26 ஆண்டுகால அனுபவம்... டொயோட்டா ஆர்ஏவி4 காரின் விற்பனை 1 கோடியை தொட்டது...

டொயோட்டா நிறுவனத்தில் இருந்து இதுவரை இந்திய சந்தையில் விற்பனைக்கு வராத ஆர்ஏவி4 மாடல் உலகளவில் ஒரு கோடி விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கடந்த 26 ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள இந்த கார் கடந்த வந்த பாதையை பற்றி இந்த செய்தியில் இனி பார்ப்போம்.

26 ஆண்டுகால அனுபவம்... டொயோட்டா ஆர்ஏவி4 காரின் விற்பனை 1 கோடியை தொட்டது...

1994 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்ட டொயோட்டா ஆர்ஏவி4 மாடல் முதன்முறையாக ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் இதே ஆண்டில் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற இந்த டொயோட்டா கார் அதற்கு அடுத்து, அதாவது 1995ஆம் ஆண்டில் வட அமெரிக்காவில் நுழைந்தது.

26 ஆண்டுகால அனுபவம்... டொயோட்டா ஆர்ஏவி4 காரின் விற்பனை 1 கோடியை தொட்டது...

ஆர்ஏவி4 மாடலின் ஐந்தாம் தலைமுறை கார் தான் தற்சமயம் ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆர்ஏவி4 பெயரின் முழு அர்த்தம், 'பொழுதுபோக்கு செயல்பாட்டு வாகனம்: 4-சக்கர ட்ரைவ்' (Recreational Activity Vehicle: 4-wheel drive) என்பதாகும்.

MOST READ: வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... அதிரடி முடிவை எடுத்த பெட்ரோல் பங்க் டீலர்கள்... என்னனு தெரியுமா?

26 ஆண்டுகால அனுபவம்... டொயோட்டா ஆர்ஏவி4 காரின் விற்பனை 1 கோடியை தொட்டது...

முற்றிலும் எஸ்யூவி ரக கார்களின் பிரியர்களை கவர்வதற்காக சந்தைக்கு கொண்டுவரப்பட்ட ஆர்ஏவி4 மாடலில் செயல்முறையான கேபினும், 4-வீல்-ட்ரைவ் தேர்வும் காம்பெக்ட் பேக்கேஜில் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய பேக்கேஜ்களால் இந்த டொயோட்டா மாடல் ஒவ்வொரு வருடத்திலும் சுமார் பத்து மடங்கு விற்பனை வளர்ச்சியை பெற்று வந்துள்ளது.

26 ஆண்டுகால அனுபவம்... டொயோட்டா ஆர்ஏவி4 காரின் விற்பனை 1 கோடியை தொட்டது...

குறிப்பாக கடந்த 2019ல் 5.1 லட்சத்திற்கும் அதிகமான ஆர்ஏவி4 கார்கள் உலகம் முழுவதும் விற்பனையாகியுள்ளன. இதன் அறிமுகத்தின்போது இந்த கார் மாதத்திற்கு 4500 யூனிட்கள் விற்பனையாக வேண்டும் என டொயோட்டா நிறுவனம் கணித்து வைத்திருந்தது.

MOST READ: கொரோனா வைரஸின் தாக்கம்... இந்தியாவின் எரிபொருள் தேவை பாதியாக குறைந்தது...

26 ஆண்டுகால அனுபவம்... டொயோட்டா ஆர்ஏவி4 காரின் விற்பனை 1 கோடியை தொட்டது...

ஆனால் இந்த மாடலுக்கு ஆரம்பம் முதலே வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அறிமுக மாதத்திலேயே 8000 யூனிட்கள் விற்பனையாகி ஆச்சிரியப்படுத்தியது. 3-கதவு மற்றும் 4-கதவு மட்டுமில்லாமல் இதன் முதல் தலைமுறை கார் 2-கதவு வெர்சனிலும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

26 ஆண்டுகால அனுபவம்... டொயோட்டா ஆர்ஏவி4 காரின் விற்பனை 1 கோடியை தொட்டது...

இந்த மாடலுக்கு டொயோட்டா நிறுவனம் அதிகளவில் என்ஜின் தேர்வுகளையும், முன் சக்கர ட்ரைவ் சிஸ்டத்தையும் வழங்கியிருந்ததால் இந்த காருக்கு உலகளவில் பெரிய வாடிக்கையாளர்கள் கூட்டமே உள்ளது. இந்த எஸ்யூவி மாடல் முற்றிலும் ஹைப்ரீட் என்ஜினிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஹைப்ரீட் வெர்சன் இதன் மொத்த விற்பனை எண்ணிக்கையில் 20 சதவீதத்தை பெற்றுள்ளது.

MOST READ: பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் மாரடைப்பால் மரணம்

26 ஆண்டுகால அனுபவம்... டொயோட்டா ஆர்ஏவி4 காரின் விற்பனை 1 கோடியை தொட்டது...

ஆர்ஏவி4 மாடலின் இத்தகைய வளர்ச்சிக்கு வட அமெரிக்க சந்தையின் பங்கு இன்றியமையாதது. அதிக எண்ணிக்கையிலான என்ஜின் தேர்வுகள், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உட்புறம், அதிக பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அழியாத நம்பகத்தன்மை காரணிகளால் இந்த காரின் விற்பனை பயணம் இன்னும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota RAV4 achieves one crore global sales milestone
Story first published: Tuesday, April 21, 2020, 7:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X