இப்படி வரிபோட்டா எப்படி பிசினஸ் பண்றது... குமுறல்களை கொட்டிய டொயோட்டா

இந்தியாவில் வாகனங்களுக்கு பின்பற்றப்படும் வரிவிதிப்பு முறை காரணமாக, வர்த்தக விரிவாக்கத் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.

எக்கச்சக்க வரி... இந்தியாவில் வர்த்தக விரிவாக்கம் கிடையாது... டொயோட்டா அதிரடி முடிவு?

உலகிலேயே மிகப்பெரிய வாகன சந்தைகளுள் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. இதனால், உள்நாட்டு நிறுவனங்கள் தவிர்த்து, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வாகன நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. பல புதிய நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன.

எக்கச்சக்க வரி... இந்தியாவில் வர்த்தக விரிவாக்கம் கிடையாது... டொயோட்டா அதிரடி முடிவு?

எனினும், இந்தியாவில் வாகனங்களுக்கான வரி மற்றும் இறக்குமதி வரி மிக அதிகமாக இருப்பதாக தொடர்ந்து வாகன நிறுவனங்களிடம் இருந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதனை டொயோட்டா கார் நிறுவனம் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது.

எக்கச்சக்க வரி... இந்தியாவில் வர்த்தக விரிவாக்கம் கிடையாது... டொயோட்டா அதிரடி முடிவு?

இந்தியாவில் தற்போது உள்ள வரிவிதிப்பு முறைகள் குறித்து டொயோட்டா கார் நிறுவனம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் டொயோட்டா கிர்லோஸ்கர் கார் நிறுவனத்தின் தலைவர் ஷேகர் விஸ்வநாதன் கூறியிருப்பதாவது,"தற்போது இந்தியாவில் பின்பற்றப்படும் வரிவிதிப்பு முறைகளால் பெரும்பாலான வாகன நிறுவனங்களின் வர்த்தகம் கேள்விக் குறியாகவே உள்ளது.

எக்கச்சக்க வரி... இந்தியாவில் வர்த்தக விரிவாக்கம் கிடையாது... டொயோட்டா அதிரடி முடிவு?

வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் கடும் இடையூறுகள் உள்ளன. வரி அதிகம் விதிக்கப்படுவதால், அதனை வாடிக்கையாளர்கள் சுமக்கும் நிலை இருக்கிறது. இதனால், இந்தியாவில் சொந்த கார் வாங்குவது இன்னமும் வாடிக்கையாளர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. தற்போதுள்ள வரி விதிவிதிப்பு முறை காரணமாக, இந்தியாவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய மாட்டோம். ஆனால், வெளியேறும் திட்டம் இல்லை," என்று தெரிவித்துள்ளார்.

எக்கச்சக்க வரி... இந்தியாவில் வர்த்தக விரிவாக்கம் கிடையாது... டொயோட்டா அதிரடி முடிவு?

இந்த செய்தி ஆட்டோமொபைல் துறையின் மனக் குமுறல்களை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கு வாகன நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக, தற்போது கொரோனா பிரச்னையிலிருந்து மீண்டு வருவதற்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு அவசியம் என்று கூறி வருகின்றன. ஆனால், மத்திய அரசு இதற்கு இதுவரை செவி சாய்க்கவில்லை.

எக்கச்சக்க வரி... இந்தியாவில் வர்த்தக விரிவாக்கம் கிடையாது... டொயோட்டா அதிரடி முடிவு?

'மேக் இன் இந்தியா' திட்டம் மற்றும் வாகனங்களுக்கான சீன மூலப்பொருட்களை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கொள்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த சூழலில், டொயோட்டா நிறுவனத்தின் கருத்து மத்திய அரசுக்கு புதிய நெருக்கடியை தந்துள்ளது.

எக்கச்சக்க வரி... இந்தியாவில் வர்த்தக விரிவாக்கம் கிடையாது... டொயோட்டா அதிரடி முடிவு?

ஷேகர் விஸ்வநாதன் கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், டொயோட்டா கார் நிறுவனம் அவசரமாக அறிக்கை ஒன்றை இன்று பிற்பகல் வெளியிட்டுள்ளது. அதில்,"உலக அளவிலான எங்களது வர்த்தக கொள்கையின்படி, இந்தியாவிலும் வர்த்தகத்தை ஸ்திரமாக வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

எக்கச்சக்க வரி... இந்தியாவில் வர்த்தக விரிவாக்கம் கிடையாது... டொயோட்டா அதிரடி முடிவு?

கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியாவில் வர்த்தகத்தை வலுவான அடித்தளத்துடன் உருவாக்கி இருக்கிறோம். இதனை தக்கவைக்க மிக சீரிய திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். எனவே, இந்தியாவில் இதுவரை உருவாக்கப்பட்ட முதலீடுகள், வேலைவாய்ப்புகளை தக்க வைக்கும் விதத்தில், எங்களது வர்த்தக திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

எக்கச்சக்க வரி... இந்தியாவில் வர்த்தக விரிவாக்கம் கிடையாது... டொயோட்டா அதிரடி முடிவு?

எங்களது வாகன உற்பத்தித் திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படும். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நெருக்கடிகளில் இருந்து வாகனத் துறை மீண்டு வருவதற்கு சாதகமான வரி விதிப்பு முறையை கொண்டு வருவதற்கு அரசு உதவி செய்ய வேண்டுகிறோம்.

எக்கச்சக்க வரி... இந்தியாவில் வர்த்தக விரிவாக்கம் கிடையாது... டொயோட்டா அதிரடி முடிவு?

பொருளாதார பின்னடைவில் இருந்து மீண்டு வருவதற்கு அரசு எடுத்து வரும் முயற்சிகளை உணர்ந்து கொண்டு இருக்கிறோம். எனினும், வாகனத் துறை நிலையை உணர்ந்து சாதகமான திட்டங்களை செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

எக்கச்சக்க வரி... இந்தியாவில் வர்த்தக விரிவாக்கம் கிடையாது... டொயோட்டா அதிரடி முடிவு?

மேலும், இந்தியாவில் வர்த்தகத்தை வலுவாக்கும் முயற்சியாக, சுஸுகி நிறுவனத்தின் கூட்டணியில் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு வலு சேர்த்து வருகிறது," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota has revealed that the company is planning to stop business expansion in India due to the present high tax structure in place.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X