டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் இந்தியாவுக்கு பரிசீலனை... வெலவெலத்து நிற்கும் இசுஸு வி க்ராஸ்!

டொயோட்டா ஹைலக்ஸ் உயர்வகை பிக்கப் டிரக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கிற்கு நேரடி போட்டியாக வர இருக்கும் இந்த புதிய மாடல் குறித்த முக்கிய விபரங்களை தொடர்ந்து காணலாம்.

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் இந்தியாவுக்கு பரிசீலனை... வெலவெலத்து நிற்கும் இசுஸு வி க்ராஸ்!

மேலை நாடுகளில் தனி நபர் பயன்பாட்டுக்கான பிரிமீயம் வகை பிக்கப் டிரக் மாடல்கள் வெகு பிரபலம். ஆனால், இந்தியாவில் கட்டுமானத் துறையில் மட்டுமே பிக்கப் டிரக்குகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தனிநபர் பயன்பாட்டு மார்க்கெட்டை குறிவைத்து வந்த சுதேசி பிக்கப் டிரக்குகள் வாடிக்கையாளர்களை கவரவில்லை.

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் இந்தியாவுக்கு பரிசீலனை... வெலவெலத்து நிற்கும் இசுஸு வி க்ராஸ்!

இந்த நிலையில், இசுஸு நிறுவனம் தனது டி மேக்ஸ் பிக்கப் டிரக் அடிப்படையிலான தனி நபர் பயன்பாட்டு வகையிலான வி க்ராஸ் என்ற பிக்கப் டிரக்கை இந்தியாவில் களமிறக்கி புதிய பாதை வகுத்து கொடுத்தது. குறிப்பாக, ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்களை இந்த வி க்ராஸ் பெரிதும் கவர்ந்தது.

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் இந்தியாவுக்கு பரிசீலனை... வெலவெலத்து நிற்கும் இசுஸு வி க்ராஸ்!

இசுஸு வி க்ராஸ் எஸ்யூவிக்கு இருக்கும் வரவேற்பை தொடர்ந்து, தற்போது டொயோட்டா நிறுவனமும் இந்த செக்மென்ட்டில் களமிறங்குவதற்கான திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் இந்தியாவுக்கு பரிசீலனை... வெலவெலத்து நிற்கும் இசுஸு வி க்ராஸ்!

வெளிநாடுகளில் பிரபலமான தனது ஹைலக்ஸ் பிக்கப் டிரக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து டொயோட்டா கார் நிறுவனம் பரிசீலித்து வருவதாக ஆட்டோகார் இந்தியா தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் இந்தியாவுக்கு பரிசீலனை... வெலவெலத்து நிற்கும் இசுஸு வி க்ராஸ்!

இந்தியர்களை பெரிதும் கவர்ந்த இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் கார்கள் உருவாக்கப்பட்ட அதே கட்டமைப்புக் கொள்கையில்தான் ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் இந்தியாவுக்கு பரிசீலனை... வெலவெலத்து நிற்கும் இசுஸு வி க்ராஸ்!

இந்த பிக்கப் டிரக் 5,285 மிமீ நீளமும், 3,085 மிமீ வீல் பேஸ் நீளமும் கொண்டதாக இருக்கிறது. இன்னோவா, ஃபார்ச்சூனர் கார்களைவிட இது அதிக நீளம் கொண்டது. மேலும், 1.5 மீட்டர் நீள, அகலம் கொண்ட பின்புறத்தில் பொருட்களை வைப்பதற்கான பக்கெட் அமைப்பு உள்ளது.

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் இந்தியாவுக்கு பரிசீலனை... வெலவெலத்து நிற்கும் இசுஸு வி க்ராஸ்!

புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் 2.4 லிட்டர் அல்லது 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இது குறைவான எஞ்சின் சுழல் வேகத்தில் அதிக டார்க்கை வழங்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும். அதாவது, 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் 500 என்எம் டார்க்கை வழங்கும் திறன் பெற்றிருக்கும்.

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் இந்தியாவுக்கு பரிசீலனை... வெலவெலத்து நிற்கும் இசுஸு வி க்ராஸ்!

இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களில் பின்புறத்தில் காயில் ஸ்பிரிங்குகளுடன் கூடிய சஸ்பென்ஷன் உள்ளன. ஆனால், இந்த பிக்கப் டிரக்கில் அதிக பாரத்தை தாங்கும் வலிமையுடன் கூடிய லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் அமைப்பு இடம்பெற்றிருப்பது முக்கிய மாற்றமாக கூறலாம்.

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் இந்தியாவுக்கு பரிசீலனை... வெலவெலத்து நிற்கும் இசுஸு வி க்ராஸ்!

இன்னோவா, ஃபார்ச்சூனர் கார்களில் கொடுக்கப்படும் பல பாகங்களை இந்த பிக்கப் டிரக் பங்கிட்டுக் கொள்ளும் என்பதால், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் இடையிலான விலைப்பட்டியலில் எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் இந்தியாவுக்கு பரிசீலனை... வெலவெலத்து நிற்கும் இசுஸு வி க்ராஸ்!

இசுஸு நிறுவனத்தைவிட இந்தியர்கள் மத்தியில் அதிக நம்பகத்தன்மையை டொயோட்டா பெற்றிருப்பதும், வலுவான சர்வீஸ் நெட்வொர்க் உள்ளிட்டவை டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கின் மார்க்கெட்டிற்கு வலு சேர்க்கும். எனவே, இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கிற்கு கடும் சவாலாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
According to the media report, Toyota is planning to bring Hilux pickup truck to India.
Story first published: Tuesday, August 18, 2020, 10:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X