பிரபலமான யாரிஸ் பெயரில் புதிய ஃபேஸ்லிஃப்ட் காரை களமிறக்கும் டொயோட்டா... படங்கள் இணையத்தில் கசிவு...

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் யாரிஸ் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்களை மோட்டார்1 செய்தி தளம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. அவற்றின் மூலம் வெளிவந்துள்ள இந்த காரை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரபலமான யாரிஸ் பெயரில் புதிய ஃபேஸ்லிஃப்ட் காரை களமிறக்கும் டொயோட்டா... படங்கள் இணையத்தில் கசிவு...

யாரிஸ், டொயோட்டா நிறுவனத்தின் சர்வதேச தயாரிப்பாகும். ஏனெனில் யாரிஸ் பெயரில் செடான், ஹேட்ச்பேக், ஹாட் ஹேட்ச் மற்றும் க்ராஸ்ஓவர் தோற்றத்தில் கார்களை இந்நிறுவனம் பல்வேறு நாட்டு சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது.

MOST READ: பருவமழை தொடங்க போகுது... மழை நீரில் இருந்து வாகனங்களை பாதுகாக்க எளிமையான வழி என்னென்ன..?

பிரபலமான யாரிஸ் பெயரில் புதிய ஃபேஸ்லிஃப்ட் காரை களமிறக்கும் டொயோட்டா... படங்கள் இணையத்தில் கசிவு...

இந்த நிலையில் தான் யாரிஸ் ஹேட்ச்பேக் மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை இந்த கார் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது. தற்போது இணையத்தில் கசிந்துள்ள இதன் படங்களில் காரின் முன்புற பகுதி கரோல்லா அல்டிஸ் மற்றும் அவலோன் மாடல்களில் உள்ளதை போன்ற டொயோட்டாவின் சர்வதேச ஸ்டைலில் உள்ளது.

பிரபலமான யாரிஸ் பெயரில் புதிய ஃபேஸ்லிஃப்ட் காரை களமிறக்கும் டொயோட்டா... படங்கள் இணையத்தில் கசிவு...

கூர்மையான வடிவில் எல்இடி ஹெட்லேம்ப், பெரிய தாழ்வான க்ரில் உடன் X-வடிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த டிசைனை லெக்ஸஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளில் பார்த்திருப்போம். இதேபோல் பம்பருக்கு இருபுறத்திலும் வழங்கப்பட்டுள்ள வில் வடிவிலான ஃபாக் விளக்கையும் சில டொயோட்டா மாடல்களில் பார்த்திருப்பீர்கள்.

பிரபலமான யாரிஸ் பெயரில் புதிய ஃபேஸ்லிஃப்ட் காரை களமிறக்கும் டொயோட்டா... படங்கள் இணையத்தில் கசிவு...

பின்புறத்தில் புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 மாடலில் உள்ளதை போன்ற டெயில்லேம்ப் பொருத்தப்பட்டுள்ளன. இருப்பினும் இரு டெயில்லேம்ப்களும் அந்த டொயோட்டா மாடலில் ஒன்றாக டெயில்கேட்டில் இணைக்கப்பட்டு இருந்தது. இதில் இணையவில்லை.

பிரபலமான யாரிஸ் பெயரில் புதிய ஃபேஸ்லிஃப்ட் காரை களமிறக்கும் டொயோட்டா... படங்கள் இணையத்தில் கசிவு...

ரூஃப் பார்ப்பதற்கே அட்டகாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. அலாய் சக்கரங்கள் இந்த படங்களில் மிகவும் எளிமையானதாக தெரிகிறது. இதனால் இதன் விற்பனை மாடலில் வேறுபட்ட அலாய் சக்கரங்களை எதிர்பார்க்கலாம். மற்றப்படி காரின் கேபினின் படங்கள் எதுவும் இதில் இடம்பெறவில்லை.

பிரபலமான யாரிஸ் பெயரில் புதிய ஃபேஸ்லிஃப்ட் காரை களமிறக்கும் டொயோட்டா... படங்கள் இணையத்தில் கசிவு...

ஆனால் யாரிஸ் ஹேட்ச்பேக் மாடலின் ஆயுட் காலத்தை சர்வதேச சந்தையில் அதிகரிக்கும் விதமாக இந்த கார் கொண்டுவரப்படுவதால் மற்ற டொயோட்டா மற்றும் லெக்ஸஸ் மாடல்களுக்கு இணையான விதத்தில் இதன் உட்புறத்தில் குறிப்பிடத்தகுந்த வகையில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ஆனால் காரின் அடிப்பகுதியில் என்ஜின் அமைப்பில் சிறு மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

பிரபலமான யாரிஸ் பெயரில் புதிய ஃபேஸ்லிஃப்ட் காரை களமிறக்கும் டொயோட்டா... படங்கள் இணையத்தில் கசிவு...

இந்த புதிய யாரிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுகத்தை இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த வருட துவக்கத்திலோ எதிர்பார்க்கலாம். இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களுடன் தான் புதிய யாரிஸ் செடான் மாடலும் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபலமான யாரிஸ் பெயரில் புதிய ஃபேஸ்லிஃப்ட் காரை களமிறக்கும் டொயோட்டா... படங்கள் இணையத்தில் கசிவு...

இவ்வாறு அப்டேட்களை பெற்றுவரும் யாரிஸ் செடான் மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி, அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சுசுகி சியாஸ் மாடல்கள் உள்ளன.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Yaris facelift patent images leaked in internet
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X