இந்தியாவை கலக்க வரும் எலெக்ட்ரிக் கார்கள்... பாத்த உடனே வாங்கலாம்ணு யோசிப்பீங்க... அவ்வளவு சூப்பர்

இந்தியாவை கலக்க வரும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்கள் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இந்தியாவை கலக்க வரும் எலெக்ட்ரிக் கார்கள்... பாத்த உடனே வாங்கலாம்ணு யோசிப்பீங்க... அவ்வளவு சூப்பர்

பெட்ரோல், டீசல் வாகனங்களில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருப்பதால், உலகம் வெகு வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகிறது. இந்தியாவிலும் கூட தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் மெல்ல மெல்ல பிரபலமடைய தொடங்கியுள்ளன. ஹூண்டாய் கோனா, எம்ஜி இஸட்எஸ், டாடா நெக்ஸான் உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்கள் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

இந்தியாவை கலக்க வரும் எலெக்ட்ரிக் கார்கள்... பாத்த உடனே வாங்கலாம்ணு யோசிப்பீங்க... அவ்வளவு சூப்பர்

எனினும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மின்சார கார்களின் எண்ணிக்கை தற்போதைய நிலையில் மிகவும் குறைவுதான். ஆனால் வரும் காலங்களில் அந்த குறை நிவர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம், கூடிய விரைவில் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அப்படி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலை இனி பார்க்கலாம்.

இந்தியாவை கலக்க வரும் எலெக்ட்ரிக் கார்கள்... பாத்த உடனே வாங்கலாம்ணு யோசிப்பீங்க... அவ்வளவு சூப்பர்

மஹிந்திரா இஎக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் (Mahindra eXUV300 Electric)

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில், இஎக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டது. கிட்டத்தட்ட தயாரிப்புக்கு உகந்த நிலையில் காட்சிக்கு வைக்கப்பட்ட அந்த கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், 2021ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவை கலக்க வரும் எலெக்ட்ரிக் கார்கள்... பாத்த உடனே வாங்கலாம்ணு யோசிப்பீங்க... அவ்வளவு சூப்பர்

மஹிந்திரா இஎக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரில், 40 kWh பேட்டரி தொகுப்பு, 130 எச்பி எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படவுள்ளன. இந்த காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், தோராயமாக 300 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருடன் இது போட்டியிடும்.

இந்தியாவை கலக்க வரும் எலெக்ட்ரிக் கார்கள்... பாத்த உடனே வாங்கலாம்ணு யோசிப்பீங்க... அவ்வளவு சூப்பர்

நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் (Nissan Leaf EV)

நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்ற பேச்சு மிக நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஆனால் தற்போது வரை விற்பனைக்கு வரவில்லை. எனினும் நடப்பாண்டு இறுதியில் அல்லது 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இந்தியாவை கலக்க வரும் எலெக்ட்ரிக் கார்கள்... பாத்த உடனே வாங்கலாம்ணு யோசிப்பீங்க... அவ்வளவு சூப்பர்

நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் காரில், 110 kW பவர் மற்றும் 320 என்எம் டார்க் திறனை வழங்கும் திறன் வாய்ந்த 40 kWh இ-பவர்ட்ரெயின் இடம்பெறும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 7.9 வினாடிகளில் எட்டும் திறனை இந்த கார் பெற்றிருக்கும். 50 kW சார்ஜரை பயன்படுத்தினால், 40-60 நிமிடங்களில், பேட்டரியை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும்.

இந்தியாவை கலக்க வரும் எலெக்ட்ரிக் கார்கள்... பாத்த உடனே வாங்கலாம்ணு யோசிப்பீங்க... அவ்வளவு சூப்பர்

அதே சமயம் 7 kW சார்ஜரை பயன்படுத்தினால், பேட்டரி 100 சதவீதம் நிரம்புவதற்கு 7.5 மணி நேரம் வரை ஆகும். இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் மற்றும் ஹூண்டாய் கோனா உள்ளிட்ட கார்களுடன் நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் கார் போட்டியிடும்.

