ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம்

கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக வர இருக்கும் புதிய ஃபோகக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி தீபாவளி தினத்தில் காட்சி தந்து இந்தியர்களின் எதிர்பார்ப்பை ஆவலை எகிற வைத்துள்ளது.

தீபாவளியில் இந்தியர்களுக்கு காட்சி தந்த புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி!

இந்திய கார் சந்தையில் மிக முக்கிய இடத்தை பிடிக்கும் விதமாக புரொஜெக்ட் 2.0 என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த புதிய திட்டத்தின் கீழ் பல புதிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. குறிப்பாக, பல எஸ்யூவி மாடல்களை களமிறக்க உள்ளது.

தீபாவளியில் இந்தியர்களுக்கு காட்சி தந்த புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி!

இதில், கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிகளுக்கு நிகரான ஒரு புதிய எஸ்யூவி மாடலையும் ஃபோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்த உள்ளது. டைகுன் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய எஸ்யூவி மாடலை மீண்டும் இந்தியர்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது ஃபோக்ஸ்வேகன்.

தீபாவளியில் இந்தியர்களுக்கு காட்சி தந்த புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி!

இந்த எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் சில முக்கிய விஷயங்கள் குறித்தும் சூசகமாக தெரிவித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் எம்க்யூபி A0 பிளாட்ஃபார்மில் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

தீபாவளியில் இந்தியர்களுக்கு காட்சி தந்த புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி!

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியில் டிஎஸ்ஐ டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது என்று ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. இதனுடன் மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

தீபாவளியில் இந்தியர்களுக்கு காட்சி தந்த புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி!

மேலும், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல் உள்ளிட்ட அம்சங்களுடன் வர இருக்கிறது.

தீபாவளியில் இந்தியர்களுக்கு காட்சி தந்த புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி!

இந்த எஸ்யூவி அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட மாடல்களுக்கு நேரடி போட்டியாக வர இருக்கிறது. டிசைனிலும், தொழில்நுட்ப வசதிகளிலும் இந்தியர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Volkswagen has revealed some key things of its all new Taigun SUV, it is slated to launch second half next year.
Story first published: Saturday, November 14, 2020, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X