முன்பணம், இன்ஸ்யூரன்ஸ், இஎம்ஐ பிரச்னையில்லை... புதிய டொயோட்டா கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்!

முதலீடு அதிகம் செய்யாமல் புதிய டொயோட்டா கார்களை எளிதாக வாங்குவதற்கான, நீண்ட கால வாடகை திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் குறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய டொயோட்டா கார்களுக்கு நீண்ட கால வாடகை திட்டம் அறிமுகம்!

கொரோனா பாதிப்பு காரணமாக, கார் விற்பனையில் சுணக்கம் காணப்படுகிறது. வருவாய் இழப்பு, பொருளாதார நெருக்கடிகளை மக்கள் சந்தித்து வருவதால், கார் விற்பனை கடந்த சில மாதங்களாகவே மந்த நிலையில் உள்ளது.

புதிய டொயோட்டா கார்களுக்கு நீண்ட கால வாடகை திட்டம் அறிமுகம்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் பொருளாதார நெருக்கடிகளை தாக்குப்பிடித்து புதிய கார்களை வாங்குவதற்கான சிறப்பு கடன் திட்டங்கள் மற்றும் குத்தகை அடிப்படையிலான வாடகைக்கு எடுக்கும் திட்டங்களை கார் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.

புதிய டொயோட்டா கார்களுக்கு நீண்ட கால வாடகை திட்டம் அறிமுகம்!

அந்த வகையில், டொயோட்டா கார் நிறுவனமும் தனது கார்களை வாடிக்கையாளர்கள் நீண்ட கால அடிப்படையில் வாடகைக்கு எடுத்துக் கொள்வதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

புதிய டொயோட்டா கார்களுக்கு நீண்ட கால வாடகை திட்டம் அறிமுகம்!

முதல்கட்டமாக பெங்களூர், மும்பை மற்றும் டெல்லி உள்ளடக்கிய வட மத்திய பிராந்தியப் பகுதிகளில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அடுத்த ஓர் ஆண்டிற்குள் மேலும் 10 நகரங்களில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

புதிய டொயோட்டா கார்களுக்கு நீண்ட கால வாடகை திட்டம் அறிமுகம்!

டொயோட்டா க்ளான்ஸா, இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் மற்றும் விரைவில் வரும் புதிய அர்பன் க்ரூஸர் ஆகிய மாடல்களுக்கு இந்த நீண்ட கால வாடகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய டொயோட்டா கார்களுக்கு நீண்ட கால வாடகை திட்டம் அறிமுகம்!

இந்த நீண்ட கால மாதாந்திர வாடகை திட்டம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் கால அளவு கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி புதிய டொயோட்டா கார்களை வாங்கி பயன்படுத்தலாம்.

புதிய டொயோட்டா கார்களுக்கு நீண்ட கால வாடகை திட்டம் அறிமுகம்!

வாகனத்திற்கான காப்பீடு, பராமரிப்பு செலவு, சாலை அவசர உதவி உள்ளிட்ட அனைத்தும் இந்த மாதாந்திர வாடகை கட்டணத்தில் அடங்கிவிடும். தனியாக எதுவும் செலுத்த தேவையில்லை. வாகனத்தை திரும்ப ஒப்படைக்கும் வரை இந்த மாதாந்திர கட்டணத்தை செலுத்தி வந்தால் போதுமானது.

புதிய டொயோட்டா கார்களுக்கு நீண்ட கால வாடகை திட்டம் அறிமுகம்!

இதுதவிர்த்து, 24 மாதங்கள் முதல் 48 மாதங்கள் வரையிலான வாடகை த் திட்டங்களும் உள்ளதாக டொயோட்டா அறிவித்துள்ளது. டொயோட்டா நிறுவனத்தின் பைனான்ஸ் நிறுவனம், ஏஎல்டி ஆட்டோமோட்டிவ் இந்தியா மற்றும் எஸ்எம்ஏஎஸ் ஆட்டோ லீஸிங் இந்தியா நிறுவனங்களுடன் இணைந்து இந்த சிறப்பு திட்டத்தை டொயோட்டா அறிமுகப்படுத்தி உள்ளது.

புதிய டொயோட்டா கார்களுக்கு நீண்ட கால வாடகை திட்டம் அறிமுகம்!

புதிய கார் வாங்குவதற்கு அதிக முன்பணம் செலுத்தி முதலீடு செய்ய விரும்பாதோருக்கு சிறப்பான திட்டமாக இருக்கும். பராமரிப்பு செலவு, காப்பீடு உள்ளிட்ட செலவுகளும் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், புதிய காரை சொந்தமாக வாங்கி பயன்படுத்துவது போன்ற அனுபவத்தை இந்த திட்டம் மூலமாக பெற முடியும்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota has introduced car lease and subscription program in India.
Story first published: Wednesday, August 19, 2020, 5:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X