டொயோட்டா அர்பன் க்ரூஸர் இன்டீரியர் படங்கள் மற்றும் வசதிகள் விபரம்!

அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கும் புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் இன்டீரியர் படங்கள் மற்றும் வசதிகள் விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் இன்டீரியர் படங்கள் மற்றும் வசதிகள் விபரம்!

இந்தியாவில் 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்படும் காம்பேக்ட் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் அர்பன் க்ரூஸர் என்ற புதிய எஸ்யூவியுடன் டொயோட்டா களமிறங்க உள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் ரீபேட்ஜ் வெர்ஷனாக மாற்றப்பட்டுள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் இன்டீரியர் படங்கள் மற்றும் வசதிகள் விபரம்!

வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் சில மாற்றங்களுடன் ரீபேட்ஜ் எஞ்சினியரிங் முறையில் இந்த எஸ்யூவி அர்பன் க்ரூஸர் என்ற பிராண்டில் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில், பண்டிகை கால வரவில் இணைந்துள்ள புதிய அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் வெளிப்புறத் தோற்றத்தை பார்க்கும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் இன்டீரியர் படங்கள் மற்றும் வசதிகள் விபரம்!

தற்போது இன்டீரியர் படங்களும் டொயோட்டா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அந்த படங்களின் மூலமாக இந்த எஸ்யூவியில் இடம்பெறும் சில முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களும் தெரிய வந்துள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் இன்டீரியர் படங்கள் மற்றும் வசதிகள் விபரம்!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி கருப்பு மற்றும் பழுப்பு வண்ணத்திலான இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொண்டதாக வர இருக்கிறது. பிரெஸ்ஸாவின் அதே டேஷ்போர்டுதான். டிசைனில் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் இன்டீரியர் படங்கள் மற்றும் வசதிகள் விபரம்!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டேஷ்போர்டில் பிரதானமாக வீற்றிருக்கிறது. அத்துடன், நேவிகேஷன் வசதியும் கொடுக்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் இன்டீரியர் படங்கள் மற்றும் வசதிகள் விபரம்!

இந்த காரில் ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், எலெக்ட்ரோக்ரோமிக் ரியர் வியூ மிரர், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவையும் இந்த காரில் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் இன்டீரியர் படங்கள் மற்றும் வசதிகள் விபரம்!

இதுதவிர்த்து, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களாக இடம்பெற உள்ளன.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் இன்டீரியர் படங்கள் மற்றும் வசதிகள் விபரம்!

இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் வழங்கப்பட உள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் இன்டீரியர் படங்கள் மற்றும் வசதிகள் விபரம்!

புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியில் நீலம், பழுப்பு, வெள்ளை, ஆரஞ்ச், சில்வர் மற்றும் சாம்பல் வண்ணத் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. நீலம்- கருப்பு, பழுப்பு - கருப்பு மற்றும் ஆரஞ்ச் - வெள்ளை ஆகிய இரட்டை வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் இன்டீரியர் படங்கள் மற்றும் வசதிகள் விபரம்!

அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இந்த எஸ்யூவிக்கு அதிகாரப்பூர்வமாக டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டது நினைவிருக்கலாம். ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Kirloskar Motor has revealed the interior images of its upcoming Urban Cruiser SUV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X