உங்களது டொயோட்டா அர்பன் க்ரூஸரை இன்னும் முரட்டுத்தனமானதாக மாற்றலாம்!! 20 ஆக்ஸஸரீகள் அறிவிப்பு

ரூ.50,000 மதிப்பிலான ஆக்ஸஸரீகள் டொயோட்டா அர்பன் க்ரூஸர் காருக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

உங்களது டொயோட்டா அர்பன் க்ரூஸரை இன்னும் முரட்டுத்தனமானதாக மாற்றலாம்!! 20 ஆக்ஸஸரீகள் அறிவிப்பு

டொயோட்டா நிறுவனம் இந்த வருட துவக்கத்தில் அதன் முதல் காம்பெக்ட் எஸ்யூவி காராக அர்பன் க்ரூஸரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால், தோற்றத்தில் இரண்டிற்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.

உங்களது டொயோட்டா அர்பன் க்ரூஸரை இன்னும் முரட்டுத்தனமானதாக மாற்றலாம்!! 20 ஆக்ஸஸரீகள் அறிவிப்பு

இந்த நிலையில் தோற்றத்தை இன்னும் முரட்டுத்தனமானதாக மாற்றும் நோக்கில் அர்பன் க்ருஸருக்கு அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகளை டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. 20 ஆக்ஸஸரீ பாகங்கள் அடங்கும் இந்த ஆக்ஸஸரீ தொகுப்பின் மொத்த மதிப்பு ரூ.52,749 ஆகும். இந்த 20 ஆக்ஸஸரீகளையும் அவற்றின் விலையுடன் கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.

உங்களது டொயோட்டா அர்பன் க்ரூஸரை இன்னும் முரட்டுத்தனமானதாக மாற்றலாம்!! 20 ஆக்ஸஸரீகள் அறிவிப்பு
Accesories Price
PVC 3D mat ₹3,392
3D boot mat ₹1,498
Mud flap set ₹794
Bumper corner protector ₹896
Fog lamp garnish ₹2,893
Front grille accent ₹2,099
Mid garnish ₹806
Tail lamp chrome garnish ₹1,267
Window frame kit ₹1,574
Rear bumper garnish ₹3,443
Number plate chrome garnish ₹845
Door visor chrome insert ₹3,174
Side skirt ₹5,818
Armrest black ₹3,264
Spoiler extension black ₹3,597
Side door cladding black ₹3,546
Wheel arch claddings ₹6,912
Non-illuminated door sill guard ₹909
Chrome door handles ₹1,510
Carbon fibre (ORVM + C-pillar + IRVM) ₹5,312
Total ₹52,749

டொயோட்டாவின் முதல் சப்-4 காம்பெக்ட் எஸ்யூவி காரான அர்பன் க்ரூஸர், மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸாவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும் டொயோட்டா நிறுவனத்திற்கே உரிய சிறு சிறு தொடுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

உங்களது டொயோட்டா அர்பன் க்ரூஸரை இன்னும் முரட்டுத்தனமானதாக மாற்றலாம்!! 20 ஆக்ஸஸரீகள் அறிவிப்பு

குறிப்பாக புதிய க்ரில் மற்றும் வித்தியாசமான பம்பர்கள் அர்பன் க்ரூஸரை விட்டாரா பிரெஸ்ஸாவில் இருந்து வேறுப்படுத்தி காட்டுகின்றன. நிறத்தேர்வுகளும் வேறுப்பட்டாலும், உட்புற கேபின் இரண்டிலும் ஒரே மாதிரியாகவே உள்ளது. அதேபோல் விட்டாரா பிரெஸ்ஸாவில் வழங்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் அர்பன் க்ரூஸரிலும் வழங்கப்படுகிறது.

உங்களது டொயோட்டா அர்பன் க்ரூஸரை இன்னும் முரட்டுத்தனமானதாக மாற்றலாம்!! 20 ஆக்ஸஸரீகள் அறிவிப்பு

அதிகப்பட்சமாக 105 பிஎச்பி மற்றும் 138 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மற்றும் 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. இந்த என்ஜினை போல் மைல்ட் ஹைப்ரீட் சிஸ்டத்தையும் விட்டாரா பிரெஸ்ஸாவில் இருந்து இந்த டொயோட்டா கார் பெற்றுள்ளது.

உங்களது டொயோட்டா அர்பன் க்ரூஸரை இன்னும் முரட்டுத்தனமானதாக மாற்றலாம்!! 20 ஆக்ஸஸரீகள் அறிவிப்பு

இவை மட்டுமின்றி எரிபொருள் திறனையும் இரு கார்களும் ஒரே மாதிரியாகவே கொண்டுள்ளன. அர்பன் க்ரூஸரின் மேனுவல் வெர்சன் 17.03கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் 18.76கிமீ மைலேஜையும் வழங்குகின்றன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆக்ஸஸரீகள் பொருத்தினால் உங்களது அர்பன் க்ரூஸர் மாருதி விட்டாராவில் இருந்து முற்றிலும் வேறுபடும்.

உங்களது டொயோட்டா அர்பன் க்ரூஸரை இன்னும் முரட்டுத்தனமானதாக மாற்றலாம்!! 20 ஆக்ஸஸரீகள் அறிவிப்பு

அர்பன் க்ரூஸருக்கு கஸ்டமைசேஷன் தேர்வுகளையும் டொயோட்டா வழங்குகிறது. மேலும் இந்த கஸ்டமைசேஷன் செயல்பாடுகளுக்கு பின் கார் எவ்வாறு டீலர்ஷிப் மையத்தில் இருந்து வெளிவரும் என்பதையும் இணையத்தள ரியல்-டைமில் பார்க்கலாம். கஸ்டமைசேஷன் தேர்வுகளை தற்சமயம் கிட்டத்தட்ட அனைத்து தயாரிப்பு நிறுவனங்களூம் தங்களது தயாரிப்புகளுக்கு வழங்குகின்றன.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Urban Cruiser compact SUV with over Rs. 50,000 worth official accessories
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X