டொயோட்டா யாரிஸ் செடான் காரின் டீசர் வெளியீடு!

டொயோட்டா யாரிஸ் செடான் காரில் புதிய மாடலின் வெளியிட்டை தெரிவிக்கும் வகையில், புதிய டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் டீசர் வெளியீடு... எதற்காக இருக்கும்?

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் டொயோட்டா யாரிஸ் கார் மதிப்புவாய்ந்த தேர்வாக இருந்து வருகிறது. இருப்பினும், ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா போன்ற ஜாம்பவான்களுடன் கடுமையாக போட்டி போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது டொயோட்டா யாரிஸ் கார்.

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் டீசர் வெளியீடு... எதற்காக இருக்கும்?

மேலும், புதிய ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னா கார்களின் வருகையும் டொயோட்டா யாரிஸ் காருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதனை மனதில் வைத்து யாரிஸ் காரில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய மாடலை களமிறக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் டீசர் வெளியீடு... எதற்காக இருக்கும்?

இந்த நிலையில், யாரிஸ் காருக்கு புதிய டீசர் ஒன்றை டொயோட்டா வெளியிட்டுள்ளது. அதில், விரைவில் வருகிறது என்ற வாசகத்துடன் யாரிஸ் காரின் முன்புற படத்துடன் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் டீசர் வெளியீடு... எதற்காக இருக்கும்?

இதன்மூலமாக, பண்டிகை காலத்தை மனதில் வைத்து ஸ்பெஷல் எடிசன் மாடல் அல்லது கூடுதல் பொலிவுடன் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக யாரிஸ் கார் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் டீசர் வெளியீடு... எதற்காக இருக்கும்?

அண்மையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் யாரிஸ் (அங்கு வியோஸ் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது) காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. முகப்பில் பல்வேறு மாறுதல்களுடன் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகளுடன் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் டீசர் வெளியீடு... எதற்காக இருக்கும்?

அத்போன்று, புதிய டியூவல் டோன் அலாய் வீல்கள், புதிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ரியர் ஏசி வென்ட்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் வைப்பர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த மாடல் இந்தியாவில் கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், தற்போதுள்ள மாடலில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் டீசர் வெளியீடு... எதற்காக இருக்கும்?

இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 107 எச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் டீசர் வெளியீடு... எதற்காக இருக்கும்?

டொயோட்டா யாரிஸ் கார் ரூ.8.86 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த நிலையில், ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வந்தால் அது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota has released a new teaser of the Yaris sedan car on its social media handles today.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X