ப்ரியஸ் ஹைப்ரீட் மாடலை பெருமைப்படுத்திய டொயோட்டா.... புதிய ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது....

ஹைப்ரீட் கார்களின் தயாரிப்பில் 20 வருடத்தை கடந்ததை சந்தையில் பதிவு செய்யும் விதமாக ப்ரியஸ் மாடலின் 2020 எடிசனை 2021ஆம் ஆண்டிற்காக தயாரித்து விற்பனை செய்ய டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய எடிசன் காரை பற்றி விரிவாக இந்த செய்தியில் இனி பார்ப்போம்.

ப்ரியஸ் ஹைப்ரீட் மாடலை பெருமைப்படுத்திய டொயோட்டா.... புதிய ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது....

பெயருக்கு ஏற்றாற்போல் வெறும் 2,020 யூனிட்கள் மட்டும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ள இந்த கார் வெளிப்புறத்தில் கவனிக்கத்தக்க டிசைன் ஹைலைட்டாக பி-பில்லர்களில் கருப்பு நிற பேனல்கள், மிரர் ஹௌசிங், ஹெட்லைட் பாகங்கள் மற்றும் 17 இன்ச் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

ப்ரியஸ் ஹைப்ரீட் மாடலை பெருமைப்படுத்திய டொயோட்டா.... புதிய ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது....

பின்புறத்தில் தற்போது சிவப்பு நிறத்தில் ஸ்பாய்லரை பெற்றுள்ள இந்த கார் பை-எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் வழக்கமான ப்ரியஸ் மாடலில் இருந்து எல்இடி இணைக்கப்பட்ட விளக்குகளை ஏற்றுள்ளது. உட்புறத்தில் 2020 எடிசன் என்பதை வெளிப்படுத்தும் வகையில் கீ ஃபாப், கீ ஃபாப் க்ளோவ் மற்றும் ஃப்ளோர் மேட்களை கொண்டுள்ளது.

ப்ரியஸ் ஹைப்ரீட் மாடலை பெருமைப்படுத்திய டொயோட்டா.... புதிய ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது....

மற்ற மாற்றங்களாக கருப்பு நிறத்தில் ஷிஃப்ட் க்னாப், ஏ-பில்லர் ட்ரிம் மற்றும் ஸ்மோக்டு ஃபினிஷ் செய்யப்பட்ட எச்விஏசி வெண்ட்ஸ் உள்ளிட்டவை உள்ளன. இவை மட்டுமில்லாமல் இதன் உட்புற கேபின் 8 விதங்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, வயர்லெஸ் போன் சார்ஜிங் போர்ட் மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உடன் இணைக்கக்கூடிய 7-இன்ச் தொடுத்திரை ஆடியோ சிஸ்டம் போன்றவற்றையும் கொண்டுள்ளது.

ப்ரியஸ் ஹைப்ரீட் மாடலை பெருமைப்படுத்திய டொயோட்டா.... புதிய ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது....

இவற்றுடன் இதன் 2021 மாடலில் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைக்கும் வசதியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில் இந்த ஸ்பெஷல் எடிசனில் புதிய டொயோட்டா பாதுகாப்பு உணர்வு 2.0 சிஸ்டத்தை தயாரிப்பு நிறுவனம் பொருத்தியுள்ளது.

ப்ரியஸ் ஹைப்ரீட் மாடலை பெருமைப்படுத்திய டொயோட்டா.... புதிய ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது....

இந்த 2.0 சிஸ்டத்தில் டைனாமிக் க்ரூஸ் கண்ட்ரோல், பாதசாரிகள் மீது மோதாமல் தடுக்க அவர்களை முன்னரே கண்டறிந்து செயல்படும் அமைப்பு, பயணத்தை துவங்கும் முன் காரில் உள்ள குறைப்பாடுகளை எச்சரிக்கும் வசதி மற்றும் சாலையை அடையாளப்படுத்த உதவும் வசதி உள்ளிட்டவை அடங்கும்.

ப்ரியஸ் ஹைப்ரீட் மாடலை பெருமைப்படுத்திய டொயோட்டா.... புதிய ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது....

இயக்க ஆற்றலை வழங்குதற்கு 1.8 லிட்டர் 4-சிலிண்டர் அட்கின்சன்-சைக்கிள் பெட்ரோல் என்ஜின் இரு எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் சிவிடி ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது. இவ்வாறான ஹைப்ரீட் சிஸ்டம் ப்ரியஸ் மாடல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டதில் இருந்து பொருத்தப்பட்டு வருகிறது.

ப்ரியஸ் ஹைப்ரீட் மாடலை பெருமைப்படுத்திய டொயோட்டா.... புதிய ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது....

இந்த ஹைப்ரீட் சிஸ்டத்தின் மூலமாக முழு எலக்ட்ரிக் பவரையும் பெற முடியும். இவற்றுடன் இந்த காரில் ரீஜெனரேட்டிங் ப்ரேக்கிங்கும் உள்ளது. 2001ல் சர்வதேச சந்தையில் நுழைந்ததில் இருந்து டொயோட்டா ப்ரியஸ் ஹைப்ரீட் மாடல் இதுவரை நான்கு தலைமுறைகளை சந்தித்துள்ளது.

ப்ரியஸ் ஹைப்ரீட் மாடலை பெருமைப்படுத்திய டொயோட்டா.... புதிய ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது....

இதில் ஒவ்வொரு தலைமுறையும் அதன் முந்தைய தலைமுறையை காட்டிலும் அளவில் பெரியதாகவும், அதிக ஆற்றல் கொண்டதாகவும் விளங்கி வந்துள்ளன. 2001ல் தான் சர்வதேச சந்தையில் இந்த கார் காலடி எடுத்து வைத்தாலும் ஜப்பானில் 1997ல் இருந்தே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ப்ரியஸ் ஹைப்ரீட் மாடலை பெருமைப்படுத்திய டொயோட்டா.... புதிய ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது....

உலகளவில் மொத்தமாக இதுவரை 6 மில்லியன் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் மாடல்கள் விற்பனையாகியுள்ளன. இவற்றில் 1.9 மில்லியன் அமெரிக்காவிலேயே விற்பனை செய்யப்பட்டுள்ளது. ப்ரீயஸ் ஹைப்ரீட் மாடலை தொடர்ந்து டொயோட்டா நிறுவனம் வருகிற 18ஆம் தேதி புதியதாக இரு ஹைப்ரீட் மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Celebrating 20 Years Of The Prius With The Prius 2020 Edition (Toyota Prius 2020 Edition)
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X