விடைபெறுகிறதா டொயோட்டாவின் பிரபலமான ‘லேண்ட் க்ரூஸர்’? பலரை அதிர்ச்சியாக்கிய செய்தி...

2021ஆம் ஆண்டிற்கு பிறகு தற்சமயம் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள டொயோட்டா லேண்ட் க்ருஸரின் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை இனி பார்ப்போம்.

விடைபெறுகிறதா டொயோட்டாவின் பிரபலமான ‘லேண்ட் க்ரூஸர்’? பலரை அதிர்ச்சியாக்கிய செய்தி...

டொயோட்டா நிறுவனம் லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி காரை பல தசாப்தங்களாக விற்பனை செய்து வருகிறது. அதிலும் இதன் தற்போதைய தலைமுறை சுமார் 13 வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

விடைபெறுகிறதா டொயோட்டாவின் பிரபலமான ‘லேண்ட் க்ரூஸர்’? பலரை அதிர்ச்சியாக்கிய செய்தி...

இந்த 13 வருடங்களில் மிக சிறிய அளவிலான காஸ்மெட்டிக் மாற்றங்களை தவிர்த்து காரில் பெரிய அளவில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. உலகம் முழுவதிலும் லேண்ட் க்ரூஸருக்கு வாடிக்கையாளர்கள் இருந்தாலும் அதிகரித்துவரும் போட்டியினை சமாளிக்க இந்த எஸ்யூவி காரின் மீது முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் டொயோட்டா உள்ளது.

விடைபெறுகிறதா டொயோட்டாவின் பிரபலமான ‘லேண்ட் க்ரூஸர்’? பலரை அதிர்ச்சியாக்கிய செய்தி...

இந்த நிலையில் தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி 2021 லேண்ட் க்ரூஸர் அமெரிக்க சந்தையில் கடைசி லேண்ட் க்ரூஸர் மாடலாக விளங்கவுள்ளதாம். கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கும் மேலாக தயாரிப்பில் இருக்கும் ‘லேண்ட் க்ரூஸர்' பெயர்பலகை 2021 உடன் தனது விற்பனை பயணத்தை நிறுத்தி கொள்ளவுள்ளதாக இந்த தகவல்கள் கூறுகின்றன.

விடைபெறுகிறதா டொயோட்டாவின் பிரபலமான ‘லேண்ட் க்ரூஸர்’? பலரை அதிர்ச்சியாக்கிய செய்தி...

ஆனால் இதுகுறித்த உறுதியான தகவல்கள் எதுவும் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இதுவரை வெளிவரவில்லை. டொயோட்டாவின் வளர்ச்சிக்கு லேண்ட் க்ரூஸர் மாடல்கள் மிக முக்கியமான பங்காற்றியுள்ளன என்றால் அது மிகையில்லை.

விடைபெறுகிறதா டொயோட்டாவின் பிரபலமான ‘லேண்ட் க்ரூஸர்’? பலரை அதிர்ச்சியாக்கிய செய்தி...

இதன் ஆஃப்-ரோடு திறன் தற்போதுள்ள மாடர்ன் எஸ்யூவிகள் எதிலிலும் இல்லை என்றுகூட சொல்லலாம். லேண்ட் க்ரூஸரின் செயல்திறன்மிக்க வேரியண்ட்டையும் டொயோட்டா மனதில் வைத்துள்ளது. இந்த வெர்சனில் இரட்டை டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் வழங்கப்படலாம் என தகவல் தெரிவிக்கின்றன.

விடைபெறுகிறதா டொயோட்டாவின் பிரபலமான ‘லேண்ட் க்ரூஸர்’? பலரை அதிர்ச்சியாக்கிய செய்தி...

இந்த டர்போசார்ஜ்டு என்ஜின் அதிகப்பட்சமாக 268 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் லெக்ஸஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் லேண்ட் க்ரூஸர் எப்போதோ நிறுத்தப்பட்டு விட்டது.

விடைபெறுகிறதா டொயோட்டாவின் பிரபலமான ‘லேண்ட் க்ரூஸர்’? பலரை அதிர்ச்சியாக்கிய செய்தி...

கடந்த 2020 ஏப்ரலில் இருந்து புதிய மாசு உமிழ்வு விதிகள் நம் நாட்டில் அமலுக்கு வந்தன. இதன் காரணமாக பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமானதாக அப்டேட் செய்யப்படாத கரோல்லா அல்டிஸ் மற்றும் எடியோஸ் ட்வின்ஸ் கார்களின் விற்பனையை இந்த காலக்கெடுவுக்கு முன்னதாக டொயோட்டா நிறுவனம் நிறுத்திவிட்டது.

விடைபெறுகிறதா டொயோட்டாவின் பிரபலமான ‘லேண்ட் க்ரூஸர்’? பலரை அதிர்ச்சியாக்கிய செய்தி...

அப்போதுதான் லேண்ட் க்ரூஸரின் விற்பனையும் இந்தியாவில் நிறுத்தப்பட்டது. புதிய தலைமுறை லேண்ட் க்ரூஸர் 300 மாடல் டிஎன்ஜிஏ ப்ளாட்ஃபாரத்தின் புதிய பாடி-ஆன்-ஃப்ரேம் வெர்சனான டிஎன்ஜிஏ-எஃப்-இல் வடிவமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota to discontinue current-gen Land Cruiser by 2021 model year.
Story first published: Sunday, December 27, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X