புதிய எம்கே8 கோல்ஃப் ஜிடிஐ மாடலை பற்றிய கூடுதல் விபரங்களை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்...

விரைவில் அறிமுகமாகவுள்ள பிரபல ஹேட்ச்பேக் மாடலான கோல்ஃப்-ன் எட்டாம் தலைமுறை காரின் ஜிடிஐ வெர்சனின் கூடுதல் தகவல்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த வார துவக்கத்தில் இணையம் மூலமாக நடைபெற்ற ஊடக சந்திப்பில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

புதிய எம்கே8 கோல்ஃப் ஜிடிஐ மாடலை பற்றிய கூடுதல் விபரங்களை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்...

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கோல்ஃப் ஹேட்ச்பேக் மாடலின் எட்டாம் தலைமுறை காரை எம்கே8 என்ற பெயரில் கடந்த ஆண்டு இறுதியில் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து இதன் ஜிடிஐ வெர்சன் குறித்த தகவல்களை முதன்முதலாக கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியிட்டு இருந்தது.

புதிய எம்கே8 கோல்ஃப் ஜிடிஐ மாடலை பற்றிய கூடுதல் விபரங்களை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்...

தற்போது மூன்று மாதங்கள் கழித்து எம்கே8 மாடலின் இந்த புதிய வெர்சனை பற்றிய கூடுதல் தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி பார்க்கும்போது புதிய ஜிடிஐ வெர்சனும் வழக்கமான இஏ888 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் மூலமாக தான் இயங்கவுள்ளது தெரிய வருகிறது.

MOST READ: மொத்தமா செக் வெச்சுட்டாங்க... டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?

புதிய எம்கே8 கோல்ஃப் ஜிடிஐ மாடலை பற்றிய கூடுதல் விபரங்களை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்...

இந்த பெட்ரோல் என்ஜின் எம்கே7.5 ஜிடிஐ மாடலிலும் வழங்கப்பட்டிருந்தாலும், இந்த புதிய தலைமுறை காரில் அதிகப்பட்சமாக 245 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவுள்ளது. இது எம்கே7.5 மாடலை காட்டிலும் 15 பிஎச்பி மற்றும் 20 என்எம் டார்க் திறன் அதிகமாகும்.

புதிய எம்கே8 கோல்ஃப் ஜிடிஐ மாடலை பற்றிய கூடுதல் விபரங்களை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்...

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் நிலையாக இணைக்கப்படவுள்ளது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ட்யூல்-க்ளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸையும் கூடுதல் தேர்வாக பெறலாம். இவற்றுடன் எக்ஸ்டிஎஸ் எலக்ட்ரானிக் டிஃபெர்ண்டியல் லாக்-ஐயும் புதிய வாகன டைமானிக் மேனேஜருடன் எம்கே8 ஜிடிஐ மாடல் பெற்றுள்ளது.

MOST READ: 1,500 கிமீ பயணிக்கும் தொழிலாளர்கள்... இவங்க சைக்கிள் வாங்கியது எப்படினு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க...

புதிய எம்கே8 கோல்ஃப் ஜிடிஐ மாடலை பற்றிய கூடுதல் விபரங்களை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்...

இதன் மூலமாக டைனாமிக் சேசிஸ் கண்ட்ரோல் அடாப்டிவ் டேம்பர்களின் எக்ஸ்டிஎஸ் மற்றும் பக்கவாட்டு என்ற இரு செயல்பாடுகளையும் கண்ட்ரோல் செய்ய முடியும். காரின் ஸ்போர்ட் அமைப்பில் டிஃபெர்ண்டியலின் லாக்கிங் டார்க்கை அதிகரித்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த புதிய காரில் வளைவுகளில் வேகமாக செயல்படும் திறனை வழங்கியுள்ளது.

புதிய எம்கே8 கோல்ஃப் ஜிடிஐ மாடலை பற்றிய கூடுதல் விபரங்களை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்...

கம்ஃபர்ட், ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் அமைப்புகளுடன் எட்டாம் தலைமுறை கோல்ஃப் ஜிடிஐ வெர்சன் சுதந்திரமான ட்ரைவிங் மோட்-ஐயும் பெற்றுள்ளது. அதாவது இந்த சுதந்திர மோடில் கம்ஃபர்ட் மற்றும் ஸ்போர்ட் முன்னமைப்புகளை பயன்படுத்துவதற்கு பதிலாக ஓட்டுனர் ஸ்லைடருடன் டிசிசி டேம்பிங்கை அட்ஜெஸ்ட் செய்ய முடியும்.

MOST READ: கொரோனா ரணகளத்திலும் மாருதிக்கு கிளுகிளுப்பூட்டிய புதிய விட்டாரா பிரெஸ்ஸா!

புதிய எம்கே8 கோல்ஃப் ஜிடிஐ மாடலை பற்றிய கூடுதல் விபரங்களை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்...

எனவே இந்த மோடில் தேவையான சாஃப்ட்னஸ் மற்றும் ஸ்டிஃப்னஸ்ஸையும் ஓட்டுனரே அதிகரித்து கொள்ள முடியும். சிறப்பான ஹேண்ட்லிங் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்படுதிறனிற்காக ஸ்ப்ரிங் ரேட்கள் முன்புறத்தில் 5 சதவீத அளவிலும், பின்புறத்தில் 15 சதவீத அளவிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்புற ஃப்ரேம்மும் இந்த புதிய வெர்சனில் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய எம்கே8 கோல்ஃப் ஜிடிஐ மாடலை பற்றிய கூடுதல் விபரங்களை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்...

இதன் காரணமாக காரின் மொத்த எடையில் 3 கிலோ குறைந்துள்ளது. இவைமட்டுமின்றி குறைவான வேகத்தில் திரும்ப வேண்டிய வளைவுகளிலும் வேகமாக கார் திரும்புவதற்காக மேம்படுத்தப்பட்ட பின்புற நிலைத்தன்மையை கூடுதல் நடுநிலையான ஸ்டேரிங் மற்றும் ஹையர் கார்னரிங் க்ரிப் உடன் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்கியுள்ளது.

MOST READ: கொரோனா அச்சத்தால் இந்தியர்கள் எடுக்கும் திடீர் முடிவு... அவங்க காட்ல இனி பண மழை கொட்ட போகுது

புதிய எம்கே8 கோல்ஃப் ஜிடிஐ மாடலை பற்றிய கூடுதல் விபரங்களை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்...

முன்னதாக ஜெர்மனியின் லோயர் சக்ஸோனி பகுதியில் உள்ள எறா-லெஸ்ஸின் டெஸ்ட் ட்ராக்கில் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்ட எம்கே8 ஜிடிஐ மாடல் தற்போதைய எம்கே7 மாடலை காட்டிலும் நான்கு வினாடிகள் வேகமாக சோதனை தூரத்தை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Volkswagen Reveals More Info About The Upcoming Mk8 Golf GTI
Story first published: Tuesday, May 19, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X