ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டை தொடர்ந்து 2020 டொயோட்டா ஹிலுக்ஸ் ஃபேஸ்லிஃப்ட் தாய்லாந்தில் அறிமுகம்...

ஃபார்ச்சூனரை ஃபேஸ்லிஃப்ட்டை தொடர்ந்து ஹிலுக்ஸ் ரெவொ மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை டொயோட்டா நிறுவனம் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகையில் தாய்லாந்து நாட்டு சந்தையில் வெளியாகியுள்ள இந்த ஹிலுக்ஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டை தொடர்ந்து 2020 டொயோட்டா ஹிலுக்ஸ் ஃபேஸ்லிஃப்ட் தாய்லாந்தில் அறிமுகம்...

பிக்அப் ஸ்டைலில் உள்ள இந்த எஸ்யூவி மாடலிலும் கவனிக்கத்தக்க வகையில் அப்டேட்களை டொயோட்டா நிறுவனம் கொண்டுவந்துள்ளது. ரொக்கோ, ப்ரீரன்னர், இசட் எடிசன் மற்றும் ஸ்டாண்டர்ட் என்ற நான்கு விதமான டீசல் வேரியண்ட்களில் இந்த 2020 ஃபேஸ்லிஃப்ட் கார் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டை தொடர்ந்து 2020 டொயோட்டா ஹிலுக்ஸ் ஃபேஸ்லிஃப்ட் தாய்லாந்தில் அறிமுகம்...

இதில் முதல் இரு வேரியண்ட்கள் 4-கதவு வடிவமைப்பிலும், மற்ற இரு வேரியண்ட்கள் 2-கதவு வடிவமைப்பிலும் கிடைக்கும். ஹிலுக்ஸ் மாடலின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் வழக்கமான கேப்-ஆக சிவி பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ளது. மேலும் இந்த வேரியண்ட் கேப்+சேசிஸ் மாடலாகவும் கிடைக்கும்.

ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டை தொடர்ந்து 2020 டொயோட்டா ஹிலுக்ஸ் ஃபேஸ்லிஃப்ட் தாய்லாந்தில் அறிமுகம்...

இத்தகைய தோற்றத்திலான ஹிலுக்ஸ் ரெவொ மாடல் தான் பெரும்பான்மையாக ஆம்புலன்ஸ், வேன், சர்வீஸ் ட்ரக், தீயணைப்பு வாகனங்களாக பயன்படுத்தப்படுகிறது. இசட் எடிசன் ஸ்டைலாக இருக்கும், அதேநேரத்தில் அதிக திறனையும் கொண்டிருக்கும்.

ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டை தொடர்ந்து 2020 டொயோட்டா ஹிலுக்ஸ் ஃபேஸ்லிஃப்ட் தாய்லாந்தில் அறிமுகம்...

இவ்வாறு வெவ்வேறு வடிவமைப்பிலான வேரியண்ட்களால் 2020 ஹிலுக்ஸ் ரெவோ பிக்அப் மாடல் 587,000 பாட்-ல் (ரூ.14.04 லட்சம்) இருந்து அதிகப்பட்சமாக 1,080,000 பாட் (ரூ.25.80 லட்சம்) வரையில் தாய்லாந்தில் எக்ஸ்ஷோரூம் விலையை பெற்றுள்ளது.

ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டை தொடர்ந்து 2020 டொயோட்டா ஹிலுக்ஸ் ஃபேஸ்லிஃப்ட் தாய்லாந்தில் அறிமுகம்...

இதன் ஆரம்ப விலையில் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டும், அதிகப்பட்ச விலையில் ரொக்கோ வேரியண்ட்டும் விற்பனை செய்யப்படவுள்ளது. ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்பட்டுள்ள என்ஜின் தேர்வுகளை தான் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலும் பெற்றுள்ளது.

ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டை தொடர்ந்து 2020 டொயோட்டா ஹிலுக்ஸ் ஃபேஸ்லிஃப்ட் தாய்லாந்தில் அறிமுகம்...

இந்த வகையில் இந்த இரு ஃபேஸ்லிஃப்ட் மாடல்களுக்கும் வழங்கப்பட்டுள்ள 2.4 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகள் முறையே 201 பிஎச்பி/500 என்எம் டார்க்திறன் மற்றும் 148 பிஎச்பி/400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியவை.

ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டை தொடர்ந்து 2020 டொயோட்டா ஹிலுக்ஸ் ஃபேஸ்லிஃப்ட் தாய்லாந்தில் அறிமுகம்...

இந்த என்ஜின் தேர்வுகளுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 4-வீல் ட்ரைவ் சிஸ்டமும் தேர்வாக வழங்கப்படும். இவை தவிர்த்து ஏகப்பட்ட ப்ரிமியம் தரத்திலான தொழிற்நுட்ப வசதிகளையும் ஹிலுக்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெற்றுள்ளது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2020 Toyota hilux facelift was released in Thailand
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X