ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் ரேஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்... அப்பப்பா, என்னா பவர் தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் அதிசெயல்திறன் மிக்க ரேஸ் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமகம் செய்யப்பட்டுள்ளது. அதிசெயல்திறன் மிக்க இந்த போலோ ரேஸ் கார் குறித்த பல முக்கிய தகவல்களையும், படங்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ ரேஸ் இந்தியாவில் அறிமுகம்!

இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும், மோட்டார் பந்தயத்தை நேரடியாக நடத்தி வரும் கார் நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. இந்தியா மற்றும் அண்டை நாடுகளை சேர்ந்த இளம் மோட்டார் பந்தய வீரர்களை இனம் கண்டு அவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கி, சர்வதேச அளவிலான மோட்டார் பந்தயங்களில் பங்கு கொள்வதற்கான வாய்ப்பை ஃபோக்ஸ்வேகன் மோட்டார்ஸ்போர்ட் பிரிவு ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ரேஸ் இந்தியாவில் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் ஒன் மேக் சீரிஸ் என்ற கார் பந்தயத்தை நடத்தி வருகிறது. அதாவது, ஒரே நிறுவனத்தின் ஒரே கார் மாடலை அனைத்து பந்தய வீரர்களும் பயன்படுத்தி போட்டியிடுவது இந்த ஒன் மேக் சீரிஸ் பந்தயமாக குறிப்பிடப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ரேஸ் இந்தியாவில் அறிமுகம்!

அந்த வகையில், போலோ ரேஸ் கார்களை பயன்படுத்தி வீரர்கள் போட்டியிடுவதற்கான ஒன் மேக் சீரிஸ் பந்தயத்தை ஃபோக்ஸ்வேகன் நடத்தி வருகிறது. இந்த நிலையில், 11வது ஒன் மேக் சீரிஸ் கார் பந்தயத்திற்காக போலோ காரின் புதிய ரேஸ் மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து அறிமுகம் செய்துள்ளது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ ரேஸ் இந்தியாவில் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் ரேஸ் போலோ என்ற பெயரில் இந்த புதிய பந்தய கார் குறிப்பிடப்படுகிறது. தற்போது ஒன் மேக் சீரிஸ் பந்தயத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஃபோக்ஸ்வேகன் அமியோ ரேஸ் காருக்கு மாற்றாக இந்த புதிய ரேஸ் போலோ கார் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபோக்ஸ்வேகன் போலோ ரேஸ் இந்தியாவில் அறிமுகம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் ரேஸ் போலோ காரில் 1.8 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 210 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. அமியோ காரில் இருந்த அதே எஞ்சின்தான் என்றாலும், 5 எச்பி கூடுதல் பவரை வெளிப்படுத்தும் விதத்தில் மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ரேஸ் இந்தியாவில் அறிமுகம்!

இந்த காரில் 6 ஸ்பீடு சீக்குவென்ஷியல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சின் சக்தி முன்சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது. இந்த காரில் புஷ் டு பாஸ் என்ற விசேஷ பூஸ்ட் பவர் மோடு வழங்கப்பட்டுள்ளது. ஓவர்டேக் செய்யும்போது அல்லது தேவைப்படும் நேரத்தில் இந்த பூஸ்ட் மோடு பயன்படுத்தினால், உடனடியாக 20 எச்பி கூடுதல் பவரை எஞ்சின் வெளிப்படுத்தும். இது மிக முக்கிய அம்சமாக குறிப்பிடலாம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ ரேஸ் இந்தியாவில் அறிமுகம்!

அதேபோன்று, இந்த காரின் ரோல்கேஜ் மற்றும் கார் எஞ்சின் இயக்க தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த புதிய ரேஸ் போலோ கார் வீரர்களுக்கு புதிய ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும்.

ஃபோக்ஸ்வேகன் போலோ ரேஸ் இந்தியாவில் அறிமுகம்!

சர்வதேச அரங்கில் வீரர்கள் செல்வதற்கான வாய்ப்பை இந்த புதிய ரேஸ் போலோ கார் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 11வது ஃபோக்ஸ்வேகன் ஒன் மேக் சீரிஸ் பந்தயத்திற்கான வீரர்கள் தேர்வு தீவிரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
German car maker, Volkswagen has unveiled Race Polo car at Auto Expo.
Story first published: Friday, February 7, 2020, 16:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X