ஃபோக்ஸ்வேகன் போலோ பிஎஸ்6 மாடலின் மைலேஜ் விபரம் வெளியானது!

பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு அண்மையில் வெளியிடப்பட்ட ஃபோக்ஸ்வேகன் போலோ பெட்ரோல் மாடலின் மைலேஜ் விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் மைலேஜ் விபரங்கள் வெளியானது!

இந்தியாவின் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக ஃபோக்ஸ்வேகன் போலோ இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்ட எஞ்சின் தேர்வுகளில் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் மைலேஜ் விபரங்கள் வெளியானது!

ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் நீக்கப்பட்டு புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், இந்த 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இரண்டு விதமான மாடல்களில் கிடைக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் மைலேஜ் விபரங்கள் வெளியானது!

அதாவது, சாதாரண 1.0 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 76 பிஎச்பி பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் மைலேஜ் விபரங்கள் வெளியானது!

மற்றொரு சக்திவாய்ந்த தேர்விலும் ஃபோக்ஸ்வேகன் போலோ பெட்ரோல் மாடல் கிடைக்கிறது. இந்த மாடலில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் மைலேஜ் விபரங்கள் வெளியானது!

இந்த நிலையில், இந்த பெட்ரோல் எஞ்சின்களின் மைலேஜ் விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி, ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் 1.0 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 17.75 கிமீ மைலேஜையும், டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக லிட்டருக்கு 18.24 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று அராய் சான்றளித்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் மைலேஜ் விபரங்கள் வெளியானது!

இந்த நிலையில், ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மாடல்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர் மனதில் மைலேஜ் என்பது மிக முக்கிய விஷயமாக இருக்கும். இதன்படி, ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் போட்டியாளர்கள் கூடுதல் மைலேஜை வழங்குவது தெரிய வருகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் மைலேஜ் விபரங்கள் வெளியானது!

இதன்படி, ஃபோர்டு ஃபிகோ காரின் பெட்ரோல் எஞ்சின் 96 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் லிட்டருக்கு 20.4 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் மைலேஜ் விபரங்கள் வெளியானது!

மறுபுறத்தில் அதிகம் விற்பனையாகும் மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 21.21 கிமீ மைலேஜையும் வழங்கும். ஸ்விஃப்ட் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் மைலேஜ் விபரங்கள் வெளியானது!

இந்த நிலையில், கட்டுமானம், டிசைன், வசதிகள் ஆகியவற்றில் மிகச் சிறந்த தேர்வாக தன்னை தொடர்ந்து முன்னிலைப்படுத்திக் கொள்கிறது ஃபோக்ஸ்வேகன் போலோ கார். இந்த கார் ரூ.5.83 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கிறது.

Most Read Articles
English summary
Volkswagen has revealed the mileage figures of their recently updated Polo hatchback in the Indian market. The new Volkswagen Polo was updated recently to make it compliant with the new stringent BS6 emission norms in the country. The 2020 Volkswagen Polo is offered with a starting price of Rs 5.83 lakh, ex-showroom (Delhi).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X