இந்திய விற்பனை கார்களின் ஷோரூம் விலைகளை திருத்தியமைத்தது ஃபோக்ஸ்வேகன்... சலுகைகளும் அறிவிப்பு

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டி-ராக் மாடலை தவிர்த்து மற்ற அனைத்தின் விற்பனை கார்களின் எக்ஸ்ஷோரூம் விலைகளை திருத்தியமைத்துள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய விற்பனை கார்களின் ஷோரூம் விலைகளை திருத்தியமைத்தது ஃபோக்ஸ்வேகன்... சலுகைகளும் அறிவிப்பு

உலகளவில் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக இருக்கும் ஃபோக்ஸ்வேகன் கடந்த மார்ச் மாதத்தில், கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன் படு பிசியாக செயல்பட்டு வந்தது.

இந்திய விற்பனை கார்களின் ஷோரூம் விலைகளை திருத்தியமைத்தது ஃபோக்ஸ்வேகன்... சலுகைகளும் அறிவிப்பு

ஏனெனில் அப்போதுதான் போலோ மற்றும் வெண்டோ கார்களின் புதிய 1.0 லிட்டர் டிஎஸ்ஐ வெர்சன்களை அறிமுகப்படுத்தி இருந்தது. இவை மட்டுமின்றி டிகுவான் ஆல்ஸ்பேஸ் மற்றும் டி-ராக் உள்ளிட்ட எஸ்யூவிகளையும் ஃபோக்ஸ்வேகன் இந்திய சந்தைக்கு கொண்டுவந்தது.

இந்திய விற்பனை கார்களின் ஷோரூம் விலைகளை திருத்தியமைத்தது ஃபோக்ஸ்வேகன்... சலுகைகளும் அறிவிப்பு

இதற்கிடையில் தற்போது திருத்தியமைக்கப்பட்ட விலைகளின்படி இந்நிறுவனத்தின் போலோ ரூ.8,000 வரையில் விலை உயர்வை பெற்றுள்ளது. போலோவில் தயாரிப்பு நிறுவனம் முன்னதாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் டாப் வேரியண்ட்டாக ஹைலைன் ப்ளஸ்-ஐ கொண்டுவந்திருந்தது.

இந்திய விற்பனை கார்களின் ஷோரூம் விலைகளை திருத்தியமைத்தது ஃபோக்ஸ்வேகன்... சலுகைகளும் அறிவிப்பு
Polo 1.0 MPI Old Prices New Prices Difference
Trendline (non-metallic) ₹5.82 lakh ₹5.87 lakh +₹5,000
Comfortline (non-metallic) ₹6.76 lakh ₹6.82 lakh +₹6,000
Polo 1.0 TSI
Highline Plus MT ₹8.02 lakh ₹8.08 lakh +₹6,000
Highline Plus AT ₹9.12 lakh - -
GT AT ₹9.59 lakh ₹9.67 lakh +₹8,000

ஆனால் இந்த டாப் வேரியண்ட்டின் விற்பனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த ஹேட்ச்பேக் மாடலின் டாப் வேரியண்ட்டாக 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படும் ஜிடி வேரியண்ட் உருவெடுத்துள்ளது.

இந்திய விற்பனை கார்களின் ஷோரூம் விலைகளை திருத்தியமைத்தது ஃபோக்ஸ்வேகன்... சலுகைகளும் அறிவிப்பு

போலோவை போன்று ஃபோக்ஸ்வேகன் வெண்டோவின் வேரியண்ட்களின் விலைகளும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் டாப் வேரியண்ட்டான ஹைலைன் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் விலை ரூ.30,000 வரையில் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.13 லட்சத்திற்கு உள்ளே வந்துள்ளது.

