Just In
- 1 hr ago
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- 2 hrs ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 4 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 15 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
Don't Miss!
- News
சீனாவின் உகான் லேப்ல இருந்துதான்...கொரோனா வைரஸ் பரவியது...ஆதாரங்களை முன்வைக்கும் அமெரிக்கா!
- Sports
எதிரணி வீரர்களை சீண்டறது கீழ்த்தரமானது.. இதுமூலமா நம்மோட பலவீனம்தான் வெளிப்படும்!
- Movies
திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை.. பைலட் மீது டிவி நடிகை பரபரப்பு புகார்!
- Finance
நரேந்திர மோடியின் செம அறிவிப்பு.. புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கண்ணை கவரும் வெள்ளை & சிவப்பு நிறத்தில் ஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம்...
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் புதிய சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் போலோ மற்றும் வெண்டோ கார்களின் ஸ்பெஷல் எடிசன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய எடிசன் கார்களை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் பண்டிகை கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த புதிய ஸ்பெஷல் எடிசன்கள் அத்தகைய நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக அமைகின்றன.

போலோ மற்றும் வெண்டோ கார் மாடல்களின் புதிய டிசைன்களின் எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.9.19 லட்சம் மற்றும் ரூ.11.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் கார்களை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வாடிக்கையாளர்கள் வாங்கும் வகையில் சந்தைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும்.

வழக்கமான கார்களுடன் ஒப்பிடுகையில் சுற்றிலும் காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் இந்த ஸ்பெஷல் எடிசன்கள் போலோவின் ஹைலைன் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிலும், வெண்டோவின் ஹைலைன் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிலும் வழங்கப்பட்டுள்ளது.

இவை முக்கிய அம்சமாக மாடலை பொறுத்து ப்ளாஷ் சிவப்பு, மறையும் சூரியனின் சிவப்பு மற்றும் கேண்டி வெள்ளை நிறங்களில் வழங்கப்படவுள்ளன. இந்த வகையில் போலோ ஹேட்ச்பேக்கின் ஸ்பெஷல் எடிசன் சிவப்பு நிறத்திலும் மேற்கூரை வெள்ளை நிறத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேநேரம் வெண்டோ ஸ்பெஷல் எடிசன் வெள்ளை- கருப்பு என்ற இரட்டை வண்ணத்தில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் மேற்கூரையின் நிறத்தில்தான் காரின் பக்கவாட்டு ஸ்ட்ரிப்கள், ரூஃப்-ஸ்பாய்லர் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடி, காரின் இரு நிறங்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கீழே ஸ்பெஷல் எடிசனிற்கான முத்திரை இரு கார்களிலும் உள்ளது.

இந்த புதிய லிமிடேட் எடிசன் கார்களை அறிமுகப்படுத்தியது குறித்து ஃபோக்ஸ்வேகன் பயணிகள் கார்கள் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஸ்டீஃபன் க்னாப் கூறுகையில், "எங்கள் வருடாந்திர பண்டிகை பிரச்சாரமான ‘வோக்ஸ்ஃபெஸ்ட் 2020'-இன் கீழ் போலோ மற்றும் வென்டோவில் எங்கள் சிறப்பு சிவப்பு & வெள்ளை பதிப்பை அறிமுகப்படுத்தியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

எங்கள் தனிப்பட்ட மற்றும் மேம்பட்ட அம்ச சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து ஈடுபடுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப இந்த முயற்சி உள்ளது. போலோ மற்றும் வென்டோ தொடர்ந்து தங்கள் பிரிவுகளுக்குள் வலுவான போட்டியாளர்களாகத் தொடர்கின்றன. இந்த நிலையில் இந்த ஸ்டைல் அப்கிரேட்கள் எங்களது வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவிலான மதிப்பை உருவாக்கும்" என்றார்.

காஸ்மெட்டிக் மாற்றங்களை தவிர்த்து இந்த இரு ஸ்பெஷல் எடிசன்களில் வேறெந்த இயந்திர மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. போலோ மற்றும் வெண்டோ ஆட்டோமேட்டிக் கார்களில் 109 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.