புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு இந்தியாவில் சிறப்பான புக்கிங்!

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு சிறப்பான முன்பதிவுடன் நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு இந்தியாவில் சிறப்பான புக்கிங்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் பல புதிய எஸ்யூவி மாடல்களை வரிசை கட்ட உள்ளது. கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த எஸ்யூவி மாடல்களை ஃபோக்ஸ்வேகன் காட்சிப்படுத்தி இருந்தது. இதில், ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு இந்தியாவில் சிறப்பான புக்கிங்!

அடுத்த மாடலாக டி ராக் என்ற மிட்சைஸ் பிரிமீயம் எஸ்யூவியானது வரும் 18ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு அண்மையில் முன்பதிவு துவங்கப்பட்டது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு இந்தியாவில் சிறப்பான புக்கிங்!

இந்த நிலையில், இதுவரை 300 பேர் இந்த புதிய எஸ்யூவிக்கு முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த எண்ணிக்கையானது விலை அறிவிக்கப்பட்ட பின்னர் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு இந்தியாவில் சிறப்பான புக்கிங்!

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியானது பெட்ரோல் மாடலில் மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவியில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ எவோ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 147 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு இந்தியாவில் சிறப்பான புக்கிங்!

இந்த எஸ்யூவியின் பெட்ரோல் எஞ்சின் விசேஷமான ஆக்டிவ் சிலிண்டர் தொழில்நுட்பத்துடன் வர இருக்கிறது. ஓட்டுதல் நிலையை பொறுத்து, தேவைப்படாத நேரத்தில் நான்கு சிலிண்டர்களில் இரண்டு சிலிண்டர்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்கும் விசேஷ தொழில்நுட்பத்தை பெற்றிருக்கும். இதன்மூலமாக, அதிக எரிபொருள் சிக்கனம், குறைவான மாசு உமிழ்வு திறனுடன் வருகிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு இந்தியாவில் சிறப்பான புக்கிங்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியானது 0 - 100 கிமீ வேகத்தை 8.4 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 205 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு இந்தியாவில் சிறப்பான புக்கிங்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியில் குர்குமா யெல்லோ, பியூர் ஒயிட், ரவென்ட்டோ புளூ, எனர்ஜெட்டிக் ஆரஞ்ச், இண்டியம் க்ரே, டீம் பிளாக் பியர்ல் என 6 விதமான வண்ணத் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. இதில், டீப் பிளாக் பியர்ல் மட்டும் ஒற்றை வண்ண தேர்வாகவும், மீதமுள்ள 5 வண்ணத் தேர்வுகளும் இரட்டை வண்ணத்திலும் கிடைக்கும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு இந்தியாவில் சிறப்பான புக்கிங்!

இந்த காருக்கு கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வாய்ப்பை ஃபோக்ஸ்வேகன் வழங்க உள்ளது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு இந்தியாவில் சிறப்பான புக்கிங்!

ரூ.17 லட்சம் முதல் ரூ.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஹாரியர், ஹூண்டாய் டூஸான், ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: Auto NDTV

Most Read Articles

English summary
According to report, Volkswagen has recieved 300 pre bookings for the T-Roc SUV ahead of its launch in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X