ஆஹா, ஓஹோ எனும் வசதிகளுடன் டொயோட்டாவின் தானியங்கி வாகனம்... அப்படி என்னங்க அதுல இருக்கு!

ஆஹா... ஒஹோ... என்று கூறுமளவிற்கு அதிக சிறப்பு வசதிகளுடன் டொயோட்டாவின் தானியங்கி வாகனம் ஒன்று உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஆஹா, ஓஹோ எனும் வசதிகளுடன் டொயோட்டாவின் தானியங்கி வாகனம்... அப்படி என்னங்க அதுல இருக்கு!

வர்த்தகம் மற்றும் டெலிவரி ஆகிய பணிகளுக்கு பயன்படக் கூடிய வாகனங்களை தானியங்கி வசதியுடன் உருவாக்கும் முயற்சியில் டொயோட்டா நிறுவனம் களமிறங்கியுள்ளது. கடந்த சில வருடங்களாகவே இப்பணியில் டொயோட்டா நிறுவனம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. இதனடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஓட்டுநர் தேவைப்படா தானியங்கி கார் பற்றிய தகவலே தற்போது வெளியாகியுள்ளது.

ஆஹா, ஓஹோ எனும் வசதிகளுடன் டொயோட்டாவின் தானியங்கி வாகனம்... அப்படி என்னங்க அதுல இருக்கு!

இ-பலேட் எனும் பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் தானியங்கி வாகனத்தைப் பற்றிய தகவல்தான் அது. இந்த தானியங்கி மின்சார வாகனத்தைத் தேவைப்பட்டால் அலுவலமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என டொயோட்டா தற்போது தெரிவித்திருக்கின்றது.

ஆஹா, ஓஹோ எனும் வசதிகளுடன் டொயோட்டாவின் தானியங்கி வாகனம்... அப்படி என்னங்க அதுல இருக்கு!

அதேசமயம், பயணிகள் வாகனமாக இதனைப் பயன்படுத்தினால் சுமார் 20 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியுமாம். இத்தகைய சிறப்பு வசதிகளுடனேயே இந்த புதிய தானியங்கி வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதன் இருக்கைகளை மடித்து வைத்துக் கொள்ளும் திறனில் டொயோட்டா வடிவமைத்திருக்கின்றது. ஆகையால், தேவைக்கேற்ப அதனை மடித்தோ அல்லது இருக்கையாக விரித்தோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆஹா, ஓஹோ எனும் வசதிகளுடன் டொயோட்டாவின் தானியங்கி வாகனம்... அப்படி என்னங்க அதுல இருக்கு!

மிக விரைவில் இந்த வாகனத்தை வர்த்தக துறையில் வீர நடைபோடுகின்ற வகையில் விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டில் முதல் முறையாக இந்த வாகனத்தை காட்சிப்படுத்தியபோது, உலகையே ஆளுகை செய்கின்ற வகையில் இந்த புதுமுக தயாரிப்பைக் கொண்டுவருவதாக அது கூறியிருந்தது.

ஆஹா, ஓஹோ எனும் வசதிகளுடன் டொயோட்டாவின் தானியங்கி வாகனம்... அப்படி என்னங்க அதுல இருக்கு!

இந்த வாகனத்தின் உற்பத்தி பணி இப்போதே தீவிரமடைய தொடங்கியிருக்கின்றது. இதற்குள்ளாகவே பலர் இந்த வாகனத்தை இணையத்தின் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் விசாரித்து வருவதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. இதன் மூலம் இதன் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

ஆஹா, ஓஹோ எனும் வசதிகளுடன் டொயோட்டாவின் தானியங்கி வாகனம்... அப்படி என்னங்க அதுல இருக்கு!

தானியங்கி வாகனமான இ-பலேட் டெலிவரி மற்றும் கால் டாக்சி போன்ற சேவைகளில் ஈடுபடுத்துகின்ற வகையிலேயே விற்பனைக்கு வரவுள்ளது. அமேசான், பிஸ்ஸா ஹட் மற்றும் உபேர் நிறுவனத்தின் கால் டாக்சி போன்றவற்றில் இது பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றது. ஆகையால், தனி நபர் பயன்பாட்டிற்கு இந்த வாகனம் கிடைக்காது என்பது தெளிவாக தெரிகின்றது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Plans To Make e-Palette As Commercially Viable Within A Few Years. Read In Tamil.
Story first published: Wednesday, December 23, 2020, 14:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X