மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் இருந்து வெளியேறுவதாக ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு!

சர்வதேச அளவில் கார் பந்தய துறையில் இருந்து வெளியேறுவதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் படிக்கலாம்.

மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் இருந்து வெளியேறுவதாக ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு!

ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் செயல்பட்டு வருகிறது. பல்வேறு வகை கார் பந்தயங்களிலும் பல முறை சாம்பியன் பட்டத்தை ஃபோக்ஸ்வேகன் மோட்டார்ஸ்போர்ட்ஸ் பிரிவு பெற்றிருக்கிறது.

மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் இருந்து வெளியேறுவதாக ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு!

ஃபோக்ஸ்வேகன் மோட்டார்ஸ்போர்ட் பிரிவு இதுவரை 4 முறை ராலி வேர்ல்டு சாம்பியன் பட்டங்களையும், 3 முறை ராலிக்ராஸ் வேர்ல்டு சாம்பியன் பட்டங்களையும், 3 முறை டக்கார் ராலி பந்தயங்களிலும் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது.

மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் இருந்து வெளியேறுவதாக ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு!

இந்த நிலையில், மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையிலிருந்து விலகுவதாக ஃபோக்ஸ்வேகன் குழுமம் திடீரென அறிவித்துள்ளது. இதுவரை மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறைக்கு செய்து வந்த முதலீடுகளை மின்சார கார் தயாரிப்புக்கு மாற்றம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் இருந்து வெளியேறுவதாக ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு!

ஜெர்மனியிலுள்ள ஹேன்ஓவர் என்ற இடத்தை தலைமையிடமாக கொண்டு ஃபோக்ஸ்வேகன் மோட்டார்ஸ்போர்ட் பிரிவு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், அதில் பணிபுரிந்த வந்த 169 பணியாளர்கள் வோல்ஸ்பர்க் நகரில் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமையிடத்திற்கு மாற்றப்பட உள்ளனர்.

மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் இருந்து வெளியேறுவதாக ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு!

பைக்ஸ் பீக் பந்தயத்தில் அசத்திய ஃபோக்ஸ்வேகன் மோட்டார்ஸ்போர்ட் பிரிவின் ஐ.டி.ஆர் என்ற மின்சார பந்தய கார் மாடலை ஹேன்ஓவர் மோட்டார் பந்தய துறை பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள்தான் உருவாக்கினர்.

மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் இருந்து வெளியேறுவதாக ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு!

இந்த நிலையில், ஐ.டி.ஆர் மின்சார பந்தய கார் மாடலின் தொழில்நுட்பங்களை எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்கான திட்டத்தையும் வகுத்துள்ளது. இந்த பந்தய கார் குறித்த மோட்டார்ஸ்போர்ட் பணியாளர்கள் உருவாக்கிய தொழில்நுட்பங்களை தனது எதிர்கால மின்சார கார்களில் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றும் ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் இருந்து வெளியேறுவதாக ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு!

அதேபோன்று, ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ ஆர்5 பந்தய கார் உருவாக்கப் பணிகள் இந்த ஆண்டுடன் முடிவுக்கு வர இருக்கிறது. அதேநேரத்தில், போலோ ஜிடிஐ ஆர் மற்றும் கோல்ஃப் ஜிடிஐ டிசிஆர் ஆகிய பந்தய கார்களுக்கான உதிரிபாகங்கள் தொடர்ந்து சப்ளை செய்யப்படும் என்று ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் இருந்து வெளியேறுவதாக ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு!

மோட்டார்ஸ்போர்ட் துறையிலிருந்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விலகுவது கார் பந்தய ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும், மோட்டார்ஸ்போர்ட் பந்தய துறைக்கான முதலீடுகளை முழுமையாக எலெக்ட்ரிக் கார் தயாரிப்புத் துறைக்கு பயன்படுத்திக் கொள்வதற்கு ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

English summary
Volkswagen has announced that the company decided to exit from international motorsports activities and it will focus on electric cars development process.
Story first published: Monday, December 7, 2020, 13:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X