Just In
- 41 min ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 2 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 4 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடுத்த ஆண்டு கனவு நிறைவேற போகிறது... டெஸ்லா இந்தியாவிற்கு வருவதை உறுதி செய்த நிதின் கட்காரி!
டெஸ்லா நிறுவனம் அடுத்த ஆண்டு இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையை தொடங்கவுள்ளது என்ற தகவலை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உறுதி செய்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் ரேஞ்ச் மற்றும் சொகுசு என அனைத்து அம்சங்களிலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கின்றன. இதை விட தொழில்நுட்பத்தில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களை அடித்து கொள்ள ஆளே இல்லை என்ற நிலை உள்ளது.

சீனா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வந்தாலும், இந்தியாவில் இன்னும் கால்பதிக்கவில்லை. டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகையை இங்குள்ள வாடிக்கையாளர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். டெஸ்லா நிறுவனத்தின் பெயர் இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது.

டெஸ்லா நிறுவனத்திற்கு உலக அளவில் இருக்கும் அந்தஸ்தை இந்திய வாடிக்கையாளர்கள் அறிந்தும் வைத்துள்ளனர். இந்தியா மிகவும் லாபகரமான சந்தை என்பதால், இங்கு எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை தொடங்குவது தொடர்பாக டெஸ்லா நிறுவனத்திற்கு இருக்கும் எண்ணத்தை எலான் மஸ்க்கும் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக டிவிட்டரில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது, இந்தியாவிற்கு வருவது குறித்து எலான் மஸ்க் பேசியுள்ளார். இந்த சூழலில் டெஸ்லா நிறுவனம் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வரவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. டெஸ்லா நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக மாடல் 3 (Tesla Model 3) காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், இதற்கு வரும் ஜனவரி முதல் முன்பதிவுகள் ஏற்கப்படவுள்ளதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாடிக்கையாளர்களுக்கு கார்கள் டெலிவரி செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியானது. இந்தியாவில் உள்ள டெஸ்லா கார் பிரியர்கள் மத்தியில் இந்த செய்தி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் டெஸ்லா நிறுவனம் 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிற்கு வரும் என்பதை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தற்போது உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. டெஸ்லா நிறுவனம் ஆரம்பத்தில் கார்களை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இங்கு உற்பத்தி ஆலையை அமைப்பது குறித்து டெஸ்லா நிறுவனம் பரிசீலனை செய்யும்.

டெஸ்லாவின் இந்திய வருகையை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்காரி உறுதி செய்திருப்பது, டெஸ்லா கார் பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படும் மாடல் 3 காருக்கு, 55 லட்ச ரூபாய் முதல் 60 லட்ச ரூபாய் வரையில் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் இன்னும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் பெரிய அளவில் ஏற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுதான் மத்திய மற்றும் மாநில அரசுகள் அந்த பணிகளில் வேகம் காட்ட தொடங்கியுள்ளன. எனவே வரும் காலங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என நம்பலாம்.