ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் க்ராஸ்ஓவர் மாடலின் அடிப்படையில் செடான் கார்... இதுதான் அதன் தோற்றமாம்...

ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் மாடலை அடிப்படையாக கொண்ட மிட்-சைஸ் செடான் மாடலின் தோற்றத்தை டிஜிட்டல் முறையில் டிஜிட்டல் கலைஞர் க்ளெபர் சில்வா என்பவர் பெஹன்ஸ் என்ற தளத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் க்ராஸ்ஓவர் மாடலின் அடிப்படையில் செடான் கார்... இதுதான் அதன் தோற்றமாம்...

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சமீபத்தில் தான் நிவுஸ் க்ராஸ்ஓவர் மாடலை கூபே டிசைனில் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்தது. இன்னும் சில மாதங்களில் பிரேசில் நாட்டில் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த க்ராஸ்ஓவர் கூபே மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் க்ராஸ்ஓவர் மாடலின் அடிப்படையில் செடான் கார்... இதுதான் அதன் தோற்றமாம்...

இந்த நிலையில் தான் நிவுஸ் க்ராஸ்ஓவர் மாடலின் அடிப்படையிலான செடான் மாடலின் டிஜிட்டல் தோற்றம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விர்டுஸ் மிட்-சைஸ் செடான் மாடலில் இருந்து சில டிசைன் அம்சங்களை ஏற்றுள்ள நிவுஸ் செடான் மாடலில் ரூஃப் லைன் மிகவும் சாய்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் க்ராஸ்ஓவர் மாடலின் அடிப்படையில் செடான் கார்... இதுதான் அதன் தோற்றமாம்...

இதன் காரணமாக கூபே செடான் மாடலின் தோற்றத்தை பெற்றுள்ள இந்த கார் நிச்சயம் இளம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும். முன்புறமானது க்ரில், பொனெட், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் அகலமான ஏர்-டேம்களில் நிவுஸ் மாடலை அதிகளவில் ஒத்து காணப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் க்ராஸ்ஓவர் மாடலின் அடிப்படையில் செடான் கார்... இதுதான் அதன் தோற்றமாம்...

அலாய் சக்கரங்களின் டிசைன் விர்டுஸ் செடானை ஒத்துள்ளது. இதுமட்டுமின்றி, சக்கர அச்சுகள் மற்றும் பெல்ட்-லைன் மற்றும் பக்கவாட்டு பகுதியின் கீழ் பகுதி உள்ளிட்டவையும் விர்டுஸ் மாடலில் இருந்து பெறப்பட்டுள்ளது. பின்புற பகுதி நிவுஸ் கூபே எஸ்யூவி மாடலை காட்டிலும் கூடுதலான இன்-லைன்களுடன் உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் க்ராஸ்ஓவர் மாடலின் அடிப்படையில் செடான் கார்... இதுதான் அதன் தோற்றமாம்...

பின்பக்கத்தில் எல்இடி தரத்தில் புதிய ஸ்டைலில் டெயில்-லேம்ப்கள், பூட் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்பாய்லர், முரட்டுத்தனமான தோற்றத்தில் விண்ட்ஸ்க்ரீன் மற்றும் அதிகளவில் க்ரீஸஸ் மற்றும் வளைவுகளை கொண்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் க்ராஸ்ஓவர் மாடலின் அடிப்படையில் செடான் கார்... இதுதான் அதன் தோற்றமாம்...

ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் க்ராஸ்ஓவர் மாடலை பொறுத்தவரையில், 1.0 லிட்டர், 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சனாக 128 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது.

ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் க்ராஸ்ஓவர் மாடலின் அடிப்படையில் செடான் கார்... இதுதான் அதன் தோற்றமாம்...

என்ஜின் இந்த ஆற்றலை 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக முன் சக்கரங்களுக்கு வழங்கும். உட்புறத்தில் இந்த காரில் 10.1 இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் மாடலானது எம்க்யூபி ஏ0 ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டதாகும்.

ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் க்ராஸ்ஓவர் மாடலின் அடிப்படையில் செடான் கார்... இதுதான் அதன் தோற்றமாம்...

இந்த ப்ளாட்ஃபாரத்தில் தான் டி-கிராஸ், புதிய தலைமுறை போலோ மற்றும் விர்டுஸ் மிட்-சைஸ் செடான் போன்ற ஃபோக்ஸ்வேகன் மாடல்கள் மட்டுமின்றி இந்நிறுவனத்தின் இந்திய கூட்டணி நிறிவனமான ஸ்கோடோவின் விஷன் இன் எஸ்யூவி மாடலும் டிசைனை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Volkswagen Nivus Based Sedan: What It Could Look Like
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X