எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் இப்படிதான் இருக்கும் போல!! ஹம்மரின் எலக்ட்ரிக் எஸ்யூவி...

ஹம்மர் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் விபரங்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் இனி பார்ப்போம்.

எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் இப்படிதான் இருக்கும் போல!! ஹம்மரின் எலக்ட்ரிக் எஸ்யூவி...

ஹம்மர் பிராண்டை சொந்தமாக கொண்டிருக்கும் ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்மாக இந்த பிராண்டில் இருந்து வெளிவரவுள்ள எலக்ட்ரிக் எஸ்யூவி காரை பற்றிய முதல் தொகுப்பு விபரங்களை கடந்த 2020 அக்டோபர் மாதத்தில் வெளியிட்டு இருந்தது.

எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் இப்படிதான் இருக்கும் போல!! ஹம்மரின் எலக்ட்ரிக் எஸ்யூவி...

அவற்றின் மூலமாக இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலுக்கும் அதன் முந்தைய தலைமுறைக்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் உள்ளதை அறிந்திருந்தோம். இந்த நிலையில்தான் தற்போது இந்த எலக்ட்ரிக் மாடலை பற்றிய கூடுதல் விபரங்கள் கிடைத்துள்ளன.

எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் இப்படிதான் இருக்கும் போல!! ஹம்மரின் எலக்ட்ரிக் எஸ்யூவி...

இதுதொடர்பாக வெளியாகியுள்ள படம், முதலீட்டாளர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்டதுபோல் உள்ளது. ஏனெனில் இந்த எஸ்யூவியின் மாதிரி ஒன்று நிறுத்தப்பட்டிருக்க அருகில் நிறுவனத்தின் நிர்வாக துணை இயக்குனர் டக் பார்க்ஸ் மற்றும் சிஇஒ மேரி பர்ரா உள்ளனர்.

ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350? உங்களுக்கான பதில் இந்த வீடியோவில்!

நீளமான மேற்கூரையுடன் கார் முழுவதும் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்த நிலையில் இந்த படத்தில் காட்சியளிக்கிறது. மேலும் இந்த எஸ்யூவி மாடலின் முன்பக்கம் மற்றும் பருத்த ஃபெண்டர்கள் நமக்கு ஹம்மர் பிக்அப் ட்ரக்கை தான் ஞாபகப்படுத்துகின்றன.

எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் இப்படிதான் இருக்கும் போல!! ஹம்மரின் எலக்ட்ரிக் எஸ்யூவி...

வெள்ளை நிறத்துடன் மேற்கூரை கருப்பு நிறத்தில் உள்ளது. இத்தகைய நிற கலவையையும் ஹம்மர் பிக்அப் ட்ரக்கில் பார்த்துள்ளோம். இந்த வகையில் ஹம்மர் பிக்அப் ட்ரக்கின் ரீ-பேட்ஜ்டு வெர்சனாக வெளிவரும் இந்த எஸ்யூவி மாடலின் மேற்கூரை நகர்த்த முடியாதப்படி நிரந்தரமானதாக வழங்கப்படவுள்ளது.

எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் இப்படிதான் இருக்கும் போல!! ஹம்மரின் எலக்ட்ரிக் எஸ்யூவி...

ஹம்மர் எஸ்யூவி பெரும்பான்மையான வசதிகளையும் இயந்திர பாகங்களையும் ஹம்மர் எஸ்யூடி மாடலில் இருந்து பெறவுள்ளது. இதன் காரணமாக அந்த எஸ்யூடி மாடலில் வழங்கப்பட்டுள்ளதுபோல் தனித்தனி பேனல்களில் ‘HUMMER'-எழுத்துகள் மற்றும் எல்இடி ஹெட்லைட்களை இந்த எஸ்யூவி காரிலும் எதிர்பார்க்கலாம்.

எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் இப்படிதான் இருக்கும் போல!! ஹம்மரின் எலக்ட்ரிக் எஸ்யூவி...

ஹம்மர் எலக்ட்ரிக் எஸ்யூவியில் 35 இன்ச் மற்றும் 37 இன்ச் தேர்வுகளில் அலாய் சக்கரங்கள் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றப்படி இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலின் உட்புறம் மற்றும் பின்புற பகுதி எவ்வாறு இருக்கும் என்பது தெரியவில்லை. நிச்சயம் ஹம்மர் எலக்ட்ரிக் பிக்அப் வாகனத்தில் உள்ளதை போல் கொண்டுவரப்படலாம்.

எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் இப்படிதான் இருக்கும் போல!! ஹம்மரின் எலக்ட்ரிக் எஸ்யூவி...

இயக்கத்திற்கு ஹம்மர் எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் முற்றிலும் புதிய அல்டியம் பேட்டரிகள் மூன்று-மோட்டார் செட்அப் உடன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பின் மூலமாக அதிகப்பட்சமாக 15,600 ஆர்பிஎம்-ல் 1000 பிஎச்பி பவரை பெற முடியும் என தகவல்கள் கூறுகின்றன.

ஜென்ரல் மோட்டாட்ர்ஸ் கார்பிரேஷன் நிறுவனம் அதன் எலக்ட்ரிக் பிக்அப் ட்ரக்கை அடுத்த 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தது. இதனால் இந்த ஹம்மர் எலக்ட்ரிக் எஸ்யூவி 2022-லோ அல்லது 2023-லோ விற்பனைக்கு வரலாம்.

Most Read Articles

மேலும்... #ஹம்மர் #hummer
English summary
Hummer Electric SUV Unofficially Revealed During Investor Meet
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X