகையில், இதன் கழிவறையையும் வெளியே எடுத்து வைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது காருக்குள்ளேயே வைத்து பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். வெளியே வைத்து பயன்படுத்தும்போது, மறைப்பிற்கு உதவும் விதமாக டெண்ட் உள்ளது.

இதேபோன்று, காருக்கான தேவையான மின்சாரத்தை வழங்கும் விதமாக சிறிய இன்வெர்டர் காருக்குள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் செல்போன் சார்ஜ் செய்ய மற்றும் காருக்குள் இருக்கும் சிறிய பேனை இயக்கிக் கொள்ள முடியும். இந்த அனைத்து மாற்றங்களையும் அப்துக்கா வெறும் 15 நாட்களுக்கு முன்னதாகதான் செய்திருக்கின்றார்.
ஆகையால், இன்னும் அக்காரில் அவர், அவருடைய குடும்பத்துடன் பயணிக்கவில்லை என்பது தெரிகின்றது. அதேசமயம், மாற்றம் செய்யப்பட்ட அக்காரை அவர் ஏற்கனவே பரிசோதனைச் செய்துவிட்டதாகவும், விரைவில் அக்காரிலேயே அவர் பயணிக்க இருப்பதாகவும் கூறியிருக்கின்றார். முதலில் கேரளாவையும், பின்னர் நாட்டின் அனைத்து பகுதிகளையும் வலம் வர அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்தியாவில் இதுபோன்று காரை வாகனமாக மாற்றும் நிகழ்வு ஏற்கனவே நடந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், தமிழகத்தில் ஆட்டோவையே இளைஞர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பைப் போன்று கட்டமைத்திருந்தார். அதில், பல்வேறு வசதிகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.