டைகுன் காரின் அடிப்படையில் உருவாகும் ஃபோக்ஸ்வேகனின் புதிய நிவுஸ் எஸ்யூவி-கூபே மாடல்...

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், விரைவில் விற்பனைக்கு வரவுள்ள நிவுஸ் எஸ்யூவி-கூபே மாடலை பற்றிய முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. முதலில் தென் அமெரிக்காவிலும் அதனை தொடர்ந்து மற்ற நாட்டு சந்தைகளிலும் அறிமுகமாகவுள்ள இந்த எஸ்யூவி கார் இந்நிறுவனத்தின் டைகுன் எஸ்யூவி மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

டைகுன் காரின் அடிப்படையில் உருவாகும் ஃபோக்ஸ்வேகனின் புதிய நிவுஸ் எஸ்யூவி-கூபே மாடல்...

தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய காரை பற்றிய தகவல்களில் இந்த காரின் டிசைனை பற்றி சில வரிகள் குறிப்பிட்டுள்ளன. இந்த கார், எஸ்யூவி-கூபே ரகத்தில் வடிவமைக்கப்பட்டு வருவதால், பின்புறமாக மடங்கக்கூடிய ரூஃப்லைனை பெற்றிருக்கும். மேலும் ஃபோக்ஸ்வேகனின் புதிய லோகோவில் அறிமுகமாகும் முதல் மாடலாகவும் இந்த புதிய மாடல் விளங்கவுள்ளது.

டைகுன் காரின் அடிப்படையில் உருவாகும் ஃபோக்ஸ்வேகனின் புதிய நிவுஸ் எஸ்யூவி-கூபே மாடல்...

டைகுன் மாடலின் எம்க்யூபி ஏ0 ப்ளாட்ஃபாரத்தில் தான் இந்த புதிய எஸ்யூவி கார் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ப்ளாட்ஃபாரத்தில் டைகுன் மாடல் மட்டுமின்றி இந்நிறுவனத்தில் இருந்து சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற போலோ மற்றும் விர்டுஸ் செடான் கார்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் விர்டுஸ் செடான் கார் இந்தியாவில் இன்னும் சில ஆண்டுகளில் அறிமுகமாகவுள்ளது.

டைகுன் காரின் அடிப்படையில் உருவாகும் ஃபோக்ஸ்வேகனின் புதிய நிவுஸ் எஸ்யூவி-கூபே மாடல்...

ஃபோக்ஸ்வேகனின் புதிய நிவுஸ் எஸ்யூவி-கூபே கார் 4,266 மிமீ நீளம் கொண்டதாக இருக்கும். இந்த வகையில் இந்த கார் டைகுன் மாடலை விட சிறிது நீளம் அதிகம். எஸ்யூவி-கூபே ஸ்டைலை கொண்டிருந்தாலும் இதன் பூட் ஸ்பேஸ் 415 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.

டைகுன் காரின் அடிப்படையில் உருவாகும் ஃபோக்ஸ்வேகனின் புதிய நிவுஸ் எஸ்யூவி-கூபே மாடல்...

இதன் பரிமாண அளவுகளில் கவனிக்கத்தக்கதாக 2,566 மிமீ-ல் வீல்பேஸ் உள்ளது. இதனால் இந்த கார் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் போலோ மாடலுடன் வீல்பேஸ் அளவில் ஒத்து காணப்படும். அதேசமயம் இந்திய டைகுன் மாடலின் வீல்பேஸ் அளவு 2,651 மிமீ ஆக உள்ளது.

டைகுன் காரின் அடிப்படையில் உருவாகும் ஃபோக்ஸ்வேகனின் புதிய நிவுஸ் எஸ்யூவி-கூபே மாடல்...

இத்தகைய பரிமாண அளவுகளின்படி, போலோ எஸ்யூவி மாடலை விட மிகவும் கவர்ச்சிக்கரமான தோற்றத்தை பெறவுள்ள இந்த கார், 10 மிமீ உயரமான சஸ்பென்ஷன் ட்ராவல், யூனிக் சஸ்பென்ஷன் காலிப்ரேஷன், ஸ்டேபிளிட்டி கண்ட்ரோலை வழங்கக்கூடிய ஸ்டேரிங் சக்கரம் மற்றும் வேறுபட்ட எக்ஸ்டிஎஸ் லாக்கிங் உள்ளிட்டவற்றை சிறப்பான ட்ரைவிங் டைனாமிக்ஸிற்காக பெறவுள்ளது.

டைகுன் காரின் அடிப்படையில் உருவாகும் ஃபோக்ஸ்வேகனின் புதிய நிவுஸ் எஸ்யூவி-கூபே மாடல்...

ஆனால் டைகுன் மாடலின் அதே 177மிமீ க்ரவுண்ட் கிளியரென்ஸை தான் இந்த நிவுஸ் எஸ்யூவி மாடலில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்கியுள்ளது. இயக்க ஆற்றலுக்கு இந்த காரில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 128 பிஎச்பி பவர் வரையில் பெற முடியும்.

டைகுன் காரின் அடிப்படையில் உருவாகும் ஃபோக்ஸ்வேகனின் புதிய நிவுஸ் எஸ்யூவி-கூபே மாடல்...

இதே என்ஜின் அமைப்பும் தான் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்ற டி-க்ராஸ் மாடலிலும் பொருத்தப்பட்டு வருகிறது. ட்ரான்ஸ்மிஷன் அமைப்பை பொறுத்தவரையில், நிவுஸ் எஸ்யூவி மாடலை டி-க்ராஸ் மாடலை விட உயர்த்தி காட்டுவதற்காக இந்நிறுவனம் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லாமல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை மட்டும் தான் வழங்கவுள்ளது.

அதிக அளவில் தொழிற்நுட்ப வசதிகளை பெற்று வரவுள்ள இந்த காருக்கு குறைவான எண்ணிக்கையில் தான் வேரியண்ட் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. மேற்கூறப்பட்ட அம்சங்களுடன் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த எஸ்யூவி-கூபே மாடலில் புதிய 8.0 இன்ச் 'ப்ளே' இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை பொருத்தவுள்ளது.

டைகுன் காரின் அடிப்படையில் உருவாகும் ஃபோக்ஸ்வேகனின் புதிய நிவுஸ் எஸ்யூவி-கூபே மாடல்...

இந்த இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை அடுத்த வருடம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள டைகுன் எஸ்யூவி மாடலும் கொண்டிருக்கும். கூடுதலாக நிவுஸ் எஸ்யூவி-கூபே மாடலில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், அடாப்டிவ் ஆட்டோபைலட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி ப்ரேக்கிங் மற்றும் ஆட்டோமேட்டிக் போஸ்ட்-கொலிஷன் ப்ரேக்கிங் உள்ளிட்டவற்றையும் எதிர்பார்க்கலாம்.

மற்றப்படி புதிய நிவுஸ் எஸ்யூவி-கூபே மாடலின் இந்திய வருகை குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஸ்கோடா நிறுவனத்துடன் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏற்படுத்தி கொண்டுள்ள கூட்டணியின் 2.0 திட்டத்தில் விஷன்-இன் கான்செப்ட்டை அடிப்படையாக கொண்ட ஸ்கோடா வெர்சன் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார்கள் இந்திய சந்தைக்காக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

Most Read Articles
English summary
Volkswagen Taigun-based Nivus SUV partially revealed
Story first published: Thursday, April 16, 2020, 21:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X