இரு இருக்கை வசதியுடைய டொயோட்டா மின்சார கார் வெளியீடு... அடேங்கப்பா இதோட விலை இவ்ளோ அதிகமா... நம்பவே முடியல!

மிக மிக அதிக விலையில் சிறியு உருவம் கொண்ட மின்சார காரை டொயோட்டா நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. இக்கார் பற்றிய முக்கிய தகவல்களைக் கீழே காணலாம்.

இரு இருக்கை வசதியுடைய டொயோட்டா மின்சார கார் வெளியீடு... அடேங்கப்பா இதோட விலை இவ்ளோ அதிகமா... நம்பவே முடியல!

இருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய மிக மிக சிறிய மின்சார கார் ஒன்றை பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா வெளியீடு செய்துள்ளது. 'சி பிளஸ் பாட்' (C+pod) என்ற பெயரில் அது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரத்யேகமாக ஜப்பான் நாட்டு சந்தைக்காக மட்டுமே இச்சிறிய மின்சார காரை டொயோட்டா அறிமுகம் செய்திருக்கின்றது.

இரு இருக்கை வசதியுடைய டொயோட்டா மின்சார கார் வெளியீடு... அடேங்கப்பா இதோட விலை இவ்ளோ அதிகமா... நம்பவே முடியல!

அதேசமயம், தனி நபரால் இக்காரை வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏனெனில், கார்பரேட் நிறுவனங்கள், உள்ளூர் அரசு பணியாளர்கள் மற்றும் பிற தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே பயன்படுத்தும் வகையில் டொயோட்டா இதனை களமிறக்கியிருக்கின்றது.

இரு இருக்கை வசதியுடைய டொயோட்டா மின்சார கார் வெளியீடு... அடேங்கப்பா இதோட விலை இவ்ளோ அதிகமா... நம்பவே முடியல!

தனி நபர்களின் பயன்பாட்டிற்கு 2022ம் ஆண்டிலேயே களமிறக்கப்படும் என கூறப்படுகின்றது. ஆகையால், இப்போதைக்கு இந்திய அறிமுகத்திற்கு துளியளவும் வாய்ப்பில்லை என்பது தெளிவாக தெரிகின்றது. மிக சிறிய உருவத்தைக் கொண்டிருக்கும் இந்த கார் 98 இன்ச் நீளத்திலும், 50.8 இன்ச் அகலத்திலும் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இரு இருக்கை வசதியுடைய டொயோட்டா மின்சார கார் வெளியீடு... அடேங்கப்பா இதோட விலை இவ்ளோ அதிகமா... நம்பவே முடியல!

இதுவே இக்காரின் ஒட்டுமொத்த அளவாகும். ஆகையால், இதனைக் கையாள்வது மிக சுலபம். அத்துடன், பார்க் செய்வது மிக நெருக்கமான சாலைகளில்கூட மிக மிக எளிது. இந்த நோக்கத்திற்காகவே இக்காரை டொயோட்டா வடிவமைத்திருக்கின்றது. இக்காரின் லித்தியம்-அயன் பேட்டரிகளே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இரு இருக்கை வசதியுடைய டொயோட்டா மின்சார கார் வெளியீடு... அடேங்கப்பா இதோட விலை இவ்ளோ அதிகமா... நம்பவே முடியல!

அவை காரின் அடிப்பகுதியில் நிறுவப்பட்டிருக்கின்றன. 9.06 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கை இதில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதனை முழுமையாக சார்ஜ் செய்து பயன்படுத்தினால் சுமார் 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். தினிசரி பயன்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு இக்கார் உருவாக்கப்பட்டிருப்பதால் இத்தகைய குறைந்தபட்ச ரேஞ்ஜ் திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்பட்டிருக்கின்றது.

இரு இருக்கை வசதியுடைய டொயோட்டா மின்சார கார் வெளியீடு... அடேங்கப்பா இதோட விலை இவ்ளோ அதிகமா... நம்பவே முடியல!

மேலும், இதில், 12.3 குதிரை திறனை வெளிப்படுத்தக்கூடிய மின்மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது பின் வீலுக்கே ஓடும் திறனை வழங்குகின்றது. மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீ ஆகும். இக்காருக்கு ஜப்பான் நாட்டு யென் மதிப்பில் JPY-1,650,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 11,70,068 ஆகும். இது தோராயமான மதிப்பு மட்டுமே ஆகும்.

இரு இருக்கை வசதியுடைய டொயோட்டா மின்சார கார் வெளியீடு... அடேங்கப்பா இதோட விலை இவ்ளோ அதிகமா... நம்பவே முடியல!

அப்படி என்னங்க இருக்கு இந்த காருக்கு 11 லட்ச ரூபாய் என்ற கேள்வி உங்களுக்கு எழும்பியிருக்கும் என நம்புகின்றோம். பல்வேறு பிரீமியம் வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலயே இத்தகை உச்சபட்ட விலையைய டொயோட்டா நிர்ணயித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கார் இரு வேரியண்டில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதன் ஆரம்பநிலை (கிரேட் -எக்ஸ் - Grade X) தேர்வின் விலை இது ஆகும். உயர்நிலை மாடலான கிரேட் ஜி (Grade G) கூடுதல் விலையுயர்ந்ததாக இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Launches C+Pod Ultra-Compact Electric Car In Japan. Read In Tamil.
Story first published: Monday, December 28, 2020, 18:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X