மஹிந்திரா டியூவி300 எஸ்யூவிலும் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்!! 2021 துவக்கத்தில் கொண்டுவரப்படுகிறது

அப்டேட் செய்யப்பட்ட 2021 மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் இரவு நேரத்தின்போது இந்திய சாலையில் மீண்டும் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவிலும் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்!! 2021 துவக்கத்தில் கொண்டுவரப்படுகிறது

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 மற்றும் ஸ்கார்பியோ கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த தீவிரமாக உள்ளது. இதனால் இந்த இரு எஸ்யூவி கார்களும் இந்திய சாலையில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகின்றன.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவிலும் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்!! 2021 துவக்கத்தில் கொண்டுவரப்படுகிறது

இந்த இரு மாடல்கள் மட்டுமின்றி வேறு சில அப்கிரேட் மாடல்களையும் மஹிந்திரா நிறுவனம் அவ்வப்போது சோதனைகளில் ஈடுப்படுத்தி இருந்தது. இந்த வகையில் விரைவில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெறவுள்ள 2021 மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் கார் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவிலும் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்!! 2021 துவக்கத்தில் கொண்டுவரப்படுகிறது

2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெறவுள்ள டியூவி300 மாடலை மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் முதன்முதலாக அறிமுகம் செய்து சில வருடங்களாகி விட்டது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பெக்ட் எஸ்யூவி காரை போன்று வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறாததினால் இந்த காருக்கு அப்கிரேடை வழங்க மஹிந்திரா நிறுவனம் யோசித்து வந்தது.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவிலும் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்!! 2021 துவக்கத்தில் கொண்டுவரப்படுகிறது

2021ல் ஒரு வழியாக டியூவி300 மற்றும் டியூவி300 ப்ளஸ் கார்களுக்கு ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வழங்கப்படவுள்ளது. தோற்றத்தில் தற்சமயம் விற்பனையில் உள்ள இவற்றின் தற்போதைய வெர்சனுக்கும் விரைவில் வழங்கப்படவுள்ள ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்கும் பெரிய அளவில் வேறுபாடு இருக்காது, மிகவும் சிறிய அளவிலான மாற்றங்களே இருக்கும்.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவிலும் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்!! 2021 துவக்கத்தில் கொண்டுவரப்படுகிறது

காடிவாடி செய்திதளம் மூலமாக தற்போது கிடைத்துள்ள ஸ்பை படங்களில் டியூவி300 காரின் பின்பக்கம் மற்றும் நீளம், அகலம் & உயரம் போன்ற பரிமாண அளவுகளில் எந்தவொரு மாற்றமும் கொண்டுவரப்படாததை பார்க்க முடிகிறது. ஃபேஸ்லிஃப்ட் மாற்றத்தினால் முன்பக்கம் மட்டும் சிறிது திருத்தியமைக்கப்பட்டிருக்கும்.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவிலும் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்!! 2021 துவக்கத்தில் கொண்டுவரப்படுகிறது

முன்பக்கத்தில் 6 செங்குத்தான ஸ்லாட்களுடன் அப்டேட்டான க்ரில், கூடுதல் கோண ஃபாக் விளக்கு உடன் மறு வேலை செய்யப்பட்ட பம்பர் மற்றும் அகலமான ஏர் இன்லெட் உள்ளிட்டவற்றை சோதனை கார் கொண்டுள்ளதை மறைப்புகளை தாண்டி நம்மால் பார்க்க முடிகிறது.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவிலும் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்!! 2021 துவக்கத்தில் கொண்டுவரப்படுகிறது

பின்பக்கத்தில் செங்குத்தாக பொருத்தப்பட்ட டெயில்லேம்ப்கள் மற்றும் உதிரி சக்கரத்துடன் டெயில்கேட்டை இந்த கார் கொண்டுள்ளது. சக்கரங்களுக்கு மேலே சதுர வடிவில் வளைவுகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றப்படி இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வழக்கமான 1.5 லிட்டர் டீசல் என்ஜின்தான் பிஎஸ்6 தரத்தில் 2021 டியூவி300-ல் வழங்கப்படவுள்ளது.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவிலும் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்!! 2021 துவக்கத்தில் கொண்டுவரப்படுகிறது

இதனுடன் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினையும் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் மஹிந்திரா நிறுவனம் வழங்கலாம். அதுவே டியூவி300 ப்ளஸ் மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது. இவற்றின் 2021 ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றுவரலாம்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Updated 2021 Mahindra TUV300 Plus Spotted Testing Again In India
Story first published: Wednesday, December 30, 2020, 23:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X