டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் விபரம் கசிந்தது!

விரைவில் விற்பனைக்கு டொயோட்டா அர்பன் க்ரூஸர் வேரியண்ட்டுகள் விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் விபரம் கசிந்தது!

இந்தியாவில் 4 மீட்டர் நீளத்திற்குள் உருவாக்கப்படும் சப் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சந்தையில் ஏராளமான மாடல்கள் உள்ளன. இந்த நிலையில், வர்த்தகம் வளம் மிக்க இந்த சந்தையில் களமிறங்குவதற்கு பிற நிறுவனங்களும் ஆயத்தமாகி வருகின்றன.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் விபரம் கசிந்தது!

அந்த வகையில், டொயோட்டா கார் நிறுவனம் விரைவில் அர்பன் க்ரூஸர் என்ற புத்தம் புதிய எஸ்யூவி மாடலை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் ரீபேட்ஜ் மாடலாக வர இருக்கும் இந்த புதிய மாடலின் டீசர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வேரியண்ட் விபரங்கள் ஆட்டோகார் இந்தியா தளம் மூலமாக வெளியாகி இருக்கிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் விபரம் கசிந்தது!

புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியானது Mid, High மற்றும் Premium ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் இந்த வேரியண்ட்டுகள் கிடைக்கும். இந்த வேரியண்ட்டுகளில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் விபரம் கசிந்தது!

அர்பன் க்ரூஸர் மிட் வேரியண்ட்

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் விலை குறைவான இந்த வேரியண்ட்டில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல ஸ்டீல் வீல்கள், 2 டின் ஆியோ சிஸ்டம், புளூடூத் கனெக்ட்டிவிட்டி, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், கீ லெஸ் என்ட்ரி மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் விபரம் கசிந்தது!

அர்பன் க்ரூஸர் 'ஹை' வேரியண்ட்

மிட் வேரியண்ட்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக 16 அங்குல அலாய் வீல்கள், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் விபரம் கசிந்தது!

அர்பன் க்ரூஸர் 'பிரிமீயம்' வேரியண்ட்

விலை உயர்ந்த இந்த வேரியண்ட்டில் எல்இடி பனி விளக்குகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ஆட்டோ டிம் வசதியுடன் கூடிய உட்புற ரியர் வியூ மிரர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் அதே வசதிகள் தக்கவைக்கப்பட்டுள்ளன.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் விபரம் கசிந்தது!

எஞ்சின் விபரம்

புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. அனைத்து வேரியண்ட்டுகளிலும் இன்டகிரேடட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் கொண்ட மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட மாடலில் கிடைக்கும்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் விபரம் கசிந்தது!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியில் நீலம், பழுப்பு, வெள்ளை, ஆரஞ்ச், சில்வர் மற்றும் சாம்பல் ஆகிய 6 ஒற்றை வண்ணத் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. நீலம்- கருப்பு, பழுப்பு- கருப்பு மற்றும் ஆரஞ்ச் - வெள்ளை ஆகிய மூன்று விதமான இரட்டை வண்ணத் தேர்வுகளும் கொடுக்கப்படும்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Urban Cruiser variant wise features details leaked ahead of its launch in India.
Story first published: Tuesday, September 8, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X