ஃபார்ச்சூனர் காரில் புதிய எபிக், எபிக் ப்ளாக் எடிசன்களை கொண்டுவந்தது டொயோட்டா..!

டொயொட்டா நிறுவனம் ஃபார்ச்சூனர் மாடலின் புதிய எபிக் மற்றும் எபிக் ப்ளாக் வெர்சன் கார்களை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஃபார்ச்சூனரின் இந்த புதிய வேரியண்ட்கள் முதலில் தென்னாப்பிரிக்க சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளன.

<div data-album-id=
" title="" class="sliderImg image_listical" />

டொயோட்டா நிறுவனம் இந்த இரு புதிய ஃபார்ச்சூனர் கார்களின் 2.8 லிட்டர் டீசல் என்ஜினை தற்போதைய ஃபார்சூனர் மாடலில் இருந்து வித்தியாசப்படுவதற்காக சில கூடுதலான காஸ்மெட்டிக் அப்கிரேட்களுடன் வழங்கியுள்ளது. இந்த அப்கிரேட் டீசல் என்ஜின் ஃபார்ச்சூனரின் இந்த புதிய எபிக் வெர்சன்களில் மட்டும் தான் பொருத்தப்பட்டுள்ளது.

<div data-album-id=
" title="" class="sliderImg image_listical" />

வெளிப்புறத்தில் இந்த புதிய எபிக் வேரியண்ட்கள் முன்புறத்தில் 'எபிக்' ப்ராண்டிங் உடன் வாடிக்கையாளரின் கவனத்தை பெற சற்று வெளியே தள்ளப்பட்ட பார்களையும், பின்புறத்தில் வாகனத்தை அவசர காலத்தில் கட்டி இழுப்பதற்கான பார்களையும் கொண்டுள்ளன.

<div data-album-id=
" title="" class="sliderImg image_listical" />

உட்புற கேபின் அதிகளவிலான சிறிய மாற்றங்களுடன் காட்சியளிக்கிறது. இந்த வகையில் ஃபார்ச்சூனரின் இந்த எபிக் வெர்சன்கள் உட்புறத்தில் மெட்டாலிக் ஸ்கஃப் தட்டுகளையும், 'எபிக்' ப்ராண்ட் ஃப்ளோர் மேட்களையும் பெற்றுள்ளன. எபிக் ப்ளாக் வெர்சன் கார் கூடுதலாக ஸ்போர்ட்டியான டிசைனில் கருப்பு நிறத்தில் ரூஃப், விங் மிரர்கள் மற்றும் புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

<div data-album-id=
" title="" class="sliderImg image_listical" />

மற்றப்படி இந்த எபிக் எடிசன்கள் தற்போதைய ஃபார்ச்சூனர் மாடலில் உள்ள எல்இடி ஹெட்லேம்ப்கள், ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல், பவர்டு ஓட்டுனர் இருக்கை, க்ரூஸ் கண்ட்ரோல், காரின் பின்பக்கத்தை பார்க்க கேமிரா மற்றும் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை அப்படியே பெற்றுள்ளது.

<div data-album-id=
" title="" class="sliderImg image_listical" />

177 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த எடிசன்களின் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் ஆற்றலை காரின் முன்புற அல்லது பின்புற இரு சக்கரங்களுக்கோ அல்லது அனைத்து சக்கரங்களுக்கோ ஒரே நேரத்தில் வழங்கும் திறன் கொண்டது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது.

<div data-album-id=
" title="" class="sliderImg image_listical" />

மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் தேர்வு கொடுக்கப்படவில்லை. இந்த இரு புதிய எடிசன்களை தவிர்த்து, இந்திய மாடலை போல் அல்லாமல் இரு டீசல் என்ஜின் தேர்வுகளில் டொயோட்டா ஃபார்ச்சூனர் தென்னாப்பிரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் சிறிய 2.4 லிட்டர் என்ஜின் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இன்னோவா கிரிஸ்டா மாடலிலும் பொருத்தப்பட்டு வருகிறது.

<div data-album-id=
" title="" class="sliderImg image_listical" />

இந்த 2.4 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வு ஃபார்ச்சூனரின் தென்னாப்பிரிக்க மாடலின் விலை குறைவான வேரியண்ட்களில் மட்டும் தான் வழங்கப்படுகிறது. இந்த இரு டீசல் என்ஜின்கள் மட்டுமில்லாமல் பெட்ரோல் வேரியண்ட்டிலும் ஃபார்ச்சூனர் கார் தென்னாப்பிரிக்காவில் கிடைக்கிறது. இந்த பெட்ரோல் வேரியண்ட்டில் 2.7 லிட்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

<div data-album-id=
" title="" class="sliderImg image_listical" />

ஃபார்ச்சூனர் காரின் பிஎஸ்6 மாடலை டொயோட்டா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாத துவங்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியிருந்தது. மேலும் ஃபார்ச்சூனர் மாடலில் மிட்-சைக்கிள் அப்டேட்டை கொண்டுவரும் பணியிலும் இந்நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது.

<div data-album-id=
" title="" class="sliderImg image_listical" />

புதிய பிஎஸ்6 கார்களின் அறிமுகங்களுக்கு இடையே புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக அப்டேட் செய்யப்படாத வாகனங்களின் விற்பனையையும் இந்நிறுவனம் நிறுத்தி வருகிறது. இந்த வகையில் சமீபத்தில் டொயோட்டா எட்டியோஸ் மற்றும் லிவா மாடல்கள் இந்தியாவில் இருந்து விடைபெற்று சென்றன. இதுகுறித்த தகவல்களை முழுமையாக கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தி காணவும்.

*டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
toyota-unveils-fortuner-new-epic-and-epic-black-trims-details
Story first published: Tuesday, April 7, 2020, 13:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X