2021 ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு அட்டகாசமான ஆக்ஸஸரீகளை வழங்கியுள்ள டொயோட்டா...

2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரில் வழங்கப்பட்டுள்ள ஆக்ஸஸரீகள் குறித்த விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு அட்டகாசமான ஆக்ஸஸரீகளை வழங்கியுள்ள டொயோட்டா...

டொயோட்டா நிறுவனம் 2021மை ஃபார்ச்சூனர் மாடலை சமீபத்தில் தான் தாய்லாந்து நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்தது. ஃபார்ச்சூனர் (மைனர் ஃபேஸ்லிஃப்ட்) மற்றும் ஃபார்ச்சூனர் லெஜண்டர் (மேஜர் ஃபேஸ்லிஃப்ட்) என்ற இரு விதமான வடிவங்களில் இந்த 2021 மாடல் அங்கு சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

2021 ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு அட்டகாசமான ஆக்ஸஸரீகளை வழங்கியுள்ள டொயோட்டா...

இதில் ஃபார்ச்சூனர் லெஜண்டர் வேரியண்ட்டில் பெரிய 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த டீசல் என்ஜின் தான் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கும் ஃபார்ச்சூனர் மாடலில் வழங்கப்பட்டிருந்தாலும், இதனை விடவும் இந்த தாய்லாந்து வெர்சன் காரில் கூடுதலான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது.

MOST READ: கொரோனா வைரஸ் பரவாது... மும்பையை கலக்கும் ஆட்டோக்களில் அப்படி ஒரு ஸ்பெஷாலிட்டி... என்னனு தெரியுமா?

2021 ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு அட்டகாசமான ஆக்ஸஸரீகளை வழங்கியுள்ள டொயோட்டா...

இதனால் இந்த 2.8 லிட்டர் டீசல் என்ஜின் ஆனது சற்று அதிகமாக 201 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதனுடன் 148 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 2.4 லிட்டர் இன்-லைன் 4-சிலிண்டர் டீசல் என்ஜினும் வழங்கப்பட்டுள்ளது.

2021 ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு அட்டகாசமான ஆக்ஸஸரீகளை வழங்கியுள்ள டொயோட்டா...

இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷன்களாக 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனும், விலையுயர்ந்த வேரியண்ட்களில் மட்டும் கூடுதல் தேர்வாக ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. காரின் வெளிப்புறத்தை பார்த்தோமேயானால், முன் மற்றும் பின்புறத்தில் ‘பம்பர் அலங்கார கிட்’ என்ற பெயரில் ஸ்கிட் ப்ளேட்கள் பொருத்தப்பட்டுள்ளன.

MOST READ: பென்ஸ் காரை ரோட்டில் நிறுத்தி விட்டு மாட்டு வண்டியில் ஆபீஸ் போன தொழிலதிபர்! எல்லாரும் ஆடிப்போய்டாங்க

2021 ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு அட்டகாசமான ஆக்ஸஸரீகளை வழங்கியுள்ள டொயோட்டா...

பக்கவாட்டுகளில் படிக்கட்டுகள் பெரும்பாலும் டிசைனிற்காகவே வழங்கப்பட்டுள்ளது. கதவுகள், ‘டிஆர்டி ஸ்போர்டிவோ’ டிகால்ஸ் என்ற செட்அப் மூலமாக பொருத்தப்பட்டுள்ளன. க்ரோம் ஈடுப்பாடுகளை பொறுத்தவரையில், டொயோட்டா மோட்டார் தாய்லாந்து நிறுவனம் இந்திய ஃபார்ச்சூனர் மாடலிற்கு வழங்கப்பட்டுள்ளதை போன்று கூடுதல் தேர்வுகளை வழங்கவில்லை.

2021 ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு அட்டகாசமான ஆக்ஸஸரீகளை வழங்கியுள்ள டொயோட்டா...

இதனால் தாய்லாந்து வாடிக்கையாளர்கள் கதவு ஹேண்டில்கள், ஃபாக் விளக்கு ஹௌசிங், டெயில் லேம்ப்கள் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் தான் க்ரோம்கள் இணைப்பு தேர்வை பெற முடியும். இதில் முக்கியமாக கதவுகளின் விளிம்புகளில் பாதுக்காப்பானை நிச்சயம் பெற முடியும். ஏனெனில் பயணிகள் கவனம் சற்று கவனக்குறைவாக இருந்ததாலும் பெரும் விபத்து ஏற்படக்கூடும்.

MOST READ: கெத்தான பாடகரை விலையுயர்ந்த காருடன் கொத்தாக தூக்கிய காவல்துறை... காரணத்தை கேட்டு மிரண்ட ரசிகர்கள்!

2021 ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு அட்டகாசமான ஆக்ஸஸரீகளை வழங்கியுள்ள டொயோட்டா...

காரின் பின்புறத்தில் உள்ள FORTUNER என்ற வார்த்தை டிசைன் இந்நிறுவனத்தின் பிரபலமான மார்க் எஸ்யூவி காரில் இருந்து பெறப்பட்டுள்ளது. காரின் மொத்த தோற்றத்தையும் கூடுதல் முரட்டுத்தனமாக மாற்ற வேண்டுமென்றால், சக்கர அச்சுகளை கருப்பு நிற க்ளாடிங் உடன் பெற முடியும்.

2021 ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு அட்டகாசமான ஆக்ஸஸரீகளை வழங்கியுள்ள டொயோட்டா...

காரில் மற்ற கவனிக்கத்தக்க பாகங்களாக ப்ளைண்ட்-ஸ்பாட் கண்ணாடி நீட்டிப்புகள், வளையாத ஸ்டீல் மஃப்லர் டிப், ஸ்பேர் வீல் கவர், பவர்டு டெயில்கேட் ஓப்பனர் மற்றும் பொருட்களை எந்தவொரு சிக்கலுமின்றி காரின் மேலே ஏற்றுவதற்கு கீறல்-எதிர்ப்பு மென்படலம் உள்ளிட்டவை உள்ளன.

MOST READ: ஜூன் 11ல் இந்தியாவில் அறிமுகமாகும் மூன்றாம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்6 மாடல்...

2021 ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு அட்டகாசமான ஆக்ஸஸரீகளை வழங்கியுள்ள டொயோட்டா...

2021மை டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபார்ச்சூனர் லெஜண்டர் கார்களின் விலை தாய்லாந்தில் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.31.60 லட்சம் மற்றும் ரூ.37.68 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் ஆக்ஸஸரீகளுக்காக மொத்த விலை சற்று அதிகரிக்கலாம்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Motor Thailand has introduced the official accessories catalogue of the new Fortuner
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X