Vento Old Prices New Prices Difference
Trendline (non-metallic) ₹8.86 lakh ₹8.93 lakh +₹7,000
Comfortline (non-metallic) ₹9.99 lakh ₹9.99 lakh No difference
Highline MT ₹9.99 lakh ₹9.99 lakh No difference
Highline AT ₹12.09 lakh - -
Highline Plus MT ₹11.99 lakh ₹12.08 lakh +₹ 9,000
Highline Plus AT ₹13.29 lakh ₹12.99 lakh -₹30,000
இந்திய விற்பனை கார்களின் ஷோரூம் விலைகளை திருத்தியமைத்தது ஃபோக்ஸ்வேகன்... சலுகைகளும் அறிவிப்பு

அதேநேரம் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படும் ஹைலைன் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் போலோ மற்றும் வெண்டோ கார்களுக்கு இந்த செப்டம்பர் மாதத்திற்கான சில சலுகைகளையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்திய விற்பனை கார்களின் ஷோரூம் விலைகளை திருத்தியமைத்தது ஃபோக்ஸ்வேகன்... சலுகைகளும் அறிவிப்பு
Polo 1.0 MPI Revised Price

Offer Price

Difference
Trendline (non-metallic) ₹5.87 lakh ₹5.59 lakh -₹28,000
Comfortline (non-metallic) ₹6.82 lakh ₹6.59 lakh -₹23,000
Polo 1.0 TSI
Highline Plus MT ₹8.08 lakh ₹7.89 lakh -₹19,000
Vento
Comfortline (non-metallic) ₹9.99 lakh ₹8.39 lakh -₹1.60 lakh
ghline Plus MT ₹12.08 lakh ₹10.99 lakh -₹1.09 lakh

இதன்படி இந்த மாதத்தில் போலோவை வாங்கினால் ரூ.28,000 வரையிலான தள்ளுபடியையும், வெண்டோவை வாங்கினால் சுமார் ரூ.1.60 லட்சம் வரையிலான தள்ளுபடிகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

இந்திய விற்பனை கார்களின் ஷோரூம் விலைகளை திருத்தியமைத்தது ஃபோக்ஸ்வேகன்... சலுகைகளும் அறிவிப்பு

டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரை பொறுத்தவரையில், ஏற்கனவே கூறியது இந்த எஸ்யூவி கடந்த மார்ச் மாதத்தில் ஒரே ஒரு 4மோஷன் வேரியண்ட் உடன் சந்தைக்கு கொண்டுவரப்பட்டது. ரூ.33.12 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையுடன் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த காரின் விலையில் ரூ.12 ஆயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய விற்பனை கார்களின் ஷோரூம் விலைகளை திருத்தியமைத்தது ஃபோக்ஸ்வேகன்... சலுகைகளும் அறிவிப்பு
Tiguan Allspace Old Price

New Price

Difference
4Motion ₹33.12 lakh ₹33.24 lakh +₹12,000

இதனால் இதன் எக்ஸ்ஷோரூம் விலை தற்போது ரூ.33.24 லட்சமாக மாறியுள்ளது. ஃபோக்ஸ்வேகன் போலோவிற்கு போட்டியாக சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ/டொயோட்டா க்ளான்ஸா, ஹூண்டாய் எலைட் ஐ20, டாடா அல்ட்ரோஸ் மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்டவை உள்ளன.

இந்திய விற்பனை கார்களின் ஷோரூம் விலைகளை திருத்தியமைத்தது ஃபோக்ஸ்வேகன்... சலுகைகளும் அறிவிப்பு

அதேநேரம் செடான் ரக மாடலான வெண்டோவிற்கு விற்பனையில் போட்டியளிக்க ஹூண்டாய் வெர்னா, மாருதி சுஸுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ரேபிட் மற்றும் டொயோட்டா யாரிஸ் உள்ளிட்டவை உள்ளன. ஃபோக்ஸ்வேகனின் புதிய 7-இருக்கை எஸ்யூவி, டிகுவான் ஆல்ஸ்பேஸிற்கு டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டேவியர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 போன்றவை போட்டியாக உள்ளன.

Most Read Articles

English summary
Volkswagen Polo, Vento And Tiguan Allspace Prices Revised; Up to Rs 1.60 Lakh Off On Polo And Vento This September [4 Table Codes]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X