நடைமுறைக்கு ஏற்ற கேபினுடன் 2021 டொயோட்டா க்ரௌன்!! நம்மால் தான் வாங்க முடியாதே...

ஜப்பானில் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 2021மை டொயோட்டா க்ரௌன் செடான் காரின் அப்கிரேட் அம்சங்கள் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

நடைமுறைக்கு ஏற்ற கேபினுடன் 2021 டொயோட்டா க்ரௌன்!! நம்மால் தான் வாங்க முடியாதே...

க்ரௌன், மிக நீண்ட காலமாக விற்பனையில் இருக்கும் டொயோட்டா கார் மாடல்களில் ஒன்று. 1955ல் இருந்து விற்பனையில் இருக்கும் இந்த செடான் காரின் 15வது தலைமுறை வெர்சன் கடந்த 2017ல் நடைபெற்ற 45வது டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் கான்செப்ட் ஆக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

நடைமுறைக்கு ஏற்ற கேபினுடன் 2021 டொயோட்டா க்ரௌன்!! நம்மால் தான் வாங்க முடியாதே...

அதன்பின் 2018ஆம் ஆண்டின் மத்தியில் ஜப்பான் சந்தையில் விற்பனைக்கு வந்த இந்த புதிய தலைமுறை கார் கடந்த இரண்டு வருடங்களாக விற்பனையில் உள்ளது. இதனை தொடர்ந்து க்ரௌனின் 2021மை அப்டேட் வெர்சனும் ஏற்கனவே அங்கு விற்பனைக்கு வந்துவிட்டது.

நடைமுறைக்கு ஏற்ற கேபினுடன் 2021 டொயோட்டா க்ரௌன்!! நம்மால் தான் வாங்க முடியாதே...

வெளிப்புறத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படாவிட்டாலும், புதிய பெயிண்ட் தேர்வுகளை இந்த 2021 செடான் கார் பெற்றுள்ளது. அதேபோல் உட்புற கேபினும் தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்திற்கு ஏற்ப திருத்தியமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் ரீ-டிசைனில் மைய கன்சோலை பெற்றுள்ள இந்த காரில் மத்திய ஏசி துளைகளின் இடம் மாற்றியமைக்கப்பட்டு, தற்போது இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு அடிப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

நடைமுறைக்கு ஏற்ற கேபினுடன் 2021 டொயோட்டா க்ரௌன்!! நம்மால் தான் வாங்க முடியாதே...

இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட் ஆனது 12.3 இன்ச் டிஎஃப்டி தொடுத்திரை செட்அப் உடன் ஸ்மார்ட்போன் இணைப்பை கொண்டதாக உள்ளது. இந்த அப்டேட் கார் இயற்பியல் முறையிலான எச்விஏசி கண்ட்ரோல்களை ஏற்றுள்ளது. முந்தைய வெர்சனில் தொடுத்திரை மூலமாக கண்ட்ரோல் செய்யும் வகையில் வழங்கப்பட்ட இந்த கண்ட்ரோல்கள் ஏசி-க்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடைமுறைக்கு ஏற்ற கேபினுடன் 2021 டொயோட்டா க்ரௌன்!! நம்மால் தான் வாங்க முடியாதே...

இதனால் எச்விஏசி ஸ்விட்ச்களை ட்ரைவிங்கின் போது கண்ட்ரோல் செய்வது இன்னும் எளிதாகியுள்ளது. மற்றப்படி 3-ஸ்போக் பல-செயல்பாடு ஸ்டேரிங் சக்கரம், கார்பன் ட்ரிம் மற்றும் உள்ளமைவு தேர்வுகள் உள்ளிட்டவை அப்படியே 2021மை க்ரௌன் காருக்கும் தொடரப்பட்டுள்ளன.

நடைமுறைக்கு ஏற்ற கேபினுடன் 2021 டொயோட்டா க்ரௌன்!! நம்மால் தான் வாங்க முடியாதே...

ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல், பகல் & இரவிலும் பாதசாரிகளை கண்டறியும் வசதியுடன் முன்பக்கமாக கார் மோதலை தவிர்க்கும் அமைப்பு, பகல் நேரத்தில் சைக்கிளில் செல்பவர்களை அடையாளம் காணும் வசதி உள்ளிட்டவை அடங்கிய டொயோட்டா பாதுகாப்பு சென்ஸ் தொகுப்பையும் 2021 க்ரௌன் காரில் டொயோட்டா நிறுவனம் வழங்கியுள்ளது.

நடைமுறைக்கு ஏற்ற கேபினுடன் 2021 டொயோட்டா க்ரௌன்!! நம்மால் தான் வாங்க முடியாதே...

என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படாததால் அதே 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் தான் 2021 க்ரௌனிலும் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 245 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மற்ற என்ஜின் தேர்வுகளான 2.5 லிட்டர் ஹைப்ரீட் என்ஜின் 226 பிஎச்பி பவரையும், 3.5 லிட்டர் வி6 ஹைப்ரீட் என்ஜின் 359 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தக்கூடியவை.

நடைமுறைக்கு ஏற்ற கேபினுடன் 2021 டொயோட்டா க்ரௌன்!! நம்மால் தான் வாங்க முடியாதே...

2021 டொயோட்டா க்ரௌன் செடான் ஜப்பானில் உள்ள டீலர்ஷிப்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை அங்கு 4,899,000 யென்-ஆக உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.34.88 லட்சமாகும். அதேநேரம் இதன் டாப் ட்ரிம் ரூ.53 லட்சம் அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2021 Toyota Crown Updated With New Features & A More Practical Cabin
Story first published: Thursday, November 5, 2020, 12:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X