மாருதி சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்களை பெற டொயோட்டா திட்டம்!

உற்பத்தி செலவீனத்தை குறைத்து கார் விலையை சரியாக நிர்ணயிக்கும் முயற்சியாக, மாருதி சுஸுகி நிறுவனத்தின் வர்த்தக யுக்திகளை பின்பற்ற டொயோட்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மாருதி சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்களை பெற டொயோட்டா திட்டம்!

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா மற்றும் சுஸுகி கார் நிறுவனங்கள் புதிய கார்களை உருவாக்கும் முயற்சிகளில் இணைந்து செயல்படும் விதமாக கூட்டணி அமைத்தன. இரு பிராண்டுகளும் பரஸ்பரம் கார்களை ரீபேட்ஜ் முறையில் மாற்றி விற்பனை செய்யவும் திட்டமிட்டன.

மாருதி சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்களை பெற டொயோட்டா திட்டம்!

இதன் அடிப்படையில், இந்தியாவிலும் சுஸுகி நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் மாருதி நிறுவனமும், டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. மாருதி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு க்ளான்ஸா என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

மாருதி சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்களை பெற டொயோட்டா திட்டம்!

இந்தநிலையில், மாருதி நிறுவனத்தின் வர்த்தக யுக்திகளை பின்பற்றி புதிய கார் மாடல்களை களமிறக்க டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, மாருதி நிறுவனத்தின் சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்களை மிக சரியான விலையில் பெறுவதற்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறது.

மாருதி சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்களை பெற டொயோட்டா திட்டம்!

மாருதி மற்றும் டொயோட்டா கார் நிறுவனங்கள் அறிமுகம் செய்ய இருக்கும் முழுமையான ஹைப்ரிட் கார்களுக்கான முக்கிய உதிரிபாகங்களை மாருதி நிறுவனத்தின் சப்ளையர்களிடம் இருந்தே பெறுவதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத டொயோட்டா அதிகாரிகள் வர்த்தக இதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளனர்.

மாருதி சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்களை பெற டொயோட்டா திட்டம்!

இதனிடையே, கடந்த மாதம் 26ந் தேதி பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர்," மாருதி நிறுவனம் எவ்வாறு இவ்வளவு சரியான விலையில் அதிக அளவில் கார்களை உற்பத்தி செய்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்ள முற்பட்டுள்ளோம்.

மாருதி சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்களை பெற டொயோட்டா திட்டம்!

மேலும், உதிரிபாகங்களை மிகச் சரியான விலையில் மாருதி நிறுவனம் வாங்கி வருகிறது. இதேபோன்று, மாருதி நிறுவனமும் நம்பகத்தன்மையான பெரிய கார்களை உருவாக்குவது குறித்து எங்களின் யுக்திகளை ஆராய்ந்து வருகின்றனர்," என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இந்த செய்தி வெளியாகி இருக்கிறது.

மாருதி சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்களை பெற டொயோட்டா திட்டம்!

மேலும், வரும் 2021 அல்லது 2022ம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கும் மாருதி நிறுவனத்தின் சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்களை பெறுவதற்கான திட்டமும் டொயோட்டா நிறுவனத்திடம் உள்ளதாம்.

மாருதி சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்களை பெற டொயோட்டா திட்டம்!

இதன்மூலமாக, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா விலையை தொடர்ந்து மிக சவாலானதாக நிர்ணயிக்கும் முயற்சியில் டொயோட்டா ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், அடுத்து வரும் ஆண்டுகளில் வர இருக்கும் புதிய டொயோட்டா கார்களின் முக்கிய பாகங்கள் மாருதி சப்ளையர்களிடம் இருந்து பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Livemint

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
According to report, Toyota is evaluating to source car parts from Maruti Suzuki suppliers in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X