டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுக தேதி விபரம் வெளியானது

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் சப்-காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுக தேதி விபரம் வெளியானது

மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு முதல் மாடலாக மாருதி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் க்ளான்ஸா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா டொயோட்டா பிராண்டில் அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் வர இருக்கிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுக தேதி விபரம் வெளியானது

மாருதி பிரெஸ்ஸாவில் சிறிய மாற்றங்களை செய்து அர்பன் க்ரூஸர் எஸ்யூவியாக மாற்றி இருக்கிறது டொயோட்டா. இந்த எஸ்யூவி டொயோட்டா பிரியர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுக தேதி விபரம் வெளியானது

இந்த நிலையில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி வரும் 23ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. கடந்த மாதம் 22ந் தேதி முதலே இந்த எஸ்யூவிக்கு முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுக தேதி விபரம் வெளியானது

விலை அறிவிப்புக்கு முன்னரே, அதாவது வரும் 23ந் தேதிக்குள் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கான பராமரிப்புத் திட்டத்தை இலவசமாக வழங்க உள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுக தேதி விபரம் வெளியானது

இந்த நிலையில், வரும் 23ந் தேதி முறைப்படி டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே, மாருதி பிரெஸ்ஸா மீது வாடிக்கையாளர்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. இந்த சூழலில், டொயோட்டா மீதான கூடுதல் நம்பிக்கையில் இந்த புதிய மாடல் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுக தேதி விபரம் வெளியானது

புதிய அர்பன் க்ரூஸர் எஸ்யூவியில் மூன்று வேரியண்ட்டுகள் கொடுக்கப்பட உள்ளன. அனைத்து வேரியண்ட்டுகளிலுமே எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் வழங்கப்பட உள்ளது. 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுக தேதி விபரம் வெளியானது

இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுக தேதி விபரம் வெளியானது

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் லித்தியம் அயான் பேட்டரியுடன் கூடிய இன்டகிரேடட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் அடங்கி மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் இடம்பெற இருக்கிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுக தேதி விபரம் வெளியானது

புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்களுக்கும், மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கும் இது போட்டியாக அமையும். வரும் 18ந் தேதி வர இருக்கும் கியா சொனெட் எஸ்யூவியும் போட்டியாளராக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota has announced that the Urban Cruiser SUV will be launched on 23, September 2020.
Story first published: Tuesday, September 15, 2020, 14:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X