ஸ்டைலான ப்ளாக் எடிசனை பெற்ற ஃபோக்ஸ்வேகன் டி-ராக்... காரை பற்றிய முழுவிபரம் உள்ளே...

ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடலின் ப்ளாக் எடிசன் சில கருப்பு நிற ட்ரிம் துண்டுகள் மற்றும் கூடுதலான உட்புற வசதிகளுடன் ஐரோப்பா உள்பட சில சர்வதேச நாட்டு சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டி-ராக் மாடலின் எஸ்இ வேரியண்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய எடிசன் காரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்டைலான ப்ளாக் எடிசனை பெற்ற ஃபோக்ஸ்வேகன் டி-ராக்... காரை பற்றிய முழுவிபரம் உள்ளே...

புதிய டி-ராக் ப்ளாக் எடிசனின் விலை ஐரோப்பிய சந்தையில் 23,750 யூரோவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.19.62 லட்சமாகும். ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடல் தற்சமயம் இந்திய சந்தையில் ரூ.19.99 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்டைலான ப்ளாக் எடிசனை பெற்ற ஃபோக்ஸ்வேகன் டி-ராக்... காரை பற்றிய முழுவிபரம் உள்ளே...

டி-ராக்கின் இந்த புதிய வெர்சனின் வெளிப்புறத்தில் முன்புற க்ரில், பின்புற தனியுரிமை கண்ணாடி மற்றும் 18-இன்ச் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் இந்த மாடலில் ஏற்கனவே எல்இடி தரத்தில் ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

MOST READ: மழைகாலங்களில் நீரினால் வாகனங்கள் பாதிப்படையாமல் தடுப்பது எப்படி..? எளிய முறைகள் இதோ...

ஸ்டைலான ப்ளாக் எடிசனை பெற்ற ஃபோக்ஸ்வேகன் டி-ராக்... காரை பற்றிய முழுவிபரம் உள்ளே...

உட்புறத்திலும் இந்த புதிய எடிசன் டேஸ்போர்டு, ரூஃப்லைன் மற்றும் பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம் போன்றவற்றையும் கருப்பு நிறத்தில் பெற்றுள்ளது. மொத்த கேபினும் க்ரே நிறத்தில் ஜொலிக்கிறது.

ஸ்டைலான ப்ளாக் எடிசனை பெற்ற ஃபோக்ஸ்வேகன் டி-ராக்... காரை பற்றிய முழுவிபரம் உள்ளே...

தொழிற்நுட்ப வசதிகளாக இந்த காரில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஸ்மார்ட்போனை இணைக்க ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகள் உள்ளன. பாதுகாப்பு வசதிகள் வழக்கமான டி-ராக் மாடலில் இருந்து அப்படியே தொடர்ந்துள்ளன.

ஸ்டைலான ப்ளாக் எடிசனை பெற்ற ஃபோக்ஸ்வேகன் டி-ராக்... காரை பற்றிய முழுவிபரம் உள்ளே...

டி-ராக் மாடலுக்கு யூரோ என்சிஏபி அமைப்பு பயணிகளின் பாதுகாப்பில் 5 நட்சத்திரங்களை வழங்கியிருந்ததை நிச்சயம் இங்கு குறிப்பிட வேண்டும். மேற்கூறப்பட்ட அம்சங்களுடன் லெதர் அமைப்பு மற்றும் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன் தொகுப்பையும் இந்த புதிய எடிசன் கூடுதல் தேர்வாக பெற்றுள்ளது.

ஸ்டைலான ப்ளாக் எடிசனை பெற்ற ஃபோக்ஸ்வேகன் டி-ராக்... காரை பற்றிய முழுவிபரம் உள்ளே...

டி-ராக் ப்ளாக் எடிசனுக்கு முன்-வீல்-ட்ரைவ் சிஸ்டத்துடன் அதிகளவில் என்ஜின் தேர்வுகளை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்கியுள்ளது. இதில் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல், 1.6 லிட்டர் டர்போ-டீசல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ-டீசல் உள்ளிட்டவை அடங்குகின்றன.

ஸ்டைலான ப்ளாக் எடிசனை பெற்ற ஃபோக்ஸ்வேகன் டி-ராக்... காரை பற்றிய முழுவிபரம் உள்ளே...

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் டி-ராக் மாடலுக்கு குர்குமா மஞ்சள்+ப்ளாக் ரூஃப், எனர்ஜெடிக் ஆரஞ்ச்+ப்ளாக் ரூஃப், ப்யூர் வொய்ட்+ப்ளாக் ரூஃப், ரவீனா ப்ளூ+ப்ளாக் ரூஃப், டீப் ப்ளாக் பேர்ல் மற்றும் இண்டியம் க்ரே+ப்ளாக் ரூஃப் உள்ளிட்ட நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Volkswagen T-Roc Gets A Stylish Black Edition
Story first published: Tuesday, May 26, 2020, 0:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X