டிகுவான் எஸ்யூவி காரை ப்ளக்-இன் ஹைப்ரீட் வெர்சனில் கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்!!

ஜெர்மனை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முற்றிலும் புதிய டிகுவான் இ-ஹைப்ரீட் எஸ்யூவி காரின் உலகளாவிய அறிமுகம் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

டிகுவான் எஸ்யூவி காரை ப்ளக்-இன் ஹைப்ரீட் வெர்சனில் கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்!!

ஃபோக்ஸ்வேகனின் எலக்ட்ரிக் போக்குவரத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த இ-ஹைப்ரீட் எஸ்யூவி கார் வெளிவருகிறது. இதன் விலை ஜெர்மன் சந்தையில் 42,413 யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.38 லட்சமாகும்.

டிகுவான் எஸ்யூவி காரை ப்ளக்-இன் ஹைப்ரீட் வெர்சனில் கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்!!

இந்த எஸ்யூவி காருக்கான முன்பதிவுகளை ஏற்கனவே ஃபோக்ஸ்வேகன் ஏற்க துவங்கிவிட்டது. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தன்னை ஈடுப்படுத்தி கொண்டுள்ளதால், டிகுவான் இ-ஹைப்ரிட், CO2-நடுநிலை நிறுவனமாக 2050 க்குள் மாறுவதற்கான ஃபோக்ஸ்வேகனின் முக்கியமான படி ஆகும்.

டிகுவான் எஸ்யூவி காரை ப்ளக்-இன் ஹைப்ரீட் வெர்சனில் கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்!!

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் இ-ஹைப்ரீட் கார் லைஃப், நேர்த்தி மற்றும் ஆர்-லைன் என்ற மூன்று தொழிற்நுட்ப தொகுப்புகளில் ஜெர்மனி உள்பட சில வெளிநாட்டு சந்தைகளில் கிடைக்கும். இதன் உடன் டிகுவான் எஸ்யூவி காரில் வழங்கப்படும் அம்சங்களும் இந்த ஹைப்ரீட் காரில் வழங்கப்பட்டுள்ளன.

டிகுவான் எஸ்யூவி காரை ப்ளக்-இன் ஹைப்ரீட் வெர்சனில் கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்!!

இந்த வகையில் டிஜிட்டல் காக்பிட், 3-நிலை ஆட்டோமேட்டிக் ஏசி, பெடல்கள் உடன் லெதரில் பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் காரை பார்க் செய்வதற்கான உதவி, 17 இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் மேற்கூரை தண்டவாளங்கள் உள்ளிட்டவற்றை டிகுவான் இ-ஹைப்ரீட் காரும் பெற்றுள்ளது.

டிகுவான் எஸ்யூவி காரை ப்ளக்-இன் ஹைப்ரீட் வெர்சனில் கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்!!

அதேபோல் அனைத்து டிகுவான் மாடல்களும் ஒரே பாதையை தொடர்வதற்கான உதவி, மொபைல் போன் இண்டர்ஃபேஸ், மழை வருவதை அறியும் வசதி மற்றும் எல்இடி ஹெட்லைட்கள் உள்ளிட்டவற்றை பெறுகின்றன. முற்றிலும் புதிய டிகுவான் இ-ஹைப்ரீட் எஸ்யூவி காரில் 1.4 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்பட்டுள்ளது.

டிகுவான் எஸ்யூவி காரை ப்ளக்-இன் ஹைப்ரீட் வெர்சனில் கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்!!

6-ஸ்பீடு ட்யுல்-க்ளட்ச் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகின்ற இந்த என்ஜின் அமைப்பின் மூலமாக அதிகப்பட்சமாக 400 என்எம் டார்க் திறனை பெற முடியும். இந்த ப்ளக்-இன் ஹைப்ரீட் என்ஜின் அமைப்பு 241 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். மேலும் ஒட்டுனர் டிகுவான் ஹைப்ரீட் காரில் மேனுவலாகவும் ஜிடிஇ மோட்-ஐ ஆக்டிவேட் செய்யலாம்.

டிகுவான் எஸ்யூவி காரை ப்ளக்-இன் ஹைப்ரீட் வெர்சனில் கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்!!

இது ஹைப்ரீடில் கூடுதல் பூஸ்டராகவும் செயல்படும். வெறும் எலக்ட்ரிக் மோட்டாரின் ஆற்றலிலேயே காரை 50கிமீ தூரம் வரை இயக்கி செல்ல முடியும். பின் சக்கரங்களுக்கு முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி தொகுப்பை வழக்கமான 2.3 கிலோவாட்ஸில் இருந்து 3.6 கிலோவாட்ஸ் வரையிலான சார்ஜர்களை பயன்படுத்தி சார்ஜ் ஏற்றலாம்.

டிகுவான் எஸ்யூவி காரை ப்ளக்-இன் ஹைப்ரீட் வெர்சனில் கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்!!

இதனால் சார்ஜிங் நிலையத்திற்கு தான் காரை எடுத்து செல்ல வேண்டும் என்றில்லை, வீட்டு மின்சாரத்தை உபயோகப்படுத்தியும் பேட்டரியை சார்ஜ் செய்யலாம். ப்ளக்-இன் ஹைப்ரீட் ட்ரைவ் ப்ரோக்ராம்டு செய்யப்பட்டுள்ளதால், பேட்டரி போதுமான அளவு சார்ஜ் செய்யப்படும் காரை இவி மோடில் ஸ்டார்ட் செய்யவும் முடியும்.

Most Read Articles
English summary
All-New Volkswagen Tiguan eHybrid Launched Globally
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X