இந்திய சாலைகளை பதம்பார்க்க வருகிறது டொயோட்டாவின் சுப்ரா ஸ்போர்ட்ஸ்கார்...

டொயோட்டாவின் பிரபலமான ஸ்போர்ட் காரான சுப்ரா விரைவில் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய சாலைகளை பதம்பார்க்க வருகிறது டொயோட்டாவின் சுப்ரா ஸ்போர்ட்ஸ்கார்...

டொயோட்டாவின் துணை ப்ராண்ட்டான டொயோட்டா கஸு இ-ரேசிங் 2020ஆம் ஆண்டிற்கான ஜிஆர் சுப்ரா க்ரான் டுரிஸ்மோ கோப்பை என்ற இ-மோட்டார்ஸ்போர்ட் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்திய சாலைகளை பதம்பார்க்க வருகிறது டொயோட்டாவின் சுப்ரா ஸ்போர்ட்ஸ்கார்...

இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் 10 போட்டியாளர்களுக்கு ஜிஆர் கருவிகளும், முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.75,000 மற்றும் ரூ.50,000 என்ற தொகைகளும் பரிசாக வழங்கப்படவுள்ளன.

இந்திய சாலைகளை பதம்பார்க்க வருகிறது டொயோட்டாவின் சுப்ரா ஸ்போர்ட்ஸ்கார்...

இந்தியாவில் டொயோட்டா கஸு ரேசிங் சப்-ப்ராண்ட் நுழைவதற்கு இந்த போட்டி உதவியாக இருக்கும் என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் முதன்மை துணை தலைவர் நவீன் சோனி கூறியுள்ளார்.

இந்திய சாலைகளை பதம்பார்க்க வருகிறது டொயோட்டாவின் சுப்ரா ஸ்போர்ட்ஸ்கார்...

மேலும் 2020 ஜிஆர் சுப்ரா க்ரான் டுரிஸ்மோ கோப்பையை தொடர்ந்து ஜிஆர் சுப்ரா ஸ்போர்ட்கார் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்திய சாலைகளை பதம்பார்க்க வருகிறது டொயோட்டாவின் சுப்ரா ஸ்போர்ட்ஸ்கார்...

இதனால் விளையாட்டு மற்றும் மற்ற செயல்பாடுகளுக்கான நேரத்தை அப்படியே ஷோரூம்களின் மூலம் ஜிஆர் சுப்ரா காரின் வருகையை வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது தெரியப்படுத்துவதற்கு பயன்படுத்த டொயோட்டா நிறுவனம் யோசித்து வருகிறது. இதன் மூலமாக இளம் வாடிக்கையாளர்களை கவர இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்திய சாலைகளை பதம்பார்க்க வருகிறது டொயோட்டாவின் சுப்ரா ஸ்போர்ட்ஸ்கார்...

தற்சமயம் ஜப்பான் நாட்டின் கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, மாருதி சுஸுகியின் விட்டாரா பிரெஸ்ஸாவை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய அர்பன் க்ரூஸர் காம்பெக்ட் எஸ்யூவி மாடலை அடுத்த மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்த தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்திய சாலைகளை பதம்பார்க்க வருகிறது டொயோட்டாவின் சுப்ரா ஸ்போர்ட்ஸ்கார்...

இதன் காரணமாக உட்புறம் பெருமளவு இரண்டிலும் ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் வெளிபுறங்கள் சில வித்தியாசங்களை கொண்டுள்ளன. இதில் என்ஜின் அமைப்பாக 1.5 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின், 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்பட உள்ளது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Supra sportscar will be launched in near future
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X