டொயோட்டா வியோஸ் (யாரிஸ்) காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்

டொயோட்டா வியோஸ் (இந்தியாவில் யாரிஸ்) காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் செய்யப்பட்டு இருக்கும் மாற்றங்கள், இந்திய வருகை குறித்த பல முக்கியத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 டொயோட்டா வியோஸ் (யாரிஸ்) காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்

டொயோட்டா நிறுவனத்தின் மிட்சைஸ் செடான் கார் மாடலாக வியோஸ் கார் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விற்பனையில் உள்ளது. இதே கார் இந்தியாவில் யாரிஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டொயோட்டா யாரிஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

 டொயோட்டா வியோஸ் (யாரிஸ்) காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்

டொயோட்டா வியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலானது விரைவில் மலேசியா, சிங்கப்பூர், தைவான் உள்ளிட்ட நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இடைக்காலத்திற்கான புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

 டொயோட்டா வியோஸ் (யாரிஸ்) காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்

2021ம் ஆண்டு மாடலாக குறிப்பிடப்படும் டொயோட்டா யாரிஸ் காரில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய அலாய் வீல்கள், டொயோட்டா லெக்சஸ் கார்களை நினைவூட்டும் வகையிலான முகப்புத் தோற்றம் இடம்பெற்றுள்ளது.

 டொயோட்டா வியோஸ் (யாரிஸ்) காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்

டொயோட்டா லோகோவை தாக்கிப்பிடிக்கும் வகையிலான லோகோ அமைப்பு, அதற்கு கீழாக பெரிய ஏர்டேம் பகுதி பிரம்மாண்டமாக காட்டுகிறது. L-வடிவிலான பனி விளக்குகள் அறை அமைப்பும் முக்கிய மாற்றமாக குறிப்பிடலாம்.

 டொயோட்டா வியோஸ் (யாரிஸ்) காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்

இந்த காரில் மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். உட்புற கூரையில் கொடுக்கப்பட்டிருக்கும் ஏசி வென்ட்டுகள் இதன் முக்கிய அம்சமாக இருக்கிறது. சன்ரூஃப் வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் தொழில்நுட்பமும் உள்ளது.

 டொயோட்டா வியோஸ் (யாரிஸ்) காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்

இந்த காரில் 7 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், டிரைவிங் மோடுகள் என ஏராளமான பாதுகாப்பு அம்சங்களும், தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன.

 டொயோட்டா வியோஸ் (யாரிஸ்) காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் வந்துள்ள புதிய டொயோட்டா வியோஸ் காரில் இரண்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன. இதன் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 98 எச்பி பவரையும், 123 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

 டொயோட்டா வியோஸ் (யாரிஸ்) காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்

அடுத்து, இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 106 எச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

 டொயோட்டா வியோஸ் (யாரிஸ்) காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்

இந்திய மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் டொயோட்டா யாரிஸ் கார் மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த செக்மென்ட்டில் டாப்-3 இடங்களில் நுழைய முடியாவிட்டாலும், டொயோட்டா பிராண்டு பிரியர்களின் மிட்சைஸ் செடான் கார் விருப்பத்தை கச்சிதமாக பூர்த்தி செய்து வருகிறது.

 டொயோட்டா வியோஸ் (யாரிஸ்) காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்

இந்த நிலையில், புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி, புதிய ஹூண்டாய் வெர்னா கார்கள் அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. எனவே, டொயோட்டா யாரிஸ் காரிலும் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அவசியமாகி இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் யாரிஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota has introduced Vios facelift model in Philippines market today. It expected to launch in india with Yaris nameplate by end of this year.
Story first published: Saturday, July 25, 2020, 17:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X