வால்வோ இந்தியா பஸ் நிறுவனத்தை கையகப்படுத்துகிறது வால்வோ- ஐஷர் நிறுவனம்!

சொகுசு பஸ் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக உள்ள வால்வோ நிறுவனத்தை வால்வோ - ஐஷர் கூட்டணி நிறுவனம் கையகப்படுத்த உள்ளது. இது இந்திய பஸ் வாகன சந்தையில் மிக முக்கிய ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

 வால்வோ இந்தியா பஸ் நிறுவனத்தை கையகப்படுத்துகிறது வால்வோ- ஐஷர் நிறுவனம்!

இந்தியாவின் சொகுசு பஸ் மார்க்கெட்டில் வால்வோ நிறுவனத்தின் தயாரிப்புகள்தான் முன்னிலை வகிக்கின்றன. நீண்ட தூர ஊர்களுக்கு அலுப்பில்லாமல், மிக விரைவான, அதேசமயம் பாதுகாப்பான பயணத்தை வழங்குவதில் வால்வோ பஸ்கள் இந்தியர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்துள்ளன.

 வால்வோ இந்தியா பஸ் நிறுவனத்தை கையகப்படுத்துகிறது வால்வோ- ஐஷர் நிறுவனம்!

இந்த நிலையில், வால்வோ இந்தியா பஸ் தயாரிப்பு நிறுவனத்தை நாட்டின் முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனமாக உள்ள ஐஷர் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் வால்வோ - ஐஷர் நிறுவனம் கையகப்படுத்த உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு வால்வோ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து, இந்தியாவில் வால்வோ டிரக் விற்பனையை ஐஷர் மேற்கொண்டு வருகிறது.

 வால்வோ இந்தியா பஸ் நிறுவனத்தை கையகப்படுத்துகிறது வால்வோ- ஐஷர் நிறுவனம்!

வால்வோ - ஐஷர் நிறுவனத்தின் கீழ் ஐஷர் பிராண்டின் டிரக், பஸ்களும், வால்வோ டிரக்குகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வால்வோ இந்தியா பஸ் நிறுவனத்தையும் ஐஷர் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் வால்வோ - ஐஷர் நிறுவனம் கையகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

 வால்வோ இந்தியா பஸ் நிறுவனத்தை கையகப்படுத்துகிறது வால்வோ- ஐஷர் நிறுவனம்!

ரூ.100.5 கோடி மதிப்பீட்டில் வால்வோ இந்தியா பஸ் தயாரிப்பு நிறுவனத்தை வால்வோ- ஐஷர் நிறுவனம் கையகப்படுத்த உள்ளது. இதன்மூலமாக, பெங்களூர் அருகே ஒஸக்கோட்டையில் செயல்பட்டு வரும் வால்வோ இந்தியா பஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை ஐஷர் குழுமத்தின் கீழ் செயல்படும் வால்வோ- ஐஷர் நிறுவனம் வசம் செல்கிறது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 500 தொழிலாளர்கள் வால்வோ- ஐஷர் குழுமத்தின் நிர்வாகத்தின் கீழ் மாற்றப்பட உள்ளனர்.

 வால்வோ இந்தியா பஸ் நிறுவனத்தை கையகப்படுத்துகிறது வால்வோ- ஐஷர் நிறுவனம்!

வால்வோ இந்தியா பஸ் நிறுவனத்தை கையகப்படுத்த இருப்பதன் மூலமாக, இந்திய வர்த்தக வாகன சந்தையில் மிக வலுவான நிறுவனங்களில் ஒன்றாக வால்வோ - ஐஷர் வர்த்தக வாகன நிறுவனம் மாறி இருக்கிறது. குறிப்பாக, பிரிமீயம் பஸ் மார்க்கெட்டில் மிக வலுவான நிலையை எட்டுவதற்கான வாய்ப்பு ஐஷர் குழுமத்திற்கு கிடைத்துள்ளது.

 வால்வோ இந்தியா பஸ் நிறுவனத்தை கையகப்படுத்துகிறது வால்வோ- ஐஷர் நிறுவனம்!

ஐஷர் பிராண்டின் மூலமாக பஸ் சந்தையில் மிக வலுவான சந்தையை வைத்துள்ளோம். இந்த நிலையில், வால்வோ பஸ்கள் மூலமாக இந்த சந்தையில் எங்களது வர்த்தகம் மேலும் வலுவானதாக மாறும் என்று வால்வோ- ஐஷர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. வால்வோ - ஐஷர் நிறுவனத்தின் தலைவராக ஆகாஷ் பாஸி செயல்பட உள்ளார். இவர் வால்வோ- ஐஷர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வினோத் அகர்வாலின் கீழ் பணியாற்றுவார்.

 வால்வோ இந்தியா பஸ் நிறுவனத்தை கையகப்படுத்துகிறது வால்வோ- ஐஷர் நிறுவனம்!

இந்த புதிய கையகப்படுத்துதல் நடவடிக்கை குறித்து வால்வோ - ஐஷர் வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் லால் குறிப்பிடுகையில்," இந்த தருணம் ஐஷர் மோட்டார் மற்றும் வால்வோ நிறுவனங்களுக்கு இடையிலான வர்த்தக பிணைப்பை மேலும் வலுவாக மாற்றி இருக்கிறது. பாதுகாப்பு, சொகுசு அம்சங்கள் மூலமாக வால்வோ பஸ்கள் இந்தியாவின் நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் முத்திரை பதித்துள்ளன. எங்களது வால்வோ - ஐஷர் கூட்டணி நிறுவனத்தில் வால்வோ இந்தியா பஸ் நிறுவனமும் இணைந்திருப்பது பெரு மகிழ்ச்சியையும், பெருமையையும் தருகிறது," என்று தெரிவித்துள்ளார்.

 வால்வோ இந்தியா பஸ் நிறுவனத்தை கையகப்படுத்துகிறது வால்வோ- ஐஷர் நிறுவனம்!

வால்வோ இந்தியா பஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கான ஒப்பந்த நடைமுறைகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வால்வோ பஸ்களின் தயாரிப்பு, அசெம்பிள் செய்யும் பணிகள், விற்பனை ஆகியவை இனி வால்வோ - ஐஷர் வர்த்தக வாகன நிறுவனத்தின் கீழ் நடைபெறும். எதிர்காலத்தில் வால்வோ பஸ்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
English summary
VECV has announced that the company will acquire Volvo India bus business unit for Rs 100.5 crore.
Story first published: Thursday, August 13, 2020, 18:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X