மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்!

கொரோனா இடர்பாடுகளுக்கு இடையிலும் டொயோட்டா வெல்ஃபயர் கார் விற்பனையில் அசத்தி இருக்கிறது. டொயோட்டா வெல்ஃபயர் விற்பனை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தை திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு அமைந்துள்ளது.

விற்பனையில் அதகளப்படுத்தும் டொயோட்டா வெல்ஃபயர்... போட்டியாளர்கள் கலக்கம்!

இந்திய கார் மார்க்கெட்டில் மிகவும் நம்பகமான கார் பிராண்டாக டொயோட்டா உள்ளது. இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் ஆகிய இரண்டு மாடல்களும் டொயோட்டாவின் நம்பகத்தன்மையை தொடர்ந்து உயர்த்தி வருவதுடன், போட்டியாளர்களை பெருமூச்சு விட வைக்கும் அளவுக்கு தொடர்ந்து சிறப்பான இடத்தில் உள்ளன.

விற்பனையில் அதகளப்படுத்தும் டொயோட்டா வெல்ஃபயர்... போட்டியாளர்கள் கலக்கம்!

இந்தநிலையில், இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களைவிட மிகவும் விலை உயர்ந்த மாடலாக வெல்ஃபயர் சொகுசு எம்பிவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது டொயோட்டா. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வி க்ளாஸ் சொகுசு காருக்கு இணையான விலையிலும், ரகத்திலும் களமிறக்கப்பட்டது.

விற்பனையில் அதகளப்படுத்தும் டொயோட்டா வெல்ஃபயர்... போட்டியாளர்கள் கலக்கம்!

சொகுசு கார் மார்க்கெட்டில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு சிறப்பான மதிப்பு இருந்தபோதிலும், அதற்கு இணையான விலையில் வந்த டொயோட்டா வெல்ஃபயர் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. தொடர்ந்து விற்பனையில் அசத்தியும் வருகிறது. கடந்த மாதம் 49 வெல்ஃபயர் கார்களை விற்பனை செய்து டொயோட்டா அசத்தி இருக்கிறது. இது யாரும் எதிர்பாராத விற்பனை எண்ணிக்கை.

விற்பனையில் அதகளப்படுத்தும் டொயோட்டா வெல்ஃபயர்... போட்டியாளர்கள் கலக்கம்!

ஏனெனில், கொரோனா காலக்கட்டத்தை கடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், பொருளாதாரம் பாதிப்படைந்துள்ள சூழலில், டொயோட்டா வெல்ஃபயர் காரின் விற்பனை மிகப்பெரிய சாதனையாகவே பார்க்க முடிகிறது. மேலும், மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் காருக்கு கடும் நெருக்கடியாக அமைந்துள்ளது.

விற்பனையில் அதகளப்படுத்தும் டொயோட்டா வெல்ஃபயர்... போட்டியாளர்கள் கலக்கம்!

டொயோட்டா வெல்ஃபயர் கார் சொகுசு மினி வேன் ரகத்தில் வந்துள்ளது. இந்த கார் 4,935 மிமீ நீளமும், 1,850 மிமீ அகலமும், 1,895 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. 3,000 மிமீ வீல் பேஸ் நீளம் இருப்பதால், மிக சிறப்பான உட்புற இடவசதியை அளிக்கிறது. இந்த கார் 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ளது.

விற்பனையில் அதகளப்படுத்தும் டொயோட்டா வெல்ஃபயர்... போட்டியாளர்கள் கலக்கம்!

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், பெரிய பம்பர் அமைப்புடன், முகப்பில் க்ரோம் அலங்கார பாகங்கள் வசீகரமாக உள்ளது. இந்த காரில் 17 அங்குல ஹைப்பர் க்ரோம் அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிறிய ரூஃப் ஸ்பாய்லரும் அழகை கூட்டுகிறது.

விற்பனையில் அதகளப்படுத்தும் டொயோட்டா வெல்ஃபயர்... போட்டியாளர்கள் கலக்கம்!

மிக மிக சொகுசான ராஜ இருக்கைகளுடன் இந்த கார் வாடிக்கையாளர்களை முதல் பார்வையிலேயே சொக்க வைத்து வாங்கத் தூண்டுகிறது. சாய்மான வசதியுடன் லெதர் இருக்கைகள், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 10 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின் இருக்கை பயணிகளுக்கு 13 அங்குல டிவி திரை, வைஃபை வசதி ஆகியவை பயண அனுபவத்தை வேற லெவலில் வழங்குகிறது.

விற்பனையில் அதகளப்படுத்தும் டொயோட்டா வெல்ஃபயர்... போட்டியாளர்கள் கலக்கம்!

மேலும், இந்த காரில் பக்கவாட்டில் தள்ளி திறப்பதற்கான ஸ்லைடிங் கதவுகள் இருக்கின்றன. ஏறி, இறங்குவது மிக எளிதான விஷயமாக இருக்கிறது. ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம், ஏழு ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை அளிக்கிறது.

விற்பனையில் அதகளப்படுத்தும் டொயோட்டா வெல்ஃபயர்... போட்டியாளர்கள் கலக்கம்!

டொயோட்டா வெல்ஃபயர் கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்து இந்தியாவி்ல விற்பனை செய்யப்படுகிறது. ரூ.79.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இது மிக அதிக விலையாக கருதப்பட்ட நிலையில், இந்த காருக்கான வரவேற்பு டொயோட்டா பிராண்டின் மீது இந்தியர்களுக்கு நன்மதிப்பையும், நம்பகத்தன்மையையும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவே கருத முடிகிறது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Vellfire is the brand's flagship model in the country. It was officially launched back in February 2020. According to the recent sales report from the company, 49 unit of the Vellfire was sold in June.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X