டொயோட்டா கார்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு! இவ்வளவு பணத்தை மிச்சப்படுத்தலாமா?

விற்பனையை இந்த பண்டிகை காலத்தில் அதிகரிக்க டொயோட்டா நிறுவனம் அதன் க்ளான்ஸா, யாரிஸ் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா உள்ளிட்ட கார்களுக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்துள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

டொயோட்டா கார்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு! இவ்வளவு பணத்தை மிச்சப்படுத்தலாமா?

கொரோனா வைரஸினால் ஏற்பட்ட சரிவை வரப்போகும் பண்டிகை காலத்தில் சரிக்கட்ட இந்தியாவில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதன் தயாரிப்புகளுக்கு சலுகைகளையும் தள்ளுபடிகளையும் தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றன.

டொயோட்டா கார்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு! இவ்வளவு பணத்தை மிச்சப்படுத்தலாமா?

இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய கார் வாங்கும் எண்ணம் நீண்ட மாதங்களுக்கு பிறகு தற்போது தான் அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்த வகையில் தற்போது ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா அதன் தயாரிப்புகளுக்கு தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது.

Model Cash Discount Additional Benefits (Exchange Bonus + Corporate Discount)
Glanza (V) Rs15,000 Rs10,000 + Rs5,000
Yaris Rs20,000 Rs20,000 + Rs20,000
Urban Cruiser - -
Innova Crysta Rs15,000 Rs30,000 + Rs20,000
Fortuner - -
Vellfire - -
டொயோட்டா கார்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு! இவ்வளவு பணத்தை மிச்சப்படுத்தலாமா?

க்ளான்ஸா

க்ளான்ஸா, டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் ஒரே ஹேட்ச்பேக் காராகும். அதுமட்டுமில்லாமல் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் மலிவான காராகவும் க்ளான்ஸா விளங்குகிறது.

டொயோட்டா கார்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு! இவ்வளவு பணத்தை மிச்சப்படுத்தலாமா?

மாருதி சுஸுகியின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரான பலேனோவின் ரீபேட்ஜ்டு வெர்சனான க்ளான்ஸாவிற்கு தயாரிப்பு நிறுவனம் ரூ.15,000 மதிப்பிலான பண தள்ளுபடி ரூ.10,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ் போனஸ் மற்றும் ரூ.5,000 கார்பிரேட் தள்ளுபடி என மொத்தம் ரூ.30,000 மதிப்பிலான சலுகைகளை அறிவித்துள்ளது.

டொயோட்டா கார்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு! இவ்வளவு பணத்தை மிச்சப்படுத்தலாமா?

யாரிஸ்

டொயோட்டா யாரிஸ் முதன்முதலாக இந்தியாவில் 2018ல் அறிமுகமானது. ஆனால் இந்த இரண்டு வருடத்தில் மற்ற செடான் கார்களுக்கு இணையான வரவேற்பை இந்த டொயோட்டா கார் பெறுகிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையை மாற்றவே யாரிஸுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டொயோட்டா கார்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு! இவ்வளவு பணத்தை மிச்சப்படுத்தலாமா?

வரும் வாரங்களில் டொயோட்டா யாரிஸ் காரை வாங்குவோர் அதிகப்பட்சமாக ரூ.60,000 வரையிலான சலுகைகளை பெறலாம். இதில் ரூ.20,000 பணம் தள்ளுபடி, ரூ.20,000 எக்ஸ்சேஞ் போனஸ் மற்றும் ரூ.20,000 மதிப்பிலான கார்பிரேட் போனஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன.

டொயோட்டா கார்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு! இவ்வளவு பணத்தை மிச்சப்படுத்தலாமா?

இன்னோவா க்ரிஸ்டா

இன்னோவா க்ரிஸ்டா காரை பற்றி தெரியாதவர்களே இருக்க மாட்டீர்கள் என்று தான் நினைக்கிறேன். ஏனெனில் பயண சவுகரியம், உள்ளே அதிகப்படியான இட வசதி உள்ளிட்டவைகளால் இந்திய சந்தையில் இந்த எம்பிவி கார் மிக பிரபலமானதாக உள்ளது. இன்னோவாவிற்கு ரூ.15,000 மதிப்பிலான பணம் தள்ளுபடி, ரூ.30,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ் போனஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

டொயோட்டா கார்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு! இவ்வளவு பணத்தை மிச்சப்படுத்தலாமா?

இதுமட்டுமின்றி குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் ரூ.20,000 மதிப்பிலான கார்பிரேட் பணம் தள்ளுபடியையும் பெறலாம். இந்த வகையில் பார்த்தோமேயானல், இந்த பண்டிகை காலத்தில் இன்னோவா க்ரிஸ்டாவை வாங்குவோர் அதிகப்பட்சமாக ரூ.65,000 வரையில் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

மற்றப்படி சமீபத்திய அறிமுகமான அர்பன் க்ரூஸர் காம்பெக்ட் எஸ்யூவி, ஃபார்ச்சூனர் மற்றும் வெல்ஃபையர் உள்ளிட்டவற்றுக்கு எந்த சலுகையையும் டொயோட்டா நிறுவனம் அறிவிக்கவில்லை.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota October 2020 Discounts – Glanza, Yaris, Innova Crysta
Story first published: Wednesday, October 21, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X