டொயோட்டா அர்பன் க்ரூஸர் இப்போது புக்கிங் செய்தால் 2 வருஷத்துக்கு கவலை வேண்டாம்!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியை இப்போதே முன் முன்பதிவு செய்பவர்களுக்கு நன்றி நவிலும் விதமாக சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு எரிபொருள் செலவை தவிர்த்து வேறு எந்த செலவும் வாடிக்கையாளர்களுக்கு இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் செய்தால் ஸ்பெஷல் ஆஃபர் காத்திருக்கு!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலை டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. விலை அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், ஏற்கனவே புக்கிங் ஏற்கப்பட்டு வருகிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் செய்தால் ஸ்பெஷல் ஆஃபர் காத்திருக்கு!

இந்த நிலையில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியை விற்பனைக்கு வருவதற்கு முன்னரே புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் செய்தால் ஸ்பெஷல் ஆஃபர் காத்திருக்கு!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் 'Respect Package' என்ற பெயரில் இந்த புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியை இப்போதே முன்பதிவு செய்பவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கான இலவச பராமரிப்புத் திட்டத்தையும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் செய்தால் ஸ்பெஷல் ஆஃபர் காத்திருக்கு!

இதுகுறித்து டொயோட்டா மூத்த துணைத் தலைவர் நவீன் சோனி கூறுகையில்,"அர்பன் க்ரூஸர் எஸ்யூவிக்கு மிகச் சிறப்பான வரவேற்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்துள்ளது. டொயோட்டா குடும்பத்தில் இணைய இருக்கும் அர்பன் க்ரூஸர் வாடிக்கையாளர்களை கவுரப்படுத்தவும், நன்றி நவிலும் வகையில் இந்த ரெஸ்பெக்ட் பேக்கேஜ் திட்டத்தை வழங்குகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் செய்தால் ஸ்பெஷல் ஆஃபர் காத்திருக்கு!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவில் சிறிய மாற்றங்களுடன் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி வர இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் செய்தால் ஸ்பெஷல் ஆஃபர் காத்திருக்கு!

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் இடம்பெறுகிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் செய்தால் ஸ்பெஷல் ஆஃபர் காத்திருக்கு!

இந்த கார் 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், இரட்டை வண்ண பாடி கலர் ஆப்ஷன்கள், போதுமான பாதுகாப்பு வசதிகளுடன் வர இருக்கிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் செய்தால் ஸ்பெஷல் ஆஃபர் காத்திருக்கு!

ரூ.11,000 முன்பணத்துடன் ஆன்லைன் அல்லது டீலர்கள் மூலமாக டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota has announced the launch of a special ‘Respect Package’ for customers who have pre-booked the Urban Cruiser SUV in India.
Story first published: Friday, September 11, 2020, 11:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X