புதிய மின்சார கார் பற்றிய வீடியோவை வெளியிட்ட பிரபல நிறுவனம்... ஸ்கெட்ச் படமே செம்ம அட்டகாசமா இருக்கு!!

விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய மின்சார கார் பற்றிய டீசர் வீடியோவை பிரபல நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. அது எந்த நிறுவனம் என்பது பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம்.

புதிய மின்சார கார் பற்றிய வீடியோவை வெளியிட்ட பிரபல நிறுவனம்... ஸ்கெட்ச் படமே செம்ம அட்டகாசமா இருக்கு!!

உலகளவில் மின் வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, வாகன உற்பத்தி நிறுவனங்கள் மின் வாகனங்களைக் களமிறக்குவதில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கின்றன. இந்தியாவில், டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மற்றும் எம்ஜி ஆகிய நிறுவனங்கள் அதன் மின்சார கார்களைக் களமிறக்கிவிட்டன. மேலும், சில முன்னணி நிறுவனங்கள் விரைவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கின்றன.

புதிய மின்சார கார் பற்றிய வீடியோவை வெளியிட்ட பிரபல நிறுவனம்... ஸ்கெட்ச் படமே செம்ம அட்டகாசமா இருக்கு!!

இந்த நிலையில் பிரபல டொயோட்டா நிறுவனம் விரைவில் எஸ்யூவி ரக மின்சார காரை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த தகவலை புதிய வீடியோவாக டுவிட்டரில் அது தெரிவித்திருக்கின்றது. புதிய காரை உருவாக்கும் முன்பு வரையப்படம் ஸ்கெட் படத்தின் வீடியோவே அது. இது விரைவில் தயாரிக்கப்பட இருக்கும் டோயொட்டா எலெக்ட்ரிக் எந்த தோற்றத்தில் இருக்கும் என்பதை வெளிப்படுத்துகின்ற வகையில் அமைந்துள்ளது.

புதிய மின்சார கார் பற்றிய வீடியோவை வெளியிட்ட பிரபல நிறுவனம்... ஸ்கெட்ச் படமே செம்ம அட்டகாசமா இருக்கு!!

அந்தவகையில், புதிய டொயோட்டா எலெக்ட்ரிக் கார் நடுத்தர அளவுள்ள எஸ்யூவி வெர்ஷனில் அறிமுகமாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இக்கார் இ-டிஎன்ஜிஏ இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட இருக்கின்றது. இந்த இயங்கு தளத்தில் உருவாக்கப்பட இருக்கும் முதல் மின்சார கார் இதுவே ஆகும். இந்த தளத்தில்தான் எதிர்கால மின்சார வாகனங்கள் கட்டமைக்கப்பட இருக்கின்றன.

புதிய மின்சார கார் பற்றிய வீடியோவை வெளியிட்ட பிரபல நிறுவனம்... ஸ்கெட்ச் படமே செம்ம அட்டகாசமா இருக்கு!!

தொடர்ந்து, விரைவில் இக்கார்குறித்த சில முக்கிய தகவல்களை வெளியிட இருப்பதாகவும் டொயோட்டா அறிவித்துள்ளது. வரும் மாதங்களில் இது பற்றிய தகவல் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய இ-டிஎன்ஜிஏ இயங்கு தளத்தைக் கொண்டு புதிய ஹைபிரிட் கார்களையும் தயாரிக்க இருப்பதாக டொயோட்டா தெரிவித்திருக்கின்றது. ஆகையால், அனைத்துவிதமான தயாரிப்புகளையும் எளிதில் கட்டமைக்கக்கூடிய வசதியுடன் இந்த தளம் உருவாக்கப்பட்டு வருகின்றது.

புதிய மின்சார கார் பற்றிய வீடியோவை வெளியிட்ட பிரபல நிறுவனம்... ஸ்கெட்ச் படமே செம்ம அட்டகாசமா இருக்கு!!

மேலும், தன் சொந்த முயற்சியிலேயே மின்சார கார்களுக்கான பேட்டரிகளையும் டொயோட்டா நிறுவனம் தயாரித்து வருவதாக தகவல் வெளியிட்டிருக்கின்றது. ஆகையால், விரைவில் அறிமுகமாக இருக்கும் மின்சார கார்களில் அதன் நிறுழனத்துடைய பேட்டரிகளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய மின்சார கார் பற்றிய வீடியோவை வெளியிட்ட பிரபல நிறுவனம்... ஸ்கெட்ச் படமே செம்ம அட்டகாசமா இருக்கு!!

இதற்காக பானசோனிக் நிறுவனத்துடன் அது கூட்டு தொடங்கியிருக்கின்றது. இவ்விரு நிறுவனங்களும் இணைந்தே கார்களுக்கான பேட்டரி மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்க இருக்கின்றன. குறிப்பாக, அதிக வேகத்தில் சார்ஜாகம் வசதி மற்றும் நீடித்து உழைக்கும் திறனுடன் பேட்டரிகள் உருவாக்கப்பட இருக்கின்றன.

இதுதவிரே வேறெந்த தகவலும் தற்போது வெளியாகவில்லை. விரைவில் மின்சார கார்குறித்த பிற சுவாரஷ்ய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Unveils New Teaser Video For First New Generation Electric Car. Read In Tamil.
Story first published: Tuesday, December 8, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X