குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா தற்சமயம் இன்னோவா க்ரிஸ்ட்டா சிஎன்ஜி வேரியண்ட்டின் தயாரிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த கார் சோதனை ஓட்டத்தின் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் விரைவில் அறிமுகமாகவுள்ள இன்னோவா எம்பிவி மாடலின் இந்த புதிய வேரியண்ட் குறித்து ரஷ்லேன் செய்திதளம் வெளியிட்டுள்ள கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...

கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்த புதிய மாசு உமிழ்வு விதி இந்திய சந்தையில் டீசல் கார்கள் சந்தைப்படுத்துதலில் மிக பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இந்த புதிய விதி எரிபொருள் என்ஜின்கள் வெளியிடும் மாசுவை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...

ஆனால் இந்த விதிக்கான வரைமுறைகள் டீசல் என்ஜின்களை கடுமையாக பாதிக்கின்றன. இதனால் விற்பனையில் இருந்த டீசல் என்ஜின்கள் சில கூடுதலான கருவிகளுடன் மறு வடிவமைக்கப்பட வேண்டி இருந்தது. இந்த செயல்முறையினால் டீசல் கார்களின் விலையை அதிகரிக்க தயாரிப்பு நிறுவனங்கள் நிர்பந்திக்கப்பட்டன.

குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...

இதுவே மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ் போன்ற இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது பெரும்பான்மையான டீசல் கார்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தி கொள்ள காரணமாகும். இதனால் பிஎஸ்6 பெட்ரோல் கார்கள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...

இருப்பினும் ஒரு சில வாடிக்கையாளர்கள் டீசல் கார்களை தான் வாங்க விருப்பப்படுகின்றனர். ஏனென்றால் டீசல் கார்கள் அதிக டார்க் திறனையும், குறைவான எரிபொருள் செலவையும் வழங்குகின்றன. இதில் குறைவான எரிபொருள் செலவை கருத்தில் எடுத்து கொண்ட தயாரிப்பு நிறுவனங்கள் டீசல் என்ஜினிற்கு மாற்றாக சிஎன்ஜி என்ஜின் தேர்வை தங்களது விற்பனை மாடல்களில் வழங்க திட்டமிட்டுள்ளன.

குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...

இவை டீசல் என்ஜின்களை போல் எந்தவொரு விலை உயர்வுக்கும் நிர்பந்திக்காமல் எரிபொருள் திறனை அவற்றிற்கு இணையாக வழங்குகின்றன. இந்த திட்டத்தை கையில் எடுத்த நிறுவனங்களுள் ஒன்று தான் டொயோட்டா. இந்நிறுவனம் வழக்கமான 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜினின் அடிப்படையிலான சிஎன்ஜி என்ஜின் வேரியண்ட்டுடன் தனது இன்னோவா மாடலை விற்பனைக்கு கொண்டுவர தீவிரமாக பணியாற்றி வருகிறது.

குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...

தற்போது சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ள இந்த இன்னோவா சிஎன்ஜி காரின் என்ஜினை பற்றிய விபரங்கள் எதுவும் இப்போதைக்கு வெளிவராவிட்டாலும், இந்த என்ஜின் சிஎன்ஜி-ல் இயங்கும்போது சற்று குறைவான ஆற்றலை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...

தற்சமயம் விற்பனையில் உள்ள இன்னோவா எம்பிவி மாடலில் வழங்கப்பட்டு வரும் 2.7 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 166 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...

இதுமட்டுமின்றி 2.4 லிட்டர் பிஎஸ்6 டீசல் என்ஜின் தேர்விலும் டொயோட்டா இன்னோவா கார் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் பிஎஸ்6 டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்குகிறது. இன்னோவாவின் டீசல் வேரியண்ட்களின் விலை அதே ட்ரிம்-ல் பெட்ரோல் வேரியண்ட்டை காட்டிலும் ரூ.2 லட்சம் வரையில் அதிகமாக உள்ளது.

குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...

இதனால் டீசல் என்ஜின் உடன் இன்னோவா காரை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் காரை பெட்ரோல் என்ஜின் உடனே வாங்கிவிடுவோமா என்ற குழப்பத்திற்கு ஆளாகுகின்றனர். இதனை சரி செய்யவே புதிய சிஎன்ஜி என்ஜின் தேர்வு கொண்டுவரப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Innova CNG petrol 2.7 G variant spied testing ahead of launch
Story first published: Saturday, July 11, 2020, 2:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X