300 பிஎச்பி பவரில் புதிய எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..

குறைவான எண்ணிக்கையில் இந்திய சந்தைக்காக ஒதுக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடல் மிக விரைவாகவே விற்று தீர்க்கப்பட்ட நிலையில் தற்போது ஃபோக்ஸ்வேகன் டி-ராக் ஆர் என்ற அதிக ஆற்றல் கொண்ட சிறிய அளவிலான எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

300 பிஎச்பி பவரில் புதிய எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில் ஃபோக்ஸ்வேகன் டி-ராக் ஆர் மாடல் இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டி-ராக் ஜிடி என்ற பெயரில் அறிமுகமாகலாம் என கூறப்பட்டுள்ளது. ஏனெனில் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெயருக்கு பின்னால் ஜிடி என்ற வார்த்தை கொண்ட சில கார்கள் வரவேற்பை பெற்றுள்ளன.

300 பிஎச்பி பவரில் புதிய எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..

ஃபோக்ஸ்வேகன் டி-ராக் ஆர் மாடலில் முக்கிய சிறப்பம்சமாக இதில் பொருத்தப்படவுள்ள 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் பார்க்கப்படுகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 5,000 ஆர்பிஎம்-ல் 300 பிஎச்பி பவரையும், 2,000-2,500 ஆர்பிஎம்-ல் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது.

MOST READ: கொரோனாவால் மட்டுமில்ல பசியாலும் மக்கள் தவிக்க கூடாது.. ஏழைகளுக்கு உதவும் இரு பெரிய நிறுவனங்கள்...

300 பிஎச்பி பவரில் புதிய எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..

இந்த என்ஜின், 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் 4 மோஷன் ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டம் உள்ளிட்டவற்றுடன் இயங்கும். காரின் இயக்க ஆற்றலை அறிந்து காரின் வேகத்தை சரியான விகிதத்தில் குறைக்க ஆற்றல்மிக்க 17-இன்ச் ப்ரேக் சிஸ்டம் பொருத்தப்படவுள்ளது.

300 பிஎச்பி பவரில் புதிய எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..

ஃபோக்ஸ்வேகன் டி-ராக் ஆர் மாடலினால் 0-விலிருந்து 100 kmph என்ற வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் அடைந்துவிடும். இதன் அதிகப்பட்ச வேகம் 250kmph ஆகும். இந்த அதிகப்பட்ச வேகத்தை அதிகரிப்பதற்கு எந்த தேர்வும் இல்லை என்றாலும் நமது இந்திய சாலைகளுக்கு இந்த வேகமே போதுமானது.

MOST READ: இந்தியாவின் அதிக பாதுகாப்பான கார்கள் இவைதான்.. ரூ.10லட்சம் விலையில் கிடைக்கும் வாகனங்களின் பட்டியல்!

300 பிஎச்பி பவரில் புதிய எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..

ஃபோக்ஸ்வேகன் டி-ராக் ஆர் மாடல் அடாப்டிவ் சேசிஸ் கண்ட்ரோல் தேர்வை சர்வதேச சந்தையில் கொண்டுள்ளது. ஆனால் இது இதன் இந்திய வெர்சனில் வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் ஸ்கோடாவின் ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடல் இந்தியாவில் அடாப்டிவ் சஸ்பென்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் இல்லாமல் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

300 பிஎச்பி பவரில் புதிய எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..

ஃபோக்ஸ்வேகனின் டி-ராக் ஆர் காரில் ரன்னிங் கியர் நார்மல், ஸ்போர்டி மற்றும் கண்ட்ரோல் சிஸ்டம் என கட்டமைக்கப்பட்டுள்ளது. தேர்வு கியரை பொறுத்து எலக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் டேம்பிங் மற்றும் ஸ்டேரிங் சக்கரம் தன்னிச்சையாக அடாப்ட் ஆகிவிடும்.

MOST READ: எம்பிவி கார்கள் விற்பனையில் பொலிரோவை முந்தி முதலிடத்தை பிடித்த மாருதி எர்டிகா..!

300 பிஎச்பி பவரில் புதிய எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்..

ஜெர்மனியில் டி-ராக் ஆர் மாடலின் விலை 43,995 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.36,36,900) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய எக்ஸ்ஷோரூமில் இதன் விலையை ரூ.30 லட்சத்திற்கு அதிகமாக எதிர்பார்க்கலாம். இதன் இந்திய அறிமுகம் அடுத்த ஆண்டில் இருக்கும் என தெரிகிறது.

Most Read Articles

English summary
High-Performance Volkswagen T-Roc GT Planned For India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X