டவுன்பேமண்ட் இல்லாமல் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்களை வாங்கலாம்!

கார் குத்தகைக்கு விடும் திட்டம் மற்றும் டவுன்பேமண்ட் இல்லாத சிறப்பு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம். அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டவுன்பேமண்ட் இல்லாமல் புது ஃபோக்ஸ்வேகன் கார் வாங்கலாம்!

கொரோனாவால் கடந்த இரண்டு மாதங்களாக கார் விற்பனை அடியோடு பாதித்துள்ளது. தேசிய ஊரடங்கு தளர்த்தப்பட்டபோதிலும், கொரோனா பிரச்னையால் கார் விற்பனை இயல்புக்கு திரும்புவதற்கு பல மாதங்கள் பிடிக்கும் என தெரிகிறது. வரும் பண்டிகை காலத்தில்தான் ஓரளவு இயல்புக்கு வரலாம். அதுவும் கொரோனா பிரச்னை கட்டுக்குள் வந்தால் மட்டுமே இது சாத்தியம்.

டவுன்பேமண்ட் இல்லாமல் புது ஃபோக்ஸ்வேகன் கார் வாங்கலாம்!

இந்த நிலையில், கார் விற்பனையை அதிகரிக்கும் விதத்தில், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல சிறப்பு திட்டங்களை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. சிறப்பு சேமிப்புச் சலுகைகள், சிறப்பு கடன் திட்டங்கள், குத்தகை திட்டங்கள் போன்றவை வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

டவுன்பேமண்ட் இல்லாமல் புது ஃபோக்ஸ்வேகன் கார் வாங்கலாம்!

இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் கார் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. டவுன்பேமண்ட் இல்லாமல் புதிய கார்களை எளிய கடன் திட்டங்களில் பெறுவதற்கான அறிவிப்பை ஃபோக்ஸ்வேகன் கொண்டு வந்துள்ளது.

டவுன்பேமண்ட் இல்லாமல் புது ஃபோக்ஸ்வேகன் கார் வாங்கலாம்!

பவர் லீஸ் என்ற பெயரில் வந்துள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார் குத்தகை திட்டத்தின் கீழ், பயன்படுத்துவதற்கு மட்டும் கட்டணம் என்ற கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வருடாந்திர திட்டத்தின் அடிப்படையில் கார்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்த முடியும்.

MOST READ: கொரோனாவோடு சேர்ந்து கூத்தடிக்கும் வெட்டுக்கிளிகள்... விமானங்களுக்கு காத்திருக்கும் பேராபத்து!

டவுன்பேமண்ட் இல்லாமல் புது ஃபோக்ஸ்வேகன் கார் வாங்கலாம்!

பவர் லீஸ் திட்டத்தில் டவுண்பேமண்ட் பிரச்னை இல்லாமல் குறைவான வாடகையில் கார்களை நீண்ட கால அடிப்படையில் பயன்படுத்தலாம். இன்ஸ்யூரன்ஸ் கட்டும் அவசியம் இல்லை என்பதுடன் குறைவான பராமரிப்புக் கட்டணத்துடன் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. பை பேக் திட்டத்துடன் கிடைக்கிறது.

டவுன்பேமண்ட் இல்லாமல் புது ஃபோக்ஸ்வேகன் கார் வாங்கலாம்!

அடுத்து, டவுன்பேமண்ட் இல்லாமல், புதிய வென்ட்டோ மற்று டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார்களை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு தோதுவான மாதத் தவணையுடன் கடன் திட்டம் வழங்கப்படும். இதில், மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கான காப்பீட்டு கட்டணமும் சேர்க்கப்பட்டுவிடும்.

MOST READ: உலகின் முதல் 9 சீட்டர் மின்சார விமானம் வெற்றிகரமாக பறந்தது!

டவுன்பேமண்ட் இல்லாமல் புது ஃபோக்ஸ்வேகன் கார் வாங்கலாம்!

மேலும், இந்த திட்டங்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஆன்லைன் மூலமாக தெரிந்து கொள்வதற்கும், கட்டண விபரங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஸ்டீபன் நாப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Most Read Articles

English summary
Volkswagen has announced special car loan schemes to boost car sales in India.
Story first published: Saturday, May 30, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X