டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் என்ற புதிய காம்பேக்ட் எஸ்யூவி எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்!

புதிய கார் உருவாக்கப் பணிகளுக்கான முதலீடுகளை பெருமளவு குறைக்கும் விதத்தில் டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய நிறுவனங்கள் கூட்டணியாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் சுஸுகியின் அங்கமாக செயல்பட்டு வரும் மாருதியின் கார்களை டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் எஞ்சினியரிங் முறையில் சிறிய மாற்றங்களை செய்து தனது பிராண்டில் அறிமுகப்படுத்தி வருகிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்!

முதல் மாடலாக மாருதி பலேனோ கார் டெயோட்டா பிராண்டில் க்ளான்ஸா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்த மாடலை களமிறக்கும் முனைப்பில் டொயோட்டா இறங்கி உள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்!

இதன்படி, இரண்டாவது மாடலாக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை ரீபேட்ஜ் எஞ்சினியரிங் முறையில் மாற்றங்களை செய்து வருகிறது டொயோட்டா கார் நிறுவனம். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவலை ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டு இருக்கிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்!

அதன்படி, வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த புதிய எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. அதாவது, கொரோனா தாக்கம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் இருந்து வேறுபடுத்தும் விதத்தில், புதிய க்ரில் அமைப்பு, பம்பர், ஹெட்லைட் க்ளஸ்ட்டர்களில் சிறிய மாற்றங்கள் செய்யபட்டு இருக்கும். இந்த காரில் புதிய டிசைனிலான அலாய் வீல்கள் பயன்படுத்தப்படும்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்!

அதேபோன்று, உட்புறத்திலும் சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். புதிய வண்ணத்திலான இன்டீரியர் மற்றும் புதிய வெளிப்புற வண்ணத் தேர்வுகளும் கொடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்!

இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்!

மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 17.03 கிமீ மைலேஜை வழங்கும். ஆட்டோமேட்டிக் மாடலில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்படுகிறது. இதனால், மேனுவல் கியர்பாக்ஸ் மாடலைவிட அதிக மைலேஜை வழங்கும். அதாவது, லிட்டருக்கு 18.76 கிமீ மைலேஜை வழங்கும் வாய்ப்பை பெறும்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி ரூ.7.50 லட்சம் முதல் ரூ.11.50 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் சலுகை திட்டங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்வதற்கான வாய்ப்புகளை டொயோட்டா வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
According to a media report, Toyota is planning to launch the Urban Cruiser compact SUV based on Maruti Vitara Brezza in India by August 2020.
Story first published: Wednesday, April 29, 2020, 11:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X