பின் இருக்கை பயணிகளுக்கும் காற்றுப்பைகள்... பாதுகாப்பில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பென்ஸ் கார்கள்

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள 2021 எஸ்-க்ளாஸ் செடான் மாடல் சிறப்பம்சமாக பின் இருக்கை பயணிகளுக்கும் பாதுகாப்பிற்கு காற்றுப்பைகள் வழங்கவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பின் இருக்கை பயணிகளுக்கும் காற்றுப்பைகள்... பாதுகாப்பில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பென்ஸ் கார்கள்...

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் 2021 எஸ்-க்ளாஸ் செடான் காரை வருகின்ற செப்டம்பர் 2ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக உலகளவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கிடையில் காரை பற்றிய விபரங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

பின் இருக்கை பயணிகளுக்கும் காற்றுப்பைகள்... பாதுகாப்பில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பென்ஸ் கார்கள்...

இந்த வகையில் தற்போது காரின் பின் இருக்கை பயணிகளுக்கும் காற்றுப்பைகள் வழங்கப்பட்டிருக்கும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தொழிற்நுட்பம் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் மற்ற கார்களுக்கு மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் முன்னோடியாக விளங்கும் என தயாரிப்பு நிறுவனம் முன்பு கூறியிருந்தது உறுதியாகுகிறது.

பின் இருக்கை பயணிகளுக்கும் காற்றுப்பைகள்... பாதுகாப்பில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பென்ஸ் கார்கள்...

காற்றுப்பைகள் வழங்கப்பட்டுள்ள இந்த காரின் பின் இருக்கையில், பெல்ட் பேக் மற்றும் காற்று ஊதப்பட்ட இருக்கை பெல்ட் போன்ற தேர்வுகளுடன் குழந்தைகளுக்கான இருக்கைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து மெர்சிடிஸ் நிறுவனத்தால் பகிரப்பட்டுள்ள படத்தில் பின் இருக்கை பயணிகளுக்கான காற்றுப்பைகள் முன் இருக்கைகளுக்கு பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

பின் இருக்கை பயணிகளுக்கும் காற்றுப்பைகள்... பாதுகாப்பில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பென்ஸ் கார்கள்...

இந்த கூடுதல் காற்றுப்பைகள், கிரிக்கெட்டில் விக்கேட்கீப்பர் அணிந்திருக்கும் கையுறையின் தோற்றத்தில் உள்ளன. இதனால் இதன் மூலமாக பயணிகள் விபத்தின்போது கூடுதலாக பாதுகாக்கப்படுவர். இந்த பாதுகாப்பு தொழிற்நுட்பம் மட்டுமின்றி இந்த 2021 செடான் கார் முன் பாதுகாப்பான உந்துவிசை பக்க செயல்பாடு அமைப்பையும் ஏற்றுள்ளது.

பின் இருக்கை பயணிகளுக்கும் காற்றுப்பைகள்... பாதுகாப்பில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பென்ஸ் கார்கள்...

இது ரேடார் சென்சார் மூலமாக பக்கவாட்டு மோதலை தவிர்க்க உதவும். இருப்பினும் உடனடியாக மோதல் ஏற்படுமாயின் முன் இருக்கை பயணிகளை குஷின் மூலமாக காரின் மையத்திற்கு தள்ளிவிடும். அதேநேரத்தில் இ-ஆக்டிவ் பாடி கண்ட்ரோல் சஸ்பென்ஷனும் வாகனம் மொத்தத்திற்கும் செயல்படும் என்பதால் மோதல், வலுவான காரின் கீழ் பேனல்கள் மூலமாக திசை திருப்பப்பட்டுவிடும்.

பின் இருக்கை பயணிகளுக்கும் காற்றுப்பைகள்... பாதுகாப்பில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பென்ஸ் கார்கள்...

இந்த பாதுகாப்பு தொழிற்நுட்பங்களை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த விபத்து ஆராய்ச்சியில் கற்று கொண்டதின் மூலமாக தயாரித்து வழங்குவதாக தெரிவித்துள்ளது. இவை மெர்சிடிஸ் கார்களை மட்டும் பாதுகாக்க போவதில்லை, மாறாக மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்கு அருகில் சாலையில் செல்லும் வாகனங்களையும் பாதுகாக்கும்.

பின் இருக்கை பயணிகளுக்கும் காற்றுப்பைகள்... பாதுகாப்பில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பென்ஸ் கார்கள்...

முன்னதாக மெர்சிடிஸ் புதிய எஸ்-க்ளாஸ் செடான் காரின் உட்புற வசதிகளையும் வெளியிட்டு இருந்தது. இதில் 3டி நாவிகேஷன் வரைபடங்கள் மற்றும் புதிய எம்பக்ஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை முக்கியமாக சிறப்பம்சங்களாக உள்ளன.

பின் இருக்கை பயணிகளுக்கும் காற்றுப்பைகள்... பாதுகாப்பில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பென்ஸ் கார்கள்...

இவற்றுடன் இதன் கேபினில் மொத்தம் ஐந்து திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு முன் பயணிகளுக்கும், மீதி மூன்று பின் பயணிகளுக்கானதாகும். இதில் வாகனத்தின் முக்கிய கண்ட்ரோல் திரையாக 12.8 இன்ச்சில் ஒலட் தொடுத்திரை விளங்கும்.

பின் இருக்கை பயணிகளுக்கும் காற்றுப்பைகள்... பாதுகாப்பில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பென்ஸ் கார்கள்...

இந்த புதிய திரையின் வருகையினால் மைய கன்சோலில் இருந்து 27 பொத்தான்கள் நீக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. க்ளைமேட் கண்ட்ரோல் ஓட்டுனரின் எளிய பயன்பாட்டிற்கு திரையின் அடிப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
World’s first rear-seat airbags will be seen in upcoming 2021 Mercedes S-Class
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X