லேண்ட் க்ரூஸர் பிராண்ட்டை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரும் டொயோட்டா...

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா லேண்ட் க்ரூஸர் மாடலின் அப்டேட் வெர்சனின் தயாரிப்பில் ஈடுப்பட்டு வருவதாகவும், இந்த காரை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

லேண்ட் க்ரூஸர் பிராண்ட்டை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரும் டொயோட்டா...

டொயோட்டா லேண்ட் க்ரூஸர், இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் எஸ்யூவி ரக மாடல்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. சந்தையில் இதன் மலிவான விலை கொண்ட லேண்ட் க்ரூஸர் ப்ராடோ மற்றும் முதன்மையான லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி என்ற இரு வேரியண்ட்களும் விற்பனையில் இருந்தன.

லேண்ட் க்ரூஸர் பிராண்ட்டை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரும் டொயோட்டா...

ஆனால் புதிய மாசு உமிழ்வு விதியினால் இந்த டொயோட்டா மாடல் இந்திய சந்தையில் விடை பெற்று சென்றது. இந்த நிலையில் உலகளாவிய சந்தைக்காக இதன் அப்டேட் வெர்சனின் தயாரிப்பு பணிகளில் டொயோட்டா நிறுவனம் தற்சமயம் ஈடுப்பட்டு வருகிறது.

லேண்ட் க்ரூஸர் பிராண்ட்டை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரும் டொயோட்டா...

மேலும் இந்த எஸ்யூவி கார் மீண்டும் இந்தியாவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளனவாம். இதனை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் விற்பனை & பராமரிப்பு பிரிவின் மூத்த துணை இயக்குனர் நவீன் சோனி உறுதிப்படுத்தியுள்ளார்.

லேண்ட் க்ரூஸர் பிராண்ட்டை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரும் டொயோட்டா...

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் இந்தியாவிற்கு வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நாங்கள் அந்த தயாரிப்பை விட்டுவிடவில்லை, நிச்சயமாக ஏதேனும் ஒரு வடிவம், தோற்றம், அளவு ஆகியவற்றில் அந்த தயாரிப்பு மீண்டும் வருவதை நீங்கள் காண்பீர்கள் என்றார்.

லேண்ட் க்ரூஸர் பிராண்ட்டை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரும் டொயோட்டா...

அதிக ஆஃப்-ரோடு திறன் உடன் தயாரிக்கப்படும் லேண்ட் க்ரூஸர் பாலைவனம், வறண்ட சாலை பயணங்களுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தான் லேண்ட் க்ரூஸருக்கு மிக பெரிய சந்தையாக விளங்குகின்றன.

லேண்ட் க்ரூஸர் பிராண்ட்டை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரும் டொயோட்டா...

தற்சமயம் டொயோட்டா நிறுவனம் 2021 லேண்ட் க்ரூஸர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் தயாரிப்பு பணிகளில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஈடுப்பட்டு வருகிறது. இதனால் ஜப்பானில் மறைப்புகளுடன் இந்த 2021 மாடல் சோதனை ஓட்டங்களிலும் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

லேண்ட் க்ரூஸர் பிராண்ட்டை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரும் டொயோட்டா...

தற்போதைய தலைமுறை லேண்ட் க்ரூஸர் மாடலின் கடைசி எடிசனாக இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் வெளிவரவுள்ளதால் இதில் இறுதி எடிசன் முத்திரை பொருத்தப்படவுள்ளது. சர்வதேச சந்தையில் இந்த 2021 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்த வருட இறுதியில் இருந்து விற்பனையை துவங்கவுள்ளது.

லேண்ட் க்ரூஸர் பிராண்ட்டை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரும் டொயோட்டா...

2021 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் மாடலில் முக்கிய அம்சமாக 4.5 லிட்டர் வி8 என்ஜினிற்கு மாற்றாக புதிய இன்-லைன் 6-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த புதிய என்ஜினிற்கு ஹைப்ரீட் தேர்வையும் டொயோட்டா வழங்கலாம்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Will Bring The Land Cruiser Brand Back To India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X