புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவிக்கான புக்கிங் தேதி விபரம் வெளியானது!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவிக்கு புக்கிங் மற்றும் டெலிவிரி எப்போது துவங்கப்பட உள்ளது என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

 புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவிக்கான புக்கிங் தேதி விபரம் வெளியானது!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் என்ற புதிய எஸ்யூவி மாடலுடன் விரைவில் களமிறங்க உள்ளது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் ரீபேட்ஜ் மாடலாக வர இருக்கும் அர்பன் க்ரூஸர் எஸ்யூவி சில மாற்றங்களுடன் வருகிறது.

 புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவிக்கான புக்கிங் தேதி விபரம் வெளியானது!

அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் வருகையை வாடிக்கையாளர் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில், டீசரும் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், டொயோட்டா டீலர்களின் சமூக வலைத்தள பக்கங்களில் இந்த காருக்கான புக்கிங் குறித்த முக்கியத் தகவல் வெளியாகி இருக்கிறது.

 புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவிக்கான புக்கிங் தேதி விபரம் வெளியானது!

அதாவது, வரும் 22ந் தேதி முதல் புதிய அர்பன் க்ரூஸர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கப்பட உள்ளதாக டொயோட்டா டீலர்களின் சமூக வலைத்தள பக்க பதிவுகள் தெரிவிக்கின்றன. மேலும், அடுத்த மாதம் பிற்பாதியில் டெலிவிரிப் பணிகள் துவங்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

 புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவிக்கான புக்கிங் தேதி விபரம் வெளியானது!

அதேநேரத்தில், டொயோட்டா நிறுவனத்திடம் இருந்து அர்பன் க்ரூஸர் எஸ்யூவி அறிமுகம் குறித்து அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் இதுவரை எமக்கு அனுப்பப்படவில்லை. இந்த மாத இறுதியில் முன்பதிவு துவங்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரும் 22ந் தேதி முன்பதிவு துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவிக்கான புக்கிங் தேதி விபரம் வெளியானது!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் தோற்றத்தை ஒத்திருக்கும் அதேநேரத்தில், சில குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் டொயோட்டா பிராண்டில் வர இருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, புதிய வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

 புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவிக்கான புக்கிங் தேதி விபரம் வெளியானது!

புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியில் 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் இடம்பெறும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும்.

 புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவிக்கான புக்கிங் தேதி விபரம் வெளியானது!

புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவில் வழங்கப்படும் பேஸ் வேரியண்ட்டுகள் இதில் கிடைக்காது என்பதால், ஆரம்ப விலை சற்று அதிகமாக இருக்கலாம். டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் விரைவில் வரும் கியா சொனெட் எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Kirloskar Motors (TKM) is all set to introduce their new product, the Urban Cruiser SUV in the Indian market. Ahead of its launch, certain dealers have informed that the pre-launch bookings for the compact-SUV will begin from the 22nd of August, with deliveries said to begin from mid-September. However, these are just dealer-level rumours at the moment, with Toyota yet to make any official statement, regarding the same.
Story first published: Wednesday, August 19, 2020, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X