இந்தியாவை கலக்க வரும் எலெக்ட்ரிக் கார்கள்... பாத்த உடனே வாங்கலாம்ணு யோசிப்பீங்க... அவ்வளவு சூப்பர்

மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக் (Maruti WagonR EV)

மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார், 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன் வாய்ப்பே இல்லை. சார்ஜிங் ஸ்டேஷன் கட்டமைப்பு வசதிகள் பெரிய அளவில் இல்லாதது, பேட்டரியின் அதிகப்படியான விலை உள்ளிட்ட காரணங்களால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவை கலக்க வரும் எலெக்ட்ரிக் கார்கள்... பாத்த உடனே வாங்கலாம்ணு யோசிப்பீங்க... அவ்வளவு சூப்பர்

உருவம் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில், வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார், சமீபத்தில் சாலை சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. இதன் ஸ்பை படங்களை வைத்து பார்க்கையில், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறை வேகன்ஆர் ஹேட்ச்பேக் அடிப்படையில், வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவை கலக்க வரும் எலெக்ட்ரிக் கார்கள்... பாத்த உடனே வாங்கலாம்ணு யோசிப்பீங்க... அவ்வளவு சூப்பர்

ஸ்டாண்டர்டு மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன்களுடன் மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஸ்டாண்டர்டு சார்ஜரை பயன்படுத்தினால் பேட்டரி முழுமையாக நிரம்ப 7 மணி நேரம் வரை ஆகலாம் எனவும், ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், வெறும் 60 நிமிடங்களில் பேட்டரியை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவை கலக்க வரும் எலெக்ட்ரிக் கார்கள்... பாத்த உடனே வாங்கலாம்ணு யோசிப்பீங்க... அவ்வளவு சூப்பர்

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் (Tata Altroz Electric)

2019ம் ஆண்டு நடைபெற்ற ஜெனீவா மோட்டார் ஷோ திருவிழாவில், டாடா அல்ட்ராஸ் பிரீமியம் எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் வெளியிடப்பட்டது. இந்திய மார்க்கெட்டில் வரும் 2021ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. 30 kWh திறன் வாய்ந்த பேட்டரி தொகுப்புடன் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவை கலக்க வரும் எலெக்ட்ரிக் கார்கள்... பாத்த உடனே வாங்கலாம்ணு யோசிப்பீங்க... அவ்வளவு சூப்பர்

இந்த காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 300 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். ஃபாஸ்ட் டிசி சார்ஜரை பயன்படுத்தினால், இந்த காரின் பேட்டரியை வெறும் 60 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். இந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் இதுவும் ஒன்று.

இந்தியாவை கலக்க வரும் எலெக்ட்ரிக் கார்கள்... பாத்த உடனே வாங்கலாம்ணு யோசிப்பீங்க... அவ்வளவு சூப்பர்

ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் (Renault Kwid Electric)

இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் காராக இது இருக்கும். பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் ரெனால்ட் நிறுவனம் க்விட் எலெக்ட்ரிக் காரை காட்சிப்படுத்தியது. CMF-A பிளாட்பார்ம் அடிப்படையில் ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்படுகிறது.

இந்தியாவை கலக்க வரும் எலெக்ட்ரிக் கார்கள்... பாத்த உடனே வாங்கலாம்ணு யோசிப்பீங்க... அவ்வளவு சூப்பர்

ரெனால்ட் க்விட் மின்சார காரில், 26.8 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு மற்றும் 44 பிஎஸ் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படவுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்ட இந்த கார் 10.8 வினாடிகளை எடுத்து கொள்ளும். டாப் ஸ்பீடு மணிக்கு 105 கிலோ மீட்டர்கள். பேட்டரியை முழுமையாக நிரப்பினால், 271 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Upcoming Electric Cars - Nissan Leaf EV To Renault Kwid Electric. